"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் களத்தில் இப்போதே கூட்டணிக் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன.''”

"ஆமாம்பா, பா.ஜ.க.வுடன் எந்த ஜென்மத்திநீம் கூட்டணி வைக்கமாட்டோம்னு சொன்ன எடப்பாடியின் குரலில் இப்ப பிசிறு தட்டுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து முழக்கமிட்டு வந்த எடப்பாடி, இப்போது, தி.மு.க.தான் எங்கள் எதிரி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப் போம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டார். இதற்குப் பின்னணியில் பெரிய மூவ் ஒன்று நடந்திருக்கிறது. அண்மையில் ஈஷாவின் சிவராத்திரி விழாவிற்காக கோவை வந்த அமித்ஷா, தான் வருவதற்கு முன்பாகவே கேரள முன்னாள் கவர்னர் சதாசிவத்தை சென்னைக்கு அனுப்பி, எடப்பாடியை சந்திக்கச் சொல்லி யிருக்கிறார். அதன்படி, சந்திப்பும் நடந்திருக்கிறது. அப்போது சதாசிவத்திடம் எடப்பாடி, "பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம்னு நாங்க சொன்னதே, சசிகலா, ஓ.பி.எஸ். போன்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளும்படி பா.ஜ.க. நிர்பந்தம் செய்ததால்தான். அதேபோல் பா.ஜ.க.வின் தற்போதைய மாநில நிர்வாகி தொடர்ந்து எங்களை விமர்சித்துக் கேவலப்படுத்தியதால், அவரை மாற்றணும்னு சொன்னோம். இதையெல் லாம் அவங்க தரப்பு கேட்டதா தெரியலை யே?'ன்னு ஆதங்கப்பட்டிருக்கிறார்.''”

rr

"அதுக்கு சதாசிவம் என்ன சொன்னாராம்?''”

எடப்பாடியின் ஆதங்கத்தை எல்லாம் கேட்ட சதாசிவம், "நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாமே நடக்கும். அதனால் வேறு குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் இருங்கள். முதல்கட்டமாக, கூட்டணி விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் இணக்கத்தை நீங்கள் காட்டுங் கள். அப்பதான் பா.ஜ.க.வும் சசிகலா, ஓ.பி.எஸ். தரப்பை நழுவவிடும். நீங்கள் பிடிவாத மாக இருந்தால், அவர்களாவது நம்மோடு இருக்கட்டு மேன்னுதானே நினைப்பார்கள். அதனால் கூட் டணி விசயத்தில் பா.ஜ.க.விடம் கொஞ்சம் இறங்கி வாருங்கள்' என் றெல்லாம் வேப்பிலையடித் தாராம்.''

Advertisment

"அதேபோல் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் த.வெ.க., பா.ஜ.க. எல்லாம் சேர்ந்து வலிமையான கூட்டணியை உருவாக்கினால்தான், தி.மு.க.வை வீழ்த்தமுடியும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு என்பதையும் அவர் எடப்பாடிக்குப் புரியவைத்தாராம். அதனால்தான், இப்போது பா.ஜ.க.வின் டெல்லித் தலைமைக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும்விதமாக, தனது குரலை மாற்றியிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள், அ.தி.மு.க.வின் சீனியர்கள்.''”

"அமித்ஷாவிடம், அ.தி.மு.க. மாஜியான வேலுமணி ரகசிய ஃபைல் ஒன்றைக் கொடுத் திருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, கோவைக்கு கடந்தவாரம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, 10 நிமிடம் ரகசியமாகச் சந்தித்துப் பேசினார் அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிராக அரசியல் செய்து வருவரும் எஸ்.பி.வேலுமணி. அந்த சந்திப்பின்போது, அமித்ஷாவிடம் ஒரு ஃபைலைக் கொடுத்திருக்கிறாராம். அதில் எடப்பாடிக்கு எதிரான வில்லங்க விவகாரங்கள் பல இருக்கிறதாம். இதை வாங்கிக்கொண்ட அமித்ஷா, "பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது பற்றி அ.தி.மு.க.வின் முடிவு என்ன?'’என்று வேலுமணி யிடமும் பொத்தாம் பொதுவாகக் கேட்க, அதற்கு,’ "கூட்டணி வேண்டாம்னு எடப்பாடி, கே.பி.முனு சாமி, ஜெயக்குமார் ஆகிய மூன்று பேர் மட்டும்தான் சொல்லிவருகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் எடப்பாடியையும் சம்மதிக்க வைத்துவிடுவோம். இல்லையெனில், வேறு ரூட்டில் இந்தக் கூட்டணியை நாம் வெற்றிகரமாக அமைப்போம்'’என்று உற்சாகமாகச் சொன்னாராம். எடப்பாடிக்கு அமித்ஷா, தனியே சதாசிவம் மூலம் ரூட் போடுவது கூட வேலுமணித் தரப்புக்குத் தெரியவில்லை.''”

