மிழகத்தில் கடந்த வாரம் பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது. அதில் ஒரு மூத்த அமைச்சர் அலுவலகத்துல நடந்த பொங்கல் விழாவுல, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவம் குறிச்சும், அமைச்ச ரின் புலம்பல் குறிச்சும்தான் அங்கிருந்த கொண்டாட் டங்களுக்கு நடுவுலயும் பெரும் சர்ச்சைக்குரிய பேச்சாவும், கார சாரமான விவாதமாவும் மாறிச்சு.

அமைச்சர் புலம்பலின் பின்னணியில, புதுக்கோட்டை மாவட்ட மேயரா திலகவதிங் கறவரு பதவி வகிச்சு வர்றாரு. அவருடைய வூட்டுக்காரர் செந்தில், புதுக்கோட்டை மாநகர செயலாளராவும், அமைச்சரின் ஆதரவாளராவும் இருந்தவரு. இவர் கடந்த மாதம் எதிர்பாராத விதமா மாரடைப் புல உயிரிழந்தார். பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவருன்னாலும், புதுக்கோட்டைய பொறுத்தவரை முத்துராஜாவும், கள்ளர் சமூகமும் அதிகமா இருக்கும் இந்த மாவட்டத்துல இவர் மாநகர செயலாளரா, அமைச்சரால நியமிக்கப்பட்டாரு. புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் பதவியையும் இவரோட மனைவிக்கு பெற்றுத்தந்தாரு. இப்ப செந்திலின் மகனை புதுக்கோட்டை மாவட் டத்துக்கு பொறுப்பாளரா கொண்டுவர யோசிச்சு வர்றதா கிசுகிசுக்கிறாங்க உ.பி.க்கள்.

ss

இந்தநிலையில செந்திலின் சொத்துக்கள, அமைச்சரோட வலம்வரும் மாத்தூர் கருப்பையா மொத்தமா சுருட்டுனதுனால பிரச்சினை பூதாகரமாக வெடிச்சுருச்சு.

யார் இந்த மாத்தூர் கருப்பையா?

Advertisment

தி.மு.க. ஆட்சி பொறுப்பேத்ததும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சின்னு இந்த மூணு துறைகள்லயும் இவர் யாருக்குச் சொல்றாரோ அவருக்குத்தான் காண்ட்ராக்ட் கொடுக்கப்படும். அந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளவரா வலம் வந்துக்கிட்டிருந் தாரு. இந்த ஒப்பந்தங்கள்ல கிடைக்கும் கமிஷன் தொகையில இடமாவும், அசையா சொத்தாவும் வாங்கிப் போடுறது, அமைச்சர் மற்றும் ஒரு மாவட்ட ஆட்சியர் மட்டுமில்லாம, அரசு அதிகாரிகளின் சொத்துக்களுக்கும் பினாமியா இருந்துவர்றாரு. ஒரு வருஷம் மட்டும் இந்தப்பணியை செய்துட்டு வந்த நிலையில... ஒப்பந்தம் வழங்குறதுல பாரபட்சம் காட்டுறதா குற்றச்சாட்டு பெருசாகி, கடந்த எடப்பாடி ஆட்சியில, இதுபோல ஒப்பந்தங்கள பிரிச்சுக் கொடுக்கும் பொறுப்புல இருந்த எஸ்.எம்.டி. மூர்த்திக்கு, தி.மு.க. ஆட்சியிலயும் ஒப்பந்தங்கள பிரிச்சுக் கொடுக்கும் பொறுப்பு வழங்கப் பட்டது. இதனால ஆத்திரம் அடைஞ்சாரு கருப்பையா.

போன வருஷம் நடந்து முடிஞ்ச மக்களவை தேர்தலப்ப, திருச்சி கிராப்பட்டி யைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் எஸ்.எம்.டி.மூர்த்தி வீட்டுல வருமானவரித்துறை அதிகாரிங்க சோதனை நடத்துனாங்க. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்றதா வந்த தகவல் அடிப்படையில இந்த சோதனை நடத்தப்பட் டுச்சு. இந்தத் தகவலைக் கொடுத்ததே இந்த கருப்பையாதான்னு அன்னிக்கே பேசப்பட்டுச்சு.

அதேபோல மணல் குவாரிகள்ல மோசடி நடந்திருக்குங்கிற புகாரையடுத்து, அமலாக் கத் துறை தொடர்ந்து குவாரிங்க மற்றும் குவாரிகள நடத்துனவங்க வீடுகள்ல சோதனையில் ஈடுபட்டாங்க. மணல் குவாரி உரிமையாளர்ங்க மாசம் தவறாம கொடுத்து வந்த பணத்தை கருப்பையா இடைத்தரகராக இருந்து, மாவட்ட ஆட்சியருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

Advertisment

ss

இந்த விவகாரத்துல வருமானவரித்துறை சோதனை நடத்துனப்ப, மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சோதனைக்கு வந்தா, தனக்குப் பிரச்சினை வந்துவிடும்ங்கிறதால, மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த பணம் தொடர்பான கணக்கு வழக்குகள வைக்கோல்போர்ல போட்டு எரிச்சுட்டு, பேப்பரை கொளுத்துனதா சாக்கு சொல்லி தப்பிச்சுட்டாரு.

