2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சி உருவானது. அப்போது, "நான் பெரியாரின் பிள்ளை, மார்க்ஸின் மாணவன், தம்பியின் தம்பி' என்ற அறிமுகத்தோடு ஒருவர் பொது மேடைகளுக்கு வந்தார். அவர் பெயர் சீமான். அவரைப் பெரியார் இயக்க மேடைகள் பெரிதாய்க் கொண்டாடின. எல்லா மேடைகளிலும் அவரை ஏற்றி மகிழ்ந்தன. நாடெங்கிலும் அவர் பெரியாரைப் போற்றிப் புகழ்ந்து பேசினார். பெரியார்தான் எல்லாம் என்றார்! பெரியார் இல்லையென்றால் பெண்கள் படித்திருக்க முடியுமா என்று கேட்டார். சமூக நீதி அவரால்தான் தமிழ்நாட்டில் தழைத்தது என்று முழங்கினார்.
பிறகு நாம் தமிழர் என்று ஒரு கட்சியைத் தொடங்கி னார். அந்தக் கட்சியின் சார்பிலும் பெரியாரின் நினைவைப் போற்றிச் சுவரொட்டிகள் ஒட்டினார். பல மேடைகளில் பெரியாரைப் புகழ்ந்து பேசினார். அந்தக் கட்சி வெளியிட்ட இன எழுச்சி மாநாட்டு மலரின் பின் அட்டையில் 64 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களுள் முதல் படமாகப் பெரியாரின் படமே இடம்பெற்று இருந்தது. அந்த மலரில் பெரியாரைப் போற்றிப் பேராசிரியர் இளமுருகு எழுதியுள்ள கட்டுரையும் இடம்பெற்றிருந்தது.
அண்மையில், "பெரியாரும் சீர்திருத்தம் செய்தார் என்றால் நாங்கள் ஏற்கிறோம், பெரியார்தான் என்று சொல்வதை நாங் கள் எதிர்க்கிறோம்' என்று வீர வசனம் பேசினார். இன்று அடுத்த கட்டம் வந்து விட்டது. பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கிறார். பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன தொடர்பு என்று கொஞ்சமும் கூச்சப் படாமல் கேள்விகளை முன்வைக் கிறார். எல்லாவற்றையும் தாண்டி, திராவிடத்திற்கு அடித்தளமாக இருக்கும் பெரியாரை வேரோடு வெட்டிச் சாய்ப்பதுதான் என் கொள்கை என்று ஓர் ஊடகவியலாளர் சந்திப்பில் சத்தம் போடுகிறார்.
என்ன நேர்ந்தது சீமானுக்கு? உடல் நலம் இல் லையா அல்லது ஏதேனும் மனப்பிறழ்வா என்று பெரியாரியச் சிந்தனையாளர்கள் குழம்பு கின்றனர். ஆனால், பா.ஜ.க. மாநில தலைவர், எச். ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் இப்போது சீமானைக் கொண்டாடுகிறார்கள். காக்கி அரைக் கால் சட்டையும், கையில் ஒரு தாமரைப் பூவும் இல்லாதது மட்டும்தான் ஒரு சிறு குறை! மற்றபடி தான் ஒரு சங்கி என்பதற்கான எல்லா தகுதியையும் சீமான் பெற்றுவிட்டார். சங்கி என்றால் சக தோழன் என்று அகராதிகளே அரண்டு போகும் விதத்தில் ஒரு அர்த்தத்தையும் சொல்-விட்டார்.
போகட்டும், நாம் அவரைப் பற்றிப் பேசி நம் நேரத்தை வீணாக்க வேண்டியது இல் லை! பெரியார் எதுவும் செய்து கிழித்தாரா அல்லது பிரிந்து கிடந்தவர்களைச் சேர்த்து வைத்துத் தைத்தாரா என்பதை மட்டும் பார்க்கலாம். அதற்கு முன்பு சீமானின் நாம் தமிழர் கட்சி எப்படித் தொடங்கப்பட்டது என்பது குறித்த ஒரே ஒரு குறிப்பை மட் டும் பார்த்துவிடலாம். சிவந்தி ஆதித்தன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணிய ஆதித்தன் 31.12.2019 அன்று முகநூ-ல் ஒரு பதிவேற்றியுள்ளார். அந்தப் பதிவில் சீமான் பற்றிய ஒரு ரகசியம் காணக் கிடைக்கிறது.
