"ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.''”

"ஆமாம்பா, பத்துநாள் இடைவெளியில் மெஹா அதிரடியா இருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, கடந்த 31ஆம் தேதி 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தது தமிழக அரசு. அடுத்த அதிரடியாக 9ஆம் தேதி 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மாற்றல் உத்தரவைப் போட்டு, ஆட்சித் துறையில் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பையும் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது அரசு. இதன்மூலம் முதல்வர் ஸ்டாலின், நிர்வாகத்தில் புதிய ரத்த ஓட்டத்தை உருவாக்க முனைகிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். பொதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இதுபோன்ற டிரான்ஸ்பர் ஆர்டர்களை ஆங்கிலத்தில்தான் வெளியிடுவார்கள். ஆனால் இந்தமுறை இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றல் உத்தரவை தமிழில் வெளியிட்டு புரட்சியை நடத்தியிருக்கிறது தமிழக அரசு. இது, தமிழார்வமுள்ள அதிகாரிகள் மத்தியிலும், தமிழறிஞர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தின் தமிழார்வம் இருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலகத் தரப்பினர்.''”

"இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தகுதியுள்ள சீனியர் அதிகாரி கள் பலரும் தலைமைச் செயலகத்துக்கு வெளியே இருந் தார்கள். இது எதிர்மறை விமர்சனத்தை எழுப்பிவந்த நிலையில், இப்போது அவர்களில் சிலரைக் கோட் டைக்குள் செக்ரட்டரிகளாகக் கொண்டு வந்திருக்கிறது இந்த மாற்றம். இது, நேர் மறையாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், கோபால், செந்தில்குமார், டாக்டர் ராதாகிருஷ்ணன், மங்கத்ராம் சர்மா, சத்ய பிரதா சாஹூ, சுப்ரியா சாகு, அண்ணாதுரை, மதுமதி, சந்திரமோகன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்புதான் மாற்றப்பட்டனர். அவர்களை மீண்டும் இப்போது வெவ்வேறு பதவிகளுக்கு மாற்றியுள்ளனர். குறிப்பிட்ட சில அதிகாரி களை தொடர்ச்சியாக 4 மாதங்கள் கூட ஒரே இடத்தில் பணிபுரிய அனுமதிக்காதபடி இந்த டிரான்ஸ்பர் உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக டம்மி போஸ் டிங்கிலேயே பல பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி களை உட்கார வைத்திருக்கிறார்கள். அதேபோல பவர்ஃபுல் கோட்டை அதிகாரிகளின் நட்பு வளையத்தில் இருப்பவர்கள் மட்டும், நீண்ட காலமாக வளமான பதவிகளில் இருந்து வருகின்றனர். இது சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"ஈரோடு கிழக்கில் கிடைத்த அடியால் நாம் தமிழர் சீமான் புலம்பிக்கொண்டி ருக்கிறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, சீமானின் நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட்டைக் கூட வாங்க முடியாமல் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. தி.மு.க.வுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகள் நிற்காததால், அவர்களின் வாக்கைத் தங்கள் கட்சிக்குப் போடும்படி சீக்ரெட் டீலிங்குகளையெல்லாம் சீமான் நடத்தினார். இதன் பயனாக, கடந்த தேர்தலை விடவும் 11 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக நாம் தமிழர் கட்சி இப்போது வாங்கியிருக்கிறது. இதில் பா.ஜ.க.வின் ஓட்டுக்கள் 6 ஆயிரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதாம். அதேபோல் அ.தி.மு.க.வின் 2,500 வாக்குகளும் இவர்களுக்கு விழுந்திருக்கிறது என்கிறார்கள். அதோடு தே.மு.தி.க.வின் சொற்ப வாக்குகளும் அவர்கள் கணக்கில் விழுந் திருக்கிறதாம்,. இப்படி அங்குமிங்குமாக நாம் தமிழர் கட்சி வாக்கு களை வாங்கிய போதும், நோட்டா வுக்கு கணிசமாக ஓட்டுக்கள் சென்றதை சீமான் எதிர்பார்க்க வில்லை. இதனால்தான் தங்களுக்கு டெபாசிட் போய்விட்டது என்று ரொம்பவே புலம்பு கிறாராம் சீமான்.''”

"சீமான் கைது பயத்திலும் இருக் கிறாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, பெரியாரைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசி தமிழக மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கும் சீமான் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர் எல்லை மீறிப் பேசியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகனே கண்டித்திருக்கிறார். பெரியாரைப் பற்றி கீழ்த்தரமாகப் பேசிய தோடு, நாங்கள் வெடிகுண்டுகளை வீசுவோம் என்றும் சட்டம் ஒழுங்குக்கு சவால் விட்டும் அவர் அடாவடியாகப் பேசியிருப்ப தால், அவர் மீது காவல்துறை கடும் எரிச்சலில் இருக்கிறது. எனவே சீமானின் நாக்குத் திமிரை அடக்க, அவர்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது போலீஸ். அதேபோல் பெரியார் தி.க. தொண்டர்களைத் தாக்கிய வழக்கில், சீமான் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் சிக்கிக்கொண்டிருக்கிறார். இப்படி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரும் வழக்குகளில் சிக்கி யிருப்பதால், தங்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்கிற பயத்தில் இருக் கிறாராம் சீமான்.''”