Advertisment

"சரிப்பா, பிரசாந்த் கிஷோரால் அ.தி.மு.க. வுக்குள் பதட்டப் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறதே?''”

"நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க பெரிதும் விரும்பி னார் எடப்பாடி. இது தொடர்பாக அ.தி.மு.க. தரப்பும் த.வெ.க. தரப்பும் பேச்சுவார்த்தையில் பலகட்டமாக இறங்கின. துணை முதல்வர் பதவி உட்பட பல்வேறு டிமாண்டுகளையும், அதிக சீட்டுகளையும் த.வெ.க. தரப்பு கேட்டதால், எடப்பாடி கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார். இதுதான் விஜய் தரப்பை எரிச்சலாக்கியதாம். அதேபோல் பா.ஜ.க.வின் தூதரான சதாசிவத்தை எடப்பாடி சந்தித்ததையும், பா.ஜ.க.வுக்கு இசைவாக அவர் குரல் மாறியதையும் விஜய் தரப்பு விரும்பவில்லையாம். இந்த நிலையில்தான் விஜய்யின் விருப்பப்படி, அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அரசியல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர், "வருகிற தேர்தலில் த.வெ.க தனித்துப் போட்டியிடும் என்றும், அது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காது என்றும், 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விஜய் ஆட்சியைப் பிடிப்பார்' என்றும் அழுத்தமாகச் சொல்லி, அ.தி.மு.க.வுக்கு விஜய் தரப்பின் கதவை இழுத்துச் சாத்தியிருக்கிறார். அதேசமயம், "நம் கட்சியின் கூட்டணி பற்றி அறிவிக்க, இந்த பிரசாந்த் கிஷோர் யார்?' என்கிற சலசலப்பு த.வெ.க. தரப்பிலும் எழுந்திருக்கிறது.''”

"தமிழக அமைச்சர்களில் ஹாட்ரிக் சாதனை புரிந்து முதல்வரின் பாராட்டுக்களை ஒரு அமைச்சர் பெற்றிருக்கிறாரே?''”

ss"ஆமாங்க தலைவரே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழ்நாடு சாரணர் இயக்க வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை பிரமாண்டமாக நடத்தினார். இதைத் தொடர்ந்து சாரணர் இயக்க நிறைவு விழாவையும் நடத்தினார். இந்த வைர விழா நிறைவு நாளில் இந்தியாவின் 24 மாநிலங்களிலிருந்தும், இலங்கை -மலேசியா -சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் சாரண -சாரணியர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின், சாரணர் இயக்கத்தின் உயரிய விருதான, வெள்ளி யானை விருதை அன்பில் மகேஷுக்கு வழங்கிவிட்டு, "தந்தை ஸ்தானத்தில் இருந்து மகிழ்கிறேன்' என்று அமைச்சரைப் பாராட்டி னார். அமைச்சரின் தந்தையும், முதல்வரின் நண்பருமான மறைந்த அன்பில் பொய்யாமொழியை நினைவுகூர்ந்து ஸ்டாலின் பேசியது அனைவரையும் நெகிழவைத்தது. அதேபோல...''

"ம்..''”

