ன்று ஆண்ராய்ட், நம் சகலத்தையும் தன் ஆக்டோபஸ் கரங்களால் வளைத்திருக்கிறது. பயன் கருதி கண்டுபிடிக்கப் பட்ட ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பம், இன் னொரு பக்கம் விபரீத திருவிளையாடல்களையும் நடத்தி திகிலூட்டி வருகிறது.

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற கல்லூரி மாணவி, "ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப் பாக பணம் கிடைக்கும்' என்ற விளம்பரத்தை நம்பி, அதில் ரூபாய் 30,000 -ஐ முதலீடு செய்திருக்கிறார். பின்னர், தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அவர் கடந்த 2ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டிருக்கிறார். இப்போது, இது தொடர் பாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த அமானுல்லாகான், முகமது பைசல், முகம்மது ஆசிப் இக்பால் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

dd

இதேபோல், புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சேர்ந்த பொறியாளரான அருண் பாண்டியன், "திரைப்படங்களுக்கு ரேட்டிங் கொடுத்தால், முதலீடுகளுக்கு அடுத்த நிமி டமே 10 சதவீத வட்டி' என்ற தூண்டிலில் சிக்கியுள்ளார். முதலில் அவர் ரூபாய் 10 ஆயிரம் முதலீடு செய்ய, உடனே அவர் வங்கிக் கணக்கில் ரூபாய் 11 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக் கிறது. இதில் குளிர்ந்துபோன அவர், பணத்தைப் புரட்டி ரூபாய் 31 லட்சத்தை அங்கே முதலீடு செய்திருக்கிறார். ஆனால், பணம் வரவே இல்லை. முழு தையும் கபளீகரம் செய்துவிட்டார்கள்.

Advertisment

dd

இவரைப்போல் புதுச்சேரி உருளையன் பேட்டையைச் சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ஒருவர், சிரியாவில் இருப்பதாக நட்பு அழைப்பில் கிடைத்த பெண்ணை நம்பினார். அவள் தன் சம்பாத்தியத்தை எல்லாம் தங்கக் கட்டியாக அங்கே சேர்த்து வைத்திருப்பதாக வும், 35 லட்சம் செலுத்தினால், சுங்கவரி கட்டி அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்று புருடா விட, அதேபோல் பணத்தைக் கட்டி, நெற்றியில் நாமத்தை வாங்கியிருக் கிறார் அந்த டாக்டர். இதேபோல் வில்லியனூர் ராஜேஸ்வரியும், ஆன்லைன் விளம்பரத்தை நம்பி, ஷேர் மார்க்கெட் முதலீடு என்ற பெயரில் 4 லட்சம் வரை ஆண்ட்ராய்ட் மாயையில் இழந்திருக்கிறார்.

இவை குறித்து கடலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் நாம் கேட்டபோது, "ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக இந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதத்தில் 40-க்கும் மேலான வழக்குகள் வந்திருக்கின்றன. இதில் ஏறக் குறைய 2.70 கோடி பணமோசடி நடை பெற்றுள்ளது. மோசடிகளில் இருந்து தப்பிக்க வாட்ஸ்-ஆப், பேஸ்புக் கால்களைத் தவிர்க்கவேண்டும். பரிசு பொருட்கள் குலுக்களில் விழுந்துள்ளதாக எஸ்.எம்.எஸ் வந்தாலும் நம்பக் கூடாது''’என்கிறார். ரொம்பவே அலறவைக்கிறது ஆண்ட்ராய்ட் அபாயம்!

Advertisment