மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியிருப்பதன் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்திருக்கிறது காங்கிரஸ். முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன்தான் முகுல் சங்மா. முதல்வராக முடியாத நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக வின்சென்ட் எச்.பால் நியமிக்கப்பட்டதில் காங்கிரஸ் தலைமை மீது ஆத்திரத்திலிருந்தார்.

susamy

இந்நிலையில் திரிணாமுல், மேகாலயா மீது தனது பார்வையைத் திருப்பியது. பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதலில் உரிய பேச்சுவார்த்தைகள் நடந்ததையடுத்து... தனது மனைவி, மகள், தம்பி, உட்பட பன்னிரண்டு பேருடன் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கிறார் சங்மா. திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உருவெடுத்திருப்பதால் மறுப்பதா எனத் தெரியாமல் சபாநாயகர் மெட்பா லிங்டோ முடிவெடுக்க முடியாமல், தலைமையின் ஆலோசனைக்காக காத் திருக்கிறார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், அதிக இடங்களை வெல்வதற்காக திரிணாமுல் காங்கிரஸை நெருக்கடிக்கு ஆளாக்கியது பா.ஜ.க. அதற்கேற்ப பதிலடி கொடுத்த மம்தா, தனது கட்சியை தேசிய அளவில் வளர்த்தெடுக்கும் முடிவுக்கு வந்தார். மேற்குவங்கத்தைத் தாண்டி திரிபுரா, மேகாலயா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கட்சியை வளர்த்தெடுக்கும் முனைப்பி லிருக்கிறார். மம்தாவின் தேசிய அரசியல் ஈடுபாடு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியிலிருக்கும் ஆளுமைகளை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. தவிரவும், பா.ஜ.க. தலைவர்களை தயங்காமல் விமர்சிக்கும் மம்தாதான், பா.ஜ.க.வுக்கு சரியான மாற்றாக வரமுடியுமென சிலர் நம்புகின்றனர்.

Advertisment

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்காக வியூகம் வகுத்த பிராசந்த் கிஷோரை, தனது தேசிய அரசியல் கனவுக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு மம்தா வந்திருக்கிறார். கடந்த ஆகஸ்டில் மேற்குவங்கத் தின் மகளிரணி காங்கிரஸ் தலைவியாக இருந்த சுஷ்மிதா தேவ், திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அப்போதிலிருந்தே காங் கிரஸுக்குத் தலைவலி ஆரம்பித்து விட்டது.

திரிபுராவில் மட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.வைச் சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் 30 பேர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைவதை விழாவாக நடத்த முனைகையில், கொரோனா விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி விழாவுக்கு அனுமதி வழங்க மாநில பா.ஜ.க. அரசு மறுத்துவிட்டது.

இதற்கிடையில் திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக கம்யூ னிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் முறையிட்டன. மொத்தமுள்ள 334 இடங் களுக்கான தேர்தலில் யாருமே எதிர்த்துப் போட்டியிடாமலே 112 இடங் களில் பா.ஜ.க. வென்றதாக அறிவிக்கப்பட, வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு வாபஸ் வாங்கப்பட்டதாலேயே இந்த வெற்றி சாத்தியமானதென புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இதனை விசாரிக்க கால அவகாசம் இல்லையென்பதால் போதுமான துணை ராணுவப் படைகளை அனுப்பி, தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை மத்திய அரசை உறுதிசெய்யச் சொன்னது.

Advertisment

susamy

ஒருபுறம் காங்கிரஸ் சறுக்கிக்கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் டெல்லியில் சாதித்துக் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப், அரியானா, உ.பி., கோவா வில் காலடி பதித்து தேசிய கட்சியாகும் கனவி லிருக்கிறார். இந்தச் சூழலில்தான் மம்தாவுக்கும் தேசிய அரசியல் கனவு முகிழ்த்துள்ளது.

அரசியல் களத்தில் அவ்வப்போது குழப்பத்தை உண்டாக்கும் சுப்பிரமணிய சாமி, திடீரென மம்தாவை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார். சு.சாமி, பா.ஜ.க.காரராக இருந்தாலும், மோடி அரசில் அவருக்கு அமைச்சர் பதவியோ மற்ற முக்கியத்துவமோ கிடைக்கவில்லை. அதனால், பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர்களை அடிக்கடி விமர்சித்து வந்தார். அத்துடன், மோடி அரசின் செயல்பாடு களையும் விமர்சித்தார். எடப்பாடி தலைமை யிலான அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலா-தினகரன் கட்சியை ஆதரித்தார் சு.சாமி.

இப்போது மம்தாவை ஆதரிக்கும் சு.சாமி, மம்தா கட்சியின் தயவில் மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக முனைப்பு காட்டுவதுடன், வாஜ்பாய் ஆட்சியை ஜெ.வுடன் டீ-பார்ட்டி நடத்தி கவிழ்த்ததுபோல, மோடிக்கு எதிரான டீ-பார்ட்டிக்கும் ரெடியாகி வருகிறாராம்.