"தமிழக பெற்றோர் ஆசிரியர் கழக 7ஆவது மண்டல மாநாட்டையும் கடலூரில் பிரமாண்டமாக நடத்தினார் அன்பில் மகேஷ். இதில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம்பேர் கலந்துகொண்டார் கள். இந்த விழாவில் பங்கேற்ற ஸ்டா லினுக்கு மாணவ-மாணவியர் சீர் கொண்டு வந்து ஆனந்தப்படுத்தினர். மாநாட்டில் பேசிய ஸ்டாலின், "அன்பில் மகேஷ் அமைச்சராக இருக்கும் இந்தக் காலம்தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம்' என்று வாயாரப் புகஷிந்துரைத்தார். அடுத்து, அன்பில் மகேஷ் பொறுப்பு அமைச்சராக இருக்கும் நாகை மாவட்டத்தில், தமிழக அரசு செயல்படுத்தும் 423 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியையும் அமைச்சர் மாநாடு போல் பிரமாண்டமாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியிலும் உற்சாகமாக மைக் பிடித்த ஸ்டாலின், ’"நாகையிலும் வாகை சூடி யிருக்கிறார் மகேஷ்'’ என பூரித்துப்போய் வாழ்த்தினார். ஆக, அமைச்சர் அன்பில் மகேஷிடம் கொடுக்கப்பட்ட 3 நிகழ்ச்சிகளையும் மிகவும் வெற்றிகரமாக நடத்தியதால், ’"ஹாட்ரிக் சாதனை அமைச்சர்'’ என அன்பில் மகேஷை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளே பாராட்டுகிறார்கள்.''”

"சீமான் மீதான பாலியல் வழக்கு வேறு மாதிரி போகிறதே?''”

r

"உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும் சீமான் மீதான பாலியல் வழக்கில், அவருக்கு ஆதரவாக, பா.ஜ.க. ஆதரவு வழக்கறிஞரான துபே களமிறங்கி னார். மேலும் அவருடன், கோபால சங்கர நாராயணன் என்கிற வழக்கறிஞரும் சீமானுக்காக ஆஜராகியிருக்கிறார். இவர், தமிழகத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய கண்ணகி- முருகேசன் வழக்கில், குற்றம்சாட் டப்பட்ட இன்ஸ்பெக்டருக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் இருவரும் வாதத் தை ஏற்றுதான், சீமான் மீது குற்றம் சாட்டியிருக்கும் நடிகை விஜய லட்சுமியிடம் செட்டில்மெண்ட் பேசி, சமாதானத்தை உருவாக் குங்கள் என்று போலீஸ் விசாரணைக்கு இடைக்காலத் தடையை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். கடலூர் மாவட் டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்ட அந்த கண்ணகி -முருகேசன் என் கிற ஜோடியை, முந்திரிக்காட்டில் கட்டி வைத்து, ஊர்மக்கள் கண் முன்பாகவே, கடும் சித்திரவதைக்குப் பின் விஷம் கொடுத்து, அவர்களை ஆணவப் படுகொலை செய்த கொடுமை, தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது. அந்த விவகாரத்தை முதன்முதலில் அம்பலப்படுத்தியது நமது நக்கீரன்தான். அதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர், இப்போது சீமானுக்காகவும் ஆஜராவது, நீதித்துறை வட்டாரத்தால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.''”

"தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மூவில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இறங்கியிருக்கிறார்களே?''”

"தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார் கோவா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கேண்டிடேட் என வர்ணிக்கப்படும் கிரிஸ் ஜோடங்க். இதன் பிறகு முதல் முறையாக 3 ஆம் தேதி இரவு அவர் சென்னை வந்தார். அவருக்கு நட்சத்திர ஓட்டலான தாஜ்கன்னிமாராவில் சூட் போடப்பட்டிருந்தது. அவரை அன்றைய இரவில் ப.சிதம் பரம், பீட்டர் அல்ஃபோன்ஸ், செல்லக்குமார் உள்ளிட்ட காங்கிரசின் பெரும்புள்ளிகள் பலரும் தனித்தனியாக சந்தித் தனர். மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் அவரை, திருநாவுக் கரசர், ஜெயக்குமார், விஸ்வநாதன், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த இரு சந்திப்பிலும் கிரிஸிடம் பேசிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க. கூட்டணியி லிருந்து காங்கிரஸ் விலக வேண்டும். ஏனென்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க.வே நிற்கத் திட்டமிட்டிருக்கிறது. அதனால் நாம் எதிர்பார்க்கும் சீட்டுகள் நமக்குக் கிடைக்காது. அதனால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, அ.தி.மு.க.வுடன் நாம் கூட்டணி வைக்கலாம் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்''”

"பிறகு?''”