ss

Advertisment

"புதிய மாநிலத் தலைவரைத் தேர்வு செய்யும் தருணத்தை அடைந் திருக்கிறதே தமிழக பா.ஜ.க.?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க இருக்கிறது அதன் டெல்லி தலைமை. அதற்கான ரேஸில் நிதின் கட்கரியின் ஆதரவோடு நயினார் நாகேந்திரன் ஓடிக்கொண்டிருக்கிறார். அதேபோல ஆர்.எஸ். எஸ். ஆதரவோடு ஹெச்.ராஜாவும் தடதடக்கிறார். இவர்களுக்கிடையில் சில சீனியர்களின் பரிந்துரையோடு பொன்னாரும் ஓட்டத்தில் இருக்கிறார். இதற்கிடையே சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் போன்ற தேசிய பார்வையா ளர்கள் ஒருங்கிணைந்து, தற்போதைய பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி மீது, தகுதியற்றவர் என்று தேசியத் தலைமையிடம் புகார் தெரிவித் திருக்கிறார்களாம். மேலும், மாநிலத் தலைவரின் நெருங்கிய நட்பில் இருக்கும் கேசவ விநாயகம் மீதும் புகார் கொடுத்திருக்கும் அவர்கள், இந்த கேசவ விநாயகம்தான் தமிழகத்தில் கட்சியைக் கெடுத்துவிட்டார். எனவே அவரையும் மாற்றவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம். இந்த நிலையிலும் அ.தி.மு.க. இல்லாமலே ஒரு வலிமையான கூட்டணியை அமைப்பேன். அதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் என்று தற்போதைய மாநில நிர்வாகி, டெல்லித் தலைமையிடம் கெஞ்சி வருகிறாராம். எனவே, போட்டி கடுமையாகவே இருக்கிறது என்கிறது கமலாலயத் தரப்பு.''”

"தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பல வழக்குகளிலும் திணறிக்கொண்டிருக்கிறதே?''”

ss’"மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில், அவர் படித்த பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விருப்பம்போல் நகர்த்தியது. இதில் ஸ்ரீமதியின் தாயார் செல்வியை ஏ1 குற்றவாளி என்றும், திராவிடமணி என்னும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மா.செ.வை ஏ2 என்றும் குறிப்பிட்டிருப்பதோடு, செல்வியின் தம்பி மற்றும் அவர் கணவரையும் குற்றவாளிகளாக சி.பி. சி.ஐ.டி போலீஸ் சேர்த்திருக்கிறது. இந்த வழக்கில் மொத்தம் 911 பேர் குற்ற வாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக் கிறார்கள். பல ஆயிரம் பக்கம் வரக்கூடிய இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை இவர்களிடம் நேரில் கொடுக்காமல், ஈமெயிலில் அனுப்பும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இருக்கிறார்கள். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபோல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வேங்கை வயல் விவகாரத் திலும் ஏடாகூடமாகச் சொதப்பி யிருக்கிறது. இப்படித்தான் கையில் எடுத்த வழக்குகளில் அது காட்டிய திணறல் களுக்கு, அதன் ஐ.ஜி. அன்புதான் காரணம் என்கிறார்கள். இவரும் டி.ஜி.பி. சங்கர்ஜிவாலும் சேர்ந்து இப்படி வழக்குகளில் சறுக்கிவருவது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவருகிறது என்கிற குற்றச்சாட்டும் வலுத்துவருகிறது.''

"எடப்பாடி கலந்துகொண்ட விழாவை மாஜி மந்திரி செங்கோட்டையன் புறக்கணித் திருக்கிறாரே?''”

22"அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் நல்ல தீர்வினை எடப்பாடி ஏற்படுத்தியதாகச் சொல்லி, அவருக்கு வானூரில் பாராட்டு விழாவை 9 ஆம் தேதி நடத்தினார்கள் ஒரு தரப்பு விவசாயிகள். இந்த பாராட்டு விழாவில் எடப்பாடியும் வெகு உற்சாகமாகக் கலந்துகொண் டார். இதில் எடப்பாடியை மகிழ்விக்க நாட்டுப்புற நிகழ்ச்சி களுக்கு பதில் விவசாயிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விழாவிற்கான போஸ்டரில் எம்.ஜி.ஆர். படமோ, ஜெ.’படமோ இல்லை. அதில் எடப்பாடி மட்டுமே பிரதானமாக இருந்தார். இதைப் பார்த்து எரிச்சலான மாஜி மந்திரி செங் கோட்டையன், விழாவைப் புறக்கணித்து விட்டாராம். எடப்பாடியின் பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கு அ.தி.மு.க.வினரை விடவும், பா.ஜ.க. தலைவர்களையே அவர் வருந்தி வருந்தி அழைத்துக்கொண்டி ருக்கிறாராம். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை கடந்தவாரம் நேரில் சந்தித்து அழைத்துள்ளார் வேலுமணி. அவரும் திருமணத்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டி ருக்கிறாராம். இந்தத் திருமணத்தில் அமித்சா கலந்துகொண்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாவதற்கு அது அச்சார விழாவாக இருக்கும் என்கிறது பா.ஜ.க. தரப்பு.''”

rr