அன்றைய "துக்ளக்' ஆசிரியர் சோவும், இன்றைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் தன்னிடம் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்கள் என்றும், அவருக்கு நாம் தமிழர் கட்சி என்னும் பெயரைக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள் என்றும் தன் அண்ணன் தன்னிடம் கூறியதாகவும், அந்த ஒருவரின் பெயர் சீமான் என்றும், அவர் உள்ளே வந்தவுடன் சிவந்தி ஆதித்தன் அவர்களின் கால்களைத் தொட்டு வணங்கியதாகவும் (மண்டியிடாத மானம்) அந்தக் குறிப்பு சொல்கிறது. அந்த நபரை நான் நாடார் சங்க மாநாடுகள் சிலவற்றில் பார்த்திருக்கிறேன் (குடிப் பெருமை) என்று சிவந்தி கூறினாராம்.
ஆக மொத்தம், கட்சியின் பெயரையே சோவும், குருமூர்த்தியும்தான் வாங்கிக் கொடுத்திருக் கிறார்கள் என்றால், அவர் இன்றைக்குப் பெரியாரை வசைபாடுவதில் வியப்பு ஏதுமில்லை.
சரி, பெரியார் என்னதான் செய்துவிட்டார்?
1920களிலேயே, வருமானவரி கட்டிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி என்னும் அந்த இளைஞர், தன் சொத்து சுகங்களை பற்றிக் கவலைப்படாமல் இந்தச் சமூகத்தைப் பற்றிக் கவலைப்பட்டார்.
1919 முதல் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த பெரியார், காந்தியத் தொண்டராக இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியில் செல்வாக்குப் பெற்று, மாநில தலைமை பொறுப்பு வரையில் வந்து சேர்ந்தார். கட்சியில் இருக்கும்போது, காந்தியார் கருத்தை ஏற்று, கள் இறக்குவதற்கு எதி ராகத் தன் தோப்பில் இருந்த தென்னை மரங்களை யெல்லாம் வெட்டி வீழ்த்தினார். இங்கும் நம் சீமான் இப்போது கோபப்படுகிறார். தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியதை ஒரு விவசாயியான தன்னால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை என்கிறார். அடடா, எவ்வளவு பொறுப்புணர்ச்சி. ஆனால், தன் சொந்த மரங்களை வெட்டிய தைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்த விவசாயி, தெருவில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டிப் போட்ட பெரிய ஐயா, சின்ன ஐயாவைப் பற்றி இன்று வரையில் வாய் திறந்ததில்லை.
சரி. மீண்டும் பெரியாரிடம் வருவோம்... அவ்வளவு செல்வாக்கு டன் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் ஏன் அதனை விட்டு வெளி யேறினார்? தனக்குப் பதவி கிடைக்க வில்லை என்றோ, குடும்ப வணிகத்தைக் கவனித்து, மேலும் பணம் சேர்க்க முடியவில்லை என்றோ எண்ணி, அவர் கட்சியை விட்டு வெளியேறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு புறக்கணித்ததால், 1925 நவம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் குழுவில் இருந்தும், கட்சியி-ருந்தும் அவர் வெளியேறினார். எனவே அவருடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், சமூக நலனே நோக்கமாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும் போது, இட ஒதுக்கீடும் அதன் வழிப்பட்ட சமூக நீதியும்தான் அடிப்படைக் கோட்பாடுகளாக இருந் தன. பிறகு, பெண் விடுதலை, தமிழ் இன உரிமை, பகுத்தறிவு போன்றவை களும் இணைந்துகொள்ள, அது ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்தது. சாதி ஒழிப்பும், பா-னச் சமத்துவமும், பகுத்தறிவுச் சிந்தனையும் கொண்ட ஓர் இயக்கத்தை உருவாக்கிய தந்தை பெரியார், மானமும் அறி வும் மனிதர்க்கு அழகு என்பதைத் தமிழ் மக்கள் நெஞ்சில் பதிய வைத்தார்.