"அதுமட்டுமில்லாமல், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், கூட்டணி ஆட்சி என்கிற நிபந்தனை யை விதித்து, அமைச்சரவையிலும் இடம் கேட்கலாம். இதன் மூலம் அதிகாரப் பகிர்வுக்கு முயற்சி செய்யலாம். மேலும், தி.மு.க. ஆட்சி இப்போது நிறைய அதிருப்தியையும் சம்பாதித்து வருகிறது. அதேபோல் தி.மு.க. ஆட்சியால் காங் கிரஸுக்கு ஒரு பயனும் இல்லை. ஒரு சிலர் மட்டும்தான் பலனை அனுபவிக்கிறார்கள். இதையெல்லாம் மேலிடத்தில் புரிய வையுங்கள்’என்றும் அவர்கள் கிரிஸிடம் ஆளாளுக்கு நீட்டி முழக்கிவிட்டு வந்தி ருக்கிறார்கள். இப்படி தி.மு.க. கூட் டணிக்கு எதிராக இவர்கள் கருத்துக்களைச் சொல்ல, அவரவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள். இவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்ட கிரிஸ், உங்கள் கருத்து களை எல்லாம் கட்சியின் மேலிடத்தில் தெரிவிக் கிறேன் என்று சொன்னாராம். அதேபோல், மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாகவும், எதிராகவும்கூட அவர்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்களாம்.''”

"நடிகர் திலகத்தின் இல்லம் ஜப்தியில் இருந்து விடுபட்டிருக்கிறதே?''”

"நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்தன் வாங்கிய கடனை அடைக்க மறுத்து வந்ததால், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கின் விசாரணை 5ஆம் தேதி மீண்டும் வந்தது. அப்போது துஷ்யந்தின் தந்தையும் சிவாஜியின் மூத்த மகனுமான ராம் குமார், "எனது தந்தை சிவாஜி வாழ்ந்த வீட்டில் எனக்கோ, என் மகனுக்கோ எந்த சம்மந்தமும் இல்லை. அந்த சொத்து என் தம்பி பிரபுவுக்குச் சொந்தமானது. அதனால், ஜப்தி உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்குத்தூஸ், "சம்மந்தப்பட்டவர் வீட்டின் உரிமையாளராக இல்லாதபோது, ஜப்தி செய்ய முடியாது. ஜப்தி உத்தரவை பிறப்பிக்கும்போது அது சிவாஜியின் வீடு என்பது தெரியாது. ஜப்தி உத்தரவை ரத்து செய்ய தனியாக மனு தாக்கல் செய்யுங்கள்' என்று உத்தரவிட்டு, சிவாஜி ரசிகர்களின் மனத்துயரையும் நீதிபதி துடைத்திருக்கிறார்.”.

"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். அண்மையில் பா.ஜ.க. பிரமுகர்கள் முன்னிலையில் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியின் மகன் விஜய் விகாசின் திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில் அங்கே நெருடலான ஒரு விசயம் நடந்ததையும் பலரும் கவனித்திருக்கிறார்கள். வாழ்த்த வந்த பா.ஜ.க. பிரமுகர்களான தமிழிசை, பா.ஜ.க. மா.த. உள்ளிட்டவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கிய மணமக்கள், அங்கே இருந்த பா.ஜ.க. மத்திய அமைச்சரான எல்.முருகனிடம் மட்டும் இந்த பாணியில் அவர்கள் ஆசி பெறவில்லையாம். காரணம், அமைச்சர் பட்டிய-னம் என்பதாலாம். இப்படி ஒரு ஒன்றிய அமைச்சரையே சாதியின் பெயரால் ஒரு நிகழ்ச்சியில் ஒதுக்கிய விவகாரம், இப்போது பா.ஜ.க.வின் டெல்லித் தலைமை வரை புகாராகப் போய் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறதாம்.''”

rr