"வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டியில் "கோட்டை அழிங்க முதலில் இருந்து புரோட்டா சாப்பிடுறேன்'’என்ற காமெடியின் மூலம் புகழ் உச்சிக்குப் போன சூரி, நிஜவாழ்விலும் தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார். சூரியின் அம்மன் உணவகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்க அடுத்தடுத்து மதுரையைச் சுற்றி 8 கிளை உணவகங்களைத் திறந்து கடைசியாக மதுரை அரசு மருத்துவ மனையின் உள்ளே சூரியின் உணவகத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனே வந்து திறந்துவைக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தார்.

Advertisment

கடந்த செப்டம் பரில் யாரோ வருமான வரித்துறைக்கு பெட்டிசன் போட... வருமான வரித்துறை சூரியின் உணவ கங்களில் சோதனை நடத்தியது. அமைச்சர் மூர்த்தியை அழைக்காமல் பி.டி.ஆர். தியாகராஜனை வைத்து திறந்ததனால் வருமான வரித்துறை அமைச்சரான மூர்த்தியின் தூண்டுதலால்தான் ரெய்டு நடந்துள்ளது என்று சமூக ஊடகங்களில் யாரோ கொளுத்திப்போட, அதற்கு அமைச்சர் மூர்த் தியோ, "நடிகர் சூரி எனது தொகுதிக்காரர். நல்ல நண்பர். அவரது உணவகத்தில் திட்ட மிட்டு சோதனை நடத்தப் பட்டதுபோல தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். வணிக வரித்துறைக்கு புகார்கள் தொடர்ச்சியாக வந்தத னால் நிர்வாகரீதியான நடவடிக்கையை மேற் கொண்டு ஆய்வு செய்துள் ளனர்''’என்றார்.

suri hotel

இந்நிலையில், திரும்பவும் சமூக ஊடகங்களில் "சூரியின் சகோதரர்கள் நடத்தும் அம்மன் உணவகங்களில் மூன்றில் மட்டுமே ஜி.எஸ்.டி.யோடு பில் வழங்கப்படுகிறது. மற்ற உணவகங்களில் ஜி.எஸ்.டி. யோடு பில் வழங்கப்படுவதில்லை' என கிளப்பி விட்டனர்.

மதுரையில் நடிகர் சூரியின் சகோதரர்கள் நடத்தும் உணவகங்களில் ஒன்றான தெப்பக் குளத்தில் உள்ள அம்மன் உணவகத்திற்குச் சென்றோம். அங்கு நடிகர் சூரியின் கடைசித் தம்பியான சீனிவாசனிடம் பேசினோம். "சார் எல்லாம் எங்கள் வளர்ச்சி பிடிக்காம போட்டி மனப்பான்மையோடு வேண்டுமென்றே இப்படி பொய்யான வதந்திகளைப் பரப்பு கிறார்கள்''’என்றவர் மேலும், "எங்க குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பம். எங்க ராமசாமி அண்ணன்... அதான் சூரி சினிமாவில் பெயர்வாங்கிய பிறகு 2017-ல் நடிகர் சிவகார்த்திகேயன் வந்து திறந்து வைத்தது தான் இந்த ’அம்மன் ஹோட்டல்.” இதேபோல் ஆத்திகுளத்தி லும் உள்ளது. மற்றபடி ஊமச்சிகுளம், கொன்னவன்சாவடி, ஒத்தக்கடை போன்றவை எல்லாம் வெறும் டீ கடைதான். அங்கு வடை, அப்பம்தான் போடுவோம். 5 ரூபாய்க்கெல்லாம் எப்படி ஜி.எஸ்.டி.யோடு பில் போடுவது. எனக்குத் தெரிந்து சாப்பாடு சாப்பிட்டாதான் ஜி.எஸ்.டி. போட்டு பில் அடிக்கமுடியும். ஒவ்வொரு கடையும் தனியா நிர்வகித்தாலும், மொத்தமாக கணக்கு பார்த்து ஜி.எஸ்.டி. கட்டிவருகிறோம். இப்படி இருக்கும் போது யாரோ வேண்டுமென்றே இந்த மாதிரியான அவதூறு பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள்.

மதுரையில் எங்கள் அளவுக்கு இவ்வளவு மலிவாக, தரமான உணவு வேறு எங்கும் கொடுக்க முடியாது. எல்லோருக்கும் வயிறார சாப்பாடு போடணும், தரமான சாப்பாடாகவும் இருக்கணும். பணம், காசு பெரிசா இல்லாம அரசு மருத்துவ மனைக்கு ஏழை நோயாளிகளை அழைத்துக் கொண்டு வருபவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் உயர்ந்த தரத்தில் சாப்பாடு தருகிறோம்''’ என்றார்.

Advertisment

ss

நாம் அரசு மருத்துவமனையில் இயங்கும் அம்மன் உணவகத்திற்கு சென்று பார்த்தோம். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தி, ”"தம்பி போனமுறை எங்க அம்மாவை சேர்த்தபோது இதே