1929, பிப்ரவரி 17, 18 ஆகிய நாள்களில், செங்கல் பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு, தமிழ்நாட் டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது. பெயர் களுக்குப் பின்னால் இடம் பெற்று இருக்கும் சாதிப் பெயர்களைத் தூக்கி எறி வதும், பெண்களுக்குச் சொத்துரிமை கோருவது மான தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. அந்தக் காலகட்டத்தில் அன்றைய சூழ-ல், அவை எண்ணியும் பார்க்க முடியாத தீர்மானங்கள் ஆகும்!
1930களில் பொதுவுடமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்பிய பெருமையும் பெரியாருக்கு உண்டு. 1931 அக்டோபர் 4ஆம் நாளிட்ட குடியரசு ஏட்டில், முதன்முதலாகக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டது. 1933, மே மாதம் முதல், தமிழ்நாட்டில் மே தினக் கொண் டாட்டங்களை நடத்தியவரும் ஐயா பெரியார் தான்! பிள்ளைகளுக்கு எல்லாம் லெனின், ஸ்டா -ன், ரஷ்யா, மாஸ்கோ என்ற பெயர்களை அவர் சூட்டினார். அது என்ன மாஸ்கோ என்றெல்லாம் பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்டபோது, பழனி, சிதம்பரம் என்ற பெயர்கள் இருக்கும் போது, மாஸ்கோ என்று ஏன் பெயர் இருக்கக் கூடாது எனக் கேட்டவர்!
1937-38 தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு மிகப்பெரியது. அப்போது நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் (1938 நவம்பர்) ஐயாவுக்குப் பெரியார் என்று பெயர் சூட்டப் பட்டது. 1957 சட்ட எரிப்புப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. ஏறத்தாழ 4000 பேர் சிறை சென்று, மாதக் கணக்கிலும், ஆண் டுக் கணக்கிலும் சிறையி-ருந்தார்கள். தந்தை பெரியார் ஒரு முறை பெல்லாரிச் சிறையில் அடைக்கப்பட்ட போது, கல் உடைக்கும் பணி அவ ருக்குக் கொடுக்கப்பட் டது. போராட்டங்களில் கலந்துகொண்டு உயிர் நீத்த நடராசன், தாள முத்து, மணல்மேடு ராமசாமி, வெள்ளைச் சாமி என தியாகிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நாட்டுக்காகவும், மக்களுக்காக வும் இவ்வளவு போராட்டங்களை நடத்திய, தியாகங்களைச் செய்த தலைவரையும், அந்த இயக்கத்தையும் பார்த்துத்தான் என்ன செய்து கிழித்துவிட்டார்கள் என்று, தன் சட்டையைக் கிழித்துக்கொண்டு திரியும் சிலர் கேட்கிறார்கள். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு போன்ற பகுத்தறிவுப் போராட்டங் களையும், தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபட எரிப்புப் போராட்டத்தையும் நடத்திய இயக்கம் திராவிட இயக்கம்.
தன் தள்ளாத வயதிலும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்னும் முழக்கத்தை முன்வைத்து, கோயில் நுழைவுப் போராட்டத்தை அறிவித்தவர் தந்தை பெரியார்! சாதியின் பெயரால் சிதறிக் கிடந்த தமிழர்களையெல்லாம், பார்ப்பனர் அல்லாதார் என்னும் ஒரே குடைக்குள் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு பேரியக்கத்தைக் கண்டவர் பெரியார். பிறப்பின் அடிப்படையில் சாதியும், சாதியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுமாய் இருந்த சனாதன சமூகத்தை -ஆரியக் கோட்பாட்டை எதிர்த்து எழுந்த சிங்கம் எங்கள் தந்தை பெரியார்.
அந்தச் சிங்கத்தை வீழ்த்த, இந்தச் சிறு நரிகள் ஊளையிட்டால், சிரிக்காதா தமிழ்நாடு!