வெளி உலகத்துக்கு இவரு தொழில்முறை பார்ட்னரா காணப்பட் டாலும்... அமைச் சருக்கும், அதிகாரி களுக்கும் பினாமியாக இருந்து வர்றார். அப்படித் தான் புதுக் கோட்டை மாநகர செய லாளரான செந்திலும், கருப்பையாவும் ரியல் எஸ்டேட் தொழில் பார்ட்னராக வெளி யுலகிற்கு காட்டி யிருக்காங்க. ரியல் எஸ்டேட் தொழில்ல, செந்தில் பெயரில்தான் மொத்த இடமும் வாங்கப்பட்டுருக்கு. அதன் மதிப்பு... ஆத்தாடி, இருநூறுங்கறாங்கள்ல அதுக்கும் நூத்துக்கும் நடுவால இருக்கிற ஒரு நம்பர்ல கோடி, கோடியா இருக்குமாம்.

ஆனால் கருப்பையாவோ, செந்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தப்ப..., இதில் நான் போட்ட பணம் எதுவும் என்னுடையது இல்ல... எல்லாம் மேலிடத்துக்குச் சொந்தம்னு சொல்லி, மொத்த சொத்துக்களையும் ஆட்டயப் போட்டு தன்னுடைய பேருக்கு மாற்றி எழுதிக்கிட்டாரு. அதுல 70 சதவீதம் இவருடைய பேருக்கும், 30 சதவீதம் அவருடைய சொந்தக்காரய்ங்க பேருக்கும் மாத்தியிருக்காரு. அதேபோல செந்தில் இறப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னால கருப்பையாவை மேப்படி புதுக்கோட்டை மேயரம்மா அவசர, அவசரமா பார்த்து கையில இருந்த ரொக்கம்... பச்ச பச்ச நோட்டுகளா இருபது, முப்பது கோடிகள கொண்டுபோய் மொத்தமா குடுக்க... கருப்பையாவுக்கு லக்கும் அடிச்சது, அக்கப்போரும் ஆரம்பிச்சது.

செந்தில் மறைவிற்கு நேர்ல போய் அஞ்சலி செலுத்தப்போன பெருசு கால்ல விழுந்து கதறி அழுதாராம் மேயரம்மா. தங்களிடம் இருந்த நூத்துக்கும், இருநூறுக் கும் நடுவால இருந்த கோடிக மதிப்புள்ள சொத்துக்கள கருப்பனும், அவரோட சேர்ந்த சொந்தபந்தத்துக்கு மாத்திக்கிட்டதயும், கையில ரொக்கமா, நோட்டா மூணு சைபர் கோடி புதுநோட்டா சாட்சியத்தோட குடுத்ததையும் ஆதாரத்தோட கைகூப்பி சொல்லிப் புலம்ப...

மாத்தூர்காரரு பொங்கலுக்கு எதுவுமே நடக்காத மாதிரி பெருசப் பாத்து வாழ்த்துச் சொல்லப் போக.. கூட்டத்துல எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லிட்டு பொத்துனாப்புல திரும்புனாரு கருப்பையா. எல்லாத்தையும் இருக்கச் சொல்லிட்டு கருப்பன மட்டும் வரச்சொல்லி, தோள்ல கை போட்டுக் கிட்டே... புதுக்கோட்டை மேயரம்மா விஷயத்த பெருசு கேட்க... "ஐயய்யோ... எனக்குத் தெரியாது. நான் எதுவுமே வாங்கல'ன்னு தலையில அடிச்சும், சத்தியம் பண்ணியும், தரையில உருண்டு பொரண்டு சொல்ல, ஆதாரத்த கையில காமிச்சு அங்க நடந்த சமத்துவப் பொங்கலோட பொங்கலா கருப்பனுக்கு ஒரு பொங்க வச்சு பிரிச்சிட்டாரு பெரியவரு. கன்னத்துல பளார்னு மாறிமாறி அறை வேற.

"மவனே ஒருவாரம் கெடு... செந்திலுக்கு சேரவேண்டிய பணத்த குடுத்துட்டு, என்ன வந்து பாக்கணும் புரியுதா''ன்னு சொல்லிட்டு, தலையில கைவச்சு புலம்ப ஆரம்பிச்சுட் டாரு. "பெருசா இவன்மேல நம்பிக்கை வச்சு துட்டு விவகாரம் பண்ணுனோம். நம்ம முதுகுலயே குத்திட்டானே...''ன்னு புலம்போ புலம்புன்னு புலம்பியிருக்கு பெருசு!

-கீரன்