துவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் அனைவரும் இயற்கை எழில் கொஞ்சும், பவளப்பாறைகள்சூழ் லட்சத்தீவின் தனித்தன்மையைப் பேணிப்பாதுகாத்த நிலையில், அத்தீவு மக்களின் அமைதியான வாழ்க்கையில் பதட்டத்தைத் தூவியிருக்கிறார் இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி.

இந்திய வரைபடத்தில், கேரளாவின் மலபார் கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 130 கி.மீ தொலைவில் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ளது லட்சத்தீவுகள். இங்கு வசிக்கும் சுமார் 65 ஆயிரம் மக்களில், 95% பேர் இஸ்லாமியர்கள். லட்சத்தீவுகளை நிர்வாகம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு, இந்திய ஒன்றிய அரசின் பிரதமரைத் தலைவராகக் கொண்டு 1988ம் ஆண்டில் தீவு மேம்பாட்டு ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, ஒன்றிய அரசின் சார்பாக லட்சத் தீவுகளை நிர்வாகம் செய்ய ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். அவரது நிர்வாகத் திற்கான தெளிவான வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

dd

கொரோனா பேரிடர்க்கால சொதப்பல்களைத் திசைதிருப்ப, லட்சத்தீவுகளைக் குறி வைத்துள்ளது மோடி அரசு. லட்சத்தீவுகளின் நிர்வாகியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பதில், தனது குஜராத் அமைச்சரவை சகாவான பிரஃபுல் கோடா படேலை நியமித்ததிலிருந்து தொடங்கியது பிரச்சனை. லட்சத்தீவுப் பகுதியை சுற்றுலாவாசிகளின் இடமாக மாற்றுவது, பெரும்பான்மை இஸ்லாமியர்களின்மீது அடக்குமுறையை ஏவுவது ஆகிய நோக்கங்களால் தடாலடியாகப் பல்வேறு சட்ட முன்வடிவுகளைக் கொண்டுவந் தார் பிரஃபுல் படேல்.

Advertisment

கடந்த 70 ஆண்டுகளாக இந்தத் தீவுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் நடக்கவில்லை' என அறிவித்துவிட்டு, லட்சத்தீவு வளர்ச்சி ஆணையம்-ஒழுங்கு முறை (கஉஆத) என்ற சட்ட முன்வடிவின் பெயரில் இந்த தீவுக்குள் செல்வந்தர்களை சுற்றுலாப் பயணிகளாகக் கொண்டுவந்து குவிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இங்கு வசிக்கும் மக்களிடம் கலந்தாலோசிக்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், அதிரடியாகப் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, கடற்கரையோரமாக, மீன்பிடி படகுகள், உபகரணங்களை வைப்பதற்காக அத்தீவு மக்கள் கட்டியிருந்த குடிசைகளை, சுற்றுலா வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி அகற்றியிருக்கிறார். வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் மக்களை அப்புறப்படுத்திவிட்டு, ரிசார்ட்டுகள், விடுதிகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.

இத்தீவிலுள்ள மக்கள், விலங்குகளை வளர்த்து, விற்பனை செய்து வருமானமீட்டி வருகிறார்கள். இங்கு காய்கறிகளை விளைவிக்க இயலாததால், கேரளாவிலிருந்துதான் காய்கறி, பழங்களை வாங்கவேண்டியுள்ளது. எனவே இவர்கள், காய்கறிகளைவிட இறைச்சிகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு அசைவ உணவுத்திட்டம் உள்ளது. ஆனால், லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்கு முறை என்ற சட்ட முன்வடிவின்மூலம், இறைச்சி உண்பதை, சேமித்து வைப்பதை, விற்பனை செய்வதை தடைசெய்ய முடியும். ஏற்கனவே குழந்தைகள் இறைச்சி உண்பதையும் தடை செய்துள்ளார். இவையனைத்தும், அத்தீவிலுள்ள பெரும்பான்மை இஸ்லாமியர் களின் உணவு உரிமைமீதும் மத உணர்விலும் அதிகாரம் செலுத்துவதாக உள்ளது.

d

Advertisment

இதுவரை மது விற்பனையே நடைபெறாத இந்த தீவில், சுற்றுலாப்பயணிகளைக் கவர் வதற்காக மது விற்பனை செய்யப்படவுள்ளது. மது குடிப்பதற்கும் அனுமதிக்கப்படவுள்ளது. இது இந்த தீவு மக்களுக்குப் பெரிதும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. பாஜக நிர்வாகியின் சர்வாதிகார நடவடிக்கைளால் மன நிம்மதியை இழந்துள்ள மக்கள் இவற்றை எதிர்க்க நினைத்தால்?

அதற்காகவே, லட்சத்தீவு-சட்ட விரோதச் செயல் தடுப்பு ஒழுங்குமுறை என்ற பெயரில் குண்டாஸ் சட்டத்துக்கான முன்வடிவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை பெரிதாக எந்த குற்றச்செயலும் பதிவாகாத இந்த தீவு மக்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்வதான மிரட்டலான நடவடிக்கையிலும் இறங்கியிருக் கிறார்.

ஒன்றிய அரசின் இத்தகைய சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து லட்சத்தீவுப் பகுதி மக்கள், கடந்த 7ம் தேதி, திங்களன்று, காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை 12 மணி நேரம், காந்திய வழியில் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இது கொரோனா காலகட்டமாக இருப்பதால், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், அனைவரும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும், கையில் -savelakhsadeep என்ற கோஷத்துடன், சமூக இடைவெளியுடன், பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.

dd

அத்தீவின் பெரும்பான்மையான மக்கள் ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது, லட்சத்தீவு வரலாற்றில் இதுதான் முதன்முறை யாகும். பொதுமக்களில் சிலர் கடலுக்குள் இறங்கியும், மீனவ இளைஞர்கள், கடலுக்குள் மூழ்கியபடி, கையில் கோஷங்கள் அடங்கிய பதாதையைப் பிடித்தபடி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு ஆச்சர்யம் அளித்தனர்.

லட்சத்தீவு மக்களின் போராட்டத்துக்கு கேரளாவிலும், வெளிநாடுகளிலும்கூட ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 93 அதிகாரிகள் இணைந்து, பிரதமருக்கு கடிதம் எழுதி இவ்விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு, பா.ஜ.க. நிர்வாகியைத் திரும்பப்பெறுவது மட்டுமே லட்சத்தீவுகளின் நிம்மதியை மீட்டெடுக்கும்!

-தெ.சு.கவுதமன்