"ஹலோ தலைவரே, கவர்னர் ஆர்.என்.ரவி அவசர அவசரமா டெல்லிக்குப் போய், அதே வேகத்தில் திரும்பியிருக்காரே.''”

"ஆமாம்பா, அங்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திச்சிப் பேசியிருக்கார். காரணம், ஆன்லைன் ரம்மி விவகாரம் தானா?''”

governor

"ஆமாங்க தலைவரே, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கடந்த 23 ஆம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேறப் போகுதுன்னு தெரிஞ்சதும், அன்று காலையிலேயே கவர்னர் ரவி டெல்லிக்கு பிளைட் ஏறிட்டார். அங்கே உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித் தார். இந்த முறை அமித்சாவின் அப்பாயின்ட் மெண்டை கவர்னரே கேட்டு வாங்கித்தான் சந்திச்சிருக்கார். அந்த சந்திப்பில், ஆன் லைன் ரம்மி விவகாரம் பற்றிதான் இருவரும் விவாதித்திருக்கிறார் கள். குறிப்பாக, இதே சட்ட மசோதாவை ஏற்கனவே நிறை வேற்றி தனது ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத் தது குறித்து அமித்ஷாவிடம் நினைவூட்டிய கவர்னர் ரவி, உங்களின் ஆலோசனைப்படி, சட்ட வல்லுநர்களின் கருத்தை அறிந்து, மசோதா பற்றி 8 விதமான கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு, அதை தி.மு.க. அரசுக்கே திருப்பி அனுப்பினேன். அதோடு, இந்த மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தமிழக அரசுக்கு தெரிவித்தேன். ஆனா...ன்னு தயங்கியிருக்கார் கவர்னர். அமித்ஷாவோ அவரைக் கூர்ந்து பார்த்திருக்கார்.''”

Advertisment

"சரி, மேலே போ''”

"கவர்னரோ, நான் சொன்ன அந்தக் கருத்துக்கு மாறாக, ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்குன்னு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், நாடாளுமன்றத்திலேயே தி.மு.க. எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லிவிட் டார். அதை சப்போர்ட்டாக வைத்துதான் மீண்டும் அதே சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று நிறைவேற்றியுள்ளனர். உங்கள் அறிவுறுத்தலின் படிதானே நான் அப்படி மாநில அரசுக்கு அதிகாரம் இல்லைன்னு பதில் கொடுத் தேன். இப்போது நான் சங்கடத்தில் நிறுத்தப்பட்டி ருக்கிறேன். என்னை சட்டப்படி பணி செய்ய அனுமதியுங்கள். இல்லையெனில் என்னை விட்டுவிடுங்கள். பேசாமல் தமிழ்நாட்டில் இருந்து என்னைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்கிற ரீதியில் அமித்ஷாவிடம் புலம்பி இருக் கிறார். அதோடு, மீண்டும் அனுப்பப்பட்டிருக்கும் அந்த அரசின் மசோதாவுக்கு நான் ஒப்புதல் தரலாமா? அல்லது அதைக் கிடப்பில் வைக்கனுமா? என்றும் கவர்னர் கேட்டுள்ளார். அதற்கு அமித்சா, சென்னைக்குச் செல்லுங்கள். உங்களுக்கு உரிய அட் வைஸ் விரைவில் கொடுக்கப்படும்'னு சொல்லி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம். இந்த நிலையில் அரசு இரண்டாம் முறையாக அனுப்பிய சட்ட மசோதா, கவர்னர் மேஜைக்குப் போயிருக்கிறது.''”

Advertisment

annamalai

"அதேபோல் பா.ஜ.க. அண்ணாமலையும் தட்டிவிட்ட பந்து மாதிரி டெல்லிக்கு ஓடினாரே?''”

"அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியிலிருந்து விலகு வேன்னு ஆவேசப்பட்ட அண்ணாமலைக்கு, தமிழக பா.ஜ.க.விலேயே, பலரும் பதிலடி கொடுத்தாங்க. அதேபோல் அவருக்கு எதிரான புகார்களும் டெல்லிக்குப் பறந்தன. இதையொட்டிதான் அண்ணாமலையை டெல்லி அழைத்தது. அங்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டாவையும் அண்ணாமலை சந்திச்சார். அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார் அமித்ஷா. அதோடு, தொடர்ந்து உங்களுக்கு எதிரான புகார்களாகவே குவியுதே. அங்கே என்னதான் நடக்குதுன்னு கேட்டபடி, அவருக்கு வந்த புகார்களை எல்லாம் அண்ணாமலை முன்பு போட்டிருக்கிறார். இதனால் திகைத்துப்போன அண்ணாமலை, "என்னை தலைவர் பதவியிலிருந்து எடுப்பதற்கான சதி வேலைகள் தமிழக பா.ஜ.க.வில் நடக்குது. என் மீதான புகார்களில் உண்மை இருப்பதாக நினைத்தால், கட்சி எடுக்கும் நடவடிக்கைக்குக் கட்டுப்படுவேன்'னு அழாத குறையாக பதிலளித்திருக்கிறார்.''”

"அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம்னு அண்ணாமலை சொன்னது பற்றியும் அமித்ஷா விசாரிச் சாராமே?''”

rr"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக்கூடாதுன்னு கடுமையாகச் சொன்னீர் களாமே என்று அண்ணா மலையிடம் அமித்ஷா கேட்டபோது, மிகுந்த பவ்யமாக, அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையில்லை என்பது என்னுடைய தனிப் பட்ட கருத்தல்ல. பா.ஜ.க. தொண்டர்களின் உணர்வுப்பூர்வமான கருத்து. அதைத் தான் நான் சொன்னேன் என்று பல்டியடித்த தோடு, நாடாளு மன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்ற முகம் அ.தி.மு.க. வுக்கு தேவைப்படு கிறது. நம் பிரதமரை வைத்துதான் எடப் பாடி தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். அப்படியிருக்கும்போது, பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைவது தானே சரியாக இருக்க முடியும்? அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளாமல் மறுக்கிறார். அதனால் அவர்களின் அரசியலுக்கு பா.ஜ.க. உதவவேண்டுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக் கிறது. அப்படியே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும், மொத்த முள்ள 40 நாடாளுமன்ற சீட்டுகளில் நான்கு அல்லது ஐந்தைத்தான் அவர்கள் தருவார்கள். அதனால் நாம் அந்தக் கூட்டணி பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.''”

"இதற்கு அமித்ஷா என்ன சொன்னாராம்?''”

"கூட்டணி குறித்து முடிவு எடுக்கவேண்டிய சூழலோ, நிர்பந்தமோ இப்போது நமக்கு இல்லை. அதுபற்றி உரிய நேரத்தில் பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும். எனவே கூட்டணி பத்தி இனி நீங்கள் வாயையே திறக்கக்கூடாது என்று அமித்ஷா, அண்ணாமலையை எச்சரித்துள் ளார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நீடித்ததாம். அதன்பிறகு தி.மு.க. அரசு குறித்து அமித்ஷா கேட்டிருக்கிறார். இப்படி அவர் கேட்பார் என தெரிந்தே, தி.மு.க. அரசு பற்றி, தான் தயாரித்து எடுத்துச்சென்ற ஒரு கனமான ஃபைலை, அண்ணாமலை அமித்ஷா விடம் கொடுத்திருக்கிறார். அதை மேலோட்டமாக அமித்ஷா பார்வை யிட்டபோது, பைலில் இருப்பது குறித்து விவரித்திருக்கிறார் அண்ணாமலை. குறிப்பாக, தி.மு.க. அமைச்சர்கள், ஸ்டாலின் குடும்பத் தினர், அந்த குடும்பத்திற்கு நெருக்க மானவர்கள் ஆகியோர் பற்றிய சமீபத்திய ஊழல் விவகாரங்கள் பற்றியும், அவர்களின் முதலீடுகள் பற்றிய புள்ளி விபரங்களும் அதில் இருக்கிறதாம். அதன் நகல்களை, அமலாக்கத் துறைக்கும், வருமானவரிப் புலனாய்வுத் துறைக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்திருக்கிறதாம்.''”

sasi

"அ.தி.மு.க.வை உடைக்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, எடப்பாடி தரப்பில் உள்ள முக்கியப் புள்ளிகள் பலரையும், தங்கள் பக்கம் வளைத்து, கட்சியை உடைக்கும் முயற்சியில், திவாகரனுடன் சேர்ந்து அதிரடியாகக் களமிறங்கி இருக்கிறார் சசிகலா. ஏற்கனவே எடப்பாடி மீது, அதிருப்தியில் இருக்கும் மாஜி மந்திரிகளான தங்கமணி, வேலுமணி ஆகியோரையும் கூட சசிகலா மறைமுகமாகத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறாராம். இந்த நிலையில் மற்றொரு மாஜியான ஆர்.பி.உதயகுமாரையும் சசி தரப்பு குறிவைத்தது. சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சசிகலா தரப்பிற்கு நெருக்கமான சென்னை ரேடியோஸ்’ என்ற பில்டிங்கிற்குச் சென்று, அங்கிருந்த படி சசிகலாவுடன் இணக்கமாகப் பேசினாராம் உதயகுமார். அதேபோல் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணனான ஜெ.’டி.வி. நிர்வாகி ராதாகிருஷ்ணனும் அண்மையில் சசிகலாவை நேரிலேயே சந்தித்து, சண்முகம் சார்பாக நீண்ட நேரம் பேசி இருக்கிறாராம்.''

"சசிகலா ஒரு முடிவோடுதான் களமிறங்கி இருக்கார்னு சொல்லு.''”

"உண்மைதாங்க தலைவரே, மாஜி மந்திரி ஜெயகுமாரையும் கூட பழைய நட்பின் அடிப்படையில் திவாகரன் தொடர்புகொண்டு பேசிவிட்டாராம். அதேபோல். ஓ.எஸ்.மணியனையும் திவாகரன் தொடர்புகொண்டு பேச, நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் வந்துடு றேன் என்று சொல்லிவிட்டாராம். இப்படி எடப்பாடி, யாரையெல் லாம் நம்பினாரோ அத்தனைபேரும் இப்போது சசிகலா ரிமோட் டின் கண்ட்ரோலுக்கு வந்துவிட்டார்களாம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதற் காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்களாம். அதேநேரம், தனக்குப் பாதகமான தீர்ப்புதான் வரும் என்று பயப்படும் ஓ.பி.எஸ். வழக்கை இழுத்தடிக்க முடியுமா என்று பலவிதங்களிலும் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே ஓ.பி.எஸ்.ஸின் மகள் கவிதா, தினசரி சசிகலாவுடன் மனம்விட்டுப் பேசிவருகிறார். ஓ.பி. எஸ்.ஸுக்கும் சசிக்கும் இடையிலான கருத்துப் பரி மாற்றமும் அவர் மூலம்தான் நடக் கிறதாம். இதையெல்லாம் அரசல் புரசலாக அறிந்த எடப்பாடி, யாரைத்தான் நம்புவதோ என்று பாட ஆரம்பித்துவிட்டாராம்.''”

"சரிப்பா, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது பற்றி, கண்டனம் தெரிவிக்கும் படி, மகன் மிதுன் சொல்லியும் எடப்பாடி மறுத்திருக்கிறாரே?.''

"ஆமாங்க தலைவரே, ராகுல் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. செய்த சதியை அ.தி.மு.க. கண்டிக்க வேண்டும் என்று, எடப்பாடி யின் மகன் மிதுனிடம், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணரான சுனில் வலியுறுத்தினாராம். சுனிலும் மிதுனும் கடந்த 2 ஆண்டு காலமாக நல்ல நட்பில் இருக்கிறார்கள். சுனில் மூலமாக திரைமறைவில் காங்கிரஸ் கட்சி யுடன் ரகசிய உறவை வளர்த்து வைத்திருக்கிறார் எடப்பாடி. அதனால், சுனிலின் இந்த வலியுறுத்தல் குறித்து தனது அப்பா வான எடப்பாடியிடம் சொல்லி இருக்கிறார் மிதுன். இதுகுறித்து கட்சியின் சீனியர்களிடம் விவா தித்த எடப்பாடி, ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை ஆதரித் தாலும் எதிர்த்தாலும் சில சிக்கல் களை எதிர்கொள்ள நேரிடும். இதில் பல கோணங்களிலும் யோசித்துதான் முடிவு செய்தாக வேண்டும். அவசரம் காட்ட முடியாதுன்னு மகன் மூலம் சுனிலுக்கு செய்தி சொல்லி இருக்கிறாராம். காரணம், மோடி மீதான பயம்தான் என்கிறார்கள்.''”

"தமிழ்நாடு மருந்துக் கழகத்தில் ஊழல் புகார் வெடிக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த மருந்துக் கழகம்தான் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவை யான மருத்துவ உபகரணங்களையும் மருந்துப் பொருட்களையும் கொள்முதல் செய்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்தபோது, கொரோனா தடுப்பு உபகரணக் கொள்முதலிலும், மருந்துக் கொள்முதலிலும் பலகோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்து சர்ச்சையானது. அப்போது மருத்துவக் கழகத்தில் பர்ச்சேஸிங் ஆபீசராக இருந்த பாலமுருகன்தான் ஆட்சி மாறிய நிலையிலும் தொடர்கிறார். இப்போதும் மருந்துப்பொருள் கொள்முதலில் ஊழல் வெகுவாக நடக்கிறதாம். அதன் மதிப்பு 1000 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். இந்த பாலமுருகன், முதல்வரின் செயலாளர் ஒருவரின் அழுத்தமான நட்பில் இருப்பதால், அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்லா கட்டுகிறார் என்கிறார்கள் கோட்டைத் தரப்பிலேயே.''”

rr

"டி.ஜி.பி. சைலேந்திரபாபு அசியலுக்கு வரப்போகிறார்ன்னு ஒரு தகவல் சிறகடிக்கிதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஜூன் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதன்பிறகு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் அவருக்கு வந்திருப்பதாக ஐ.பி.எஸ். வட்டாரங்கள் சொல்கின்றன.''

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் முன்னாள் தலைவியான அந்தப் பெண்மணி, கடந்த 1 மாதமாக டெல்லியில் உள்ள திஹார் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். இந்தத் தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் தெரிந்தும், இது குறித்து மூச்சுவிட மறுக்கிறார்கள். பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில்தான் அந்த அம்மணி கைது செய்யப்பட்டிருக்கிறாராம். அவருடன் காங்கிரஸ் புள்ளிகள் பலருக்கும் சட்ட விரோத கொடுக்கல் வாங்கல் இருப்பதால், தங்களுக்கும் சிக்கல் வருமோ? என்கிற அச்சத்தில் அவர்கள் இருக்கிறார்களாம்.''