மதுரையில் ஸ்ரீ கிண்டர் கார்ட னில் கோடை காலப் பயிற்சியின்போது 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர்த் தொட்டிக்குள் ஆருத்ரா என்ற 4 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கிண்டர்கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகாலப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த மழலையர் பள்ளியை திவ்யா என்பவர் நடத்தி வருகிறார்.
மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதனின் நான்கு வயது மகள் ஆருத்ரா, பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டி ருந்தபோது சுமார் 12 அடி ஆழம்கொண்ட தண்ணீர்த் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். இதைக் கண்ட மற்ற குழந்தைகள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க, ஆசிரியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரம் போராடி தொட்டிக்குள் கிடந்த சிறுமியை மீட்டு பள்ளியருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மீட்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர் பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து தாளாளர் திவ்யா, மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பிலிருந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அதி காரி ரேணுகா கூறும்போது, “""மதுரையில் மொத்தம் 64 பிளே ஸ்கூல்கள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளுக்கு தனியார் பள்ளி டி.இ.ஓ. சார்பில் அங்கீகாரம் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் 25 பள்ளிகளுக்கு மட்டுமே உரிய அங்கீகாரம் உள்ளன. சம்பவம் நடந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் பள்ளி 2023-ல் துவங்கி 2026 வரை அங்கீகாரம் பெற்றுள்ளது. இதுபோன்ற பள்ளிகளில் தண்ணீர்த் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் தவறி விழுந்துவிடாத அளவிற்கு சற்று உயரமான கம்பிவேலி அல்லது கிரில் கேட் மூலம் மூடப்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு அம்சம் இருந்தாலும் கேட் பூட்டுப் போட்டு மூடப்படாமல் இருந்துள்ளது. ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. விதிமீறி சம்பந்தப்பட்ட பள்ளி செயல்பட்டுள்ளது. 60 பேர் படிக்கும் அந்தப் பள்ளியில் 30 பேருக்கு மட்டும் கோடைகாலப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சம்பவத்தன்று 20 மாணவர்கள் வந்திருந்தனர். விதிமுறை மீறி பள்ளியை இயக்கியதாலும், வேறு காரணங்களுக்காகவும், தாளாளர் திவ்யா 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது''’என்றார்.
மழலையர் பள்ளியின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோயுள்ளது!
-அண்ணல்