ஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் பணி என்றாலும் டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணனுக்கு கார் ஓட்டுநராக உள்ளார். புதன்கிழமை மணிக்கூண்டு பகுதியில் ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கச் சென்றபோது அந்த வழியாக கடைவீதியில் சென்ற ஒரு ffகாரைப் பார்த்ததும் இமைப்பொழுதில் அந்த கார் நம்பர், அடையாளங்களை சில நாட்களுக்கு முன்பு காவல்துறை வயர்லெஸ் மூலம் கேட்டது நினைவுக்கு வந்தது. உடனே அந்த காரை நிறுத்த கைகளால் சைகை காட்ட, கார் நிறுத்தாமல் சென்றதால் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றபோது கடைவீதியில் வேகமாக காரை ஓட்ட முடியாத நிலையில் காரை நிறுத்திவிட்டு இருவர் இறங்கி ஓடினார்கள்.

தனது மோட்டார் சைக்கிளையும் நிறுத்திவிட்டு ஓடியவர்களை விரட்டிச் சென்ற முதல்நிலைக் காவலர் பிரசாத், ஒருவனை எட்டிப் பிடிக்க முயன்று கீழேவிழுந்து கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு ரத்தம் கசிவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விரட்டிச் செல்ல... அப்பகுதியில் நின்ற இளைஞர்களும் உதவிக்குவர தப்பி ஓடிய ஒருவனை பிடித்து அவன் நிறுத்திய காரையும் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து பார்த்தபோது காரில் ஒரு அரிவாளுடன் செல்போன்கள் சிக்கின.

அந்த கார், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையத்தில் வாடகைக்கு எடுத்து ஓட்டுநரை கீழே தள்ளிவிட்டு திருடிக்கொண்டு வந்த கார் என்று போலீசார் வயர்லெஸ் மூலம் சொன்ன கார்தான் என்பதும் அந்த காரை மதுரையை சேர்ந்த வேலுப்பாண்டி, வெங்கடேஷ் ஆகிய இருவரும் திருடி வந்ததும் வேலுப்பாண்டிதான் சிக்கியுள்ளான் என்பதும் தெரிய வந்தது.

கார் திருடர்களை விரட் டிப் பிடித்த காவலர் பிரசாத்தை கடைவீதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாராட்டினார்கள். அந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி வெளியான நிலையில்... தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு, பிரசாத்தின் நினைவுத் திறனையும் உயிரைப் பணயம் வைத்து கார் திருடனை விரட்டிப் பிடித்ததையும் பார்த்து, உடனே ரூ.25 ஆயிரம் வெகுமதி அறிவித்ததுடன் போனில் தொடர்பு கொண்டு பாராட்டி னார். தொடர்ந்து தஞ்சை எஸ்.பி. ரவளிப்பிரியாவும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Advertisment

வெள்ளிக்கிழமை பட்டுக் கோட்டை வந்த திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டியதோடு "மிகுந்த நினைவுத்திறனோடு நொடிப் பொழுதில் அந்த காரை அடையாளம் கண்டு தனது உயிரை துச்சமாக நினைத்து குற்றவாளியை விரட்டி பிடித் திருக்கிறார், அதனால் காயமும் அடைந்திருக்கும் பிரசாத்தை பாராட்ட ஒரு வாய்ப்பு கிடைத் தது பாராட்டுகிறேன். இதே போல காவலர்கள் செயல்பட வேண்டும்'' என்று கூறினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவலர் பிரசாத்தை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மற்றொரு பக்கம் பொதுமக்களும் பாராட்டுகிறார்கள். இப்படி பல தரப்பிலிருந்தும் காவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

எப்ப இந்த கார் திருட்டு நடந்தது? ஸ்ரீபெரும்புதூரில் ஒரு கண்ணாடிக் கடையில் வேலை செய்தவர்கள் மதுரை வேல் பாண்டி, வெங்கடேசன், காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் சதீஷ்குமார், திருவண்ணாமலை மாவட்டம் தூசி நத்தக்கொல்லை ராஜசேகரன் ஆகிய நான்கு பேரும் வேலை எதுவும் இல்லாததால் என்ன செய்யலாம் என ஆலோசித்துள்ளனர். அப் போது, மதுரை வேலுபாண்டி, "எனக்கு வாகனங்கள் திருடி பழக்கம் உள்ளது. அதனால் கால்டாக்சி புக்பண்ணி வரச்சொல்லி திருடி மதுரையில் கொண்டுபோய் பழைய இரும்புக் கடையில் விற்கலாம்' என்று ஐடியா கொடுக்க... நால்வர் அணி ஆமோதித்தது.

policee

Advertisment

அதன்படி, செங்கல்பட்டு தைலாவரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பனுக்கு போன் செய்து, கார் வேண்டும் என்று சொல்ல... திருச்சியிலிருந்து 14-ந் தேதி ஓட்டுநர் ராம்குமார் காரில் வந்தபோது அந்த அழைப்பு வந்ததால் ஊருக்கே போகாமல் வேல்பாண்டி அழைத்த செய்யாறு போய் 2 பேரையும் ஏற்றி கார் புறப்பட்ட நிலையில், திருப்பணக்காடு என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று காரை நிறுத்தச் சொல்லி ஓட்டுநர் ராம்குமாரை தாக்கி அவரிடம் இருந்த பொருட்களை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

சம்பவம் குறித்து ராம் குமார், வாகன உரிமையாளருக்கு தகவல் கொடுக்க, செய்யாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில்தான்... அந்த காரின் கலர், மாடல், பதிவு எண் ஆகியவற்றை போலீசார் வாக்கிடாக்கியில் கூறியுள்ளனர். இந்த வாக்கிடாக்கி தகவலை உள் வாங்கிக் கொண்ட பட்டுக் கோட்டை போலீஸ் பிரசாத், அடுத்த நாள் அந்த காரை பார்த்ததும் இமைக்கும் பொழு தில் அதை நினைவில்கொண்டு, விரட்டிப் பிடித்திருக்கிறார்.

நினைவாற்றலும் துணிவும் காவலர் பிரசாத்துக்கு சபாஷ் போட வைத்துள்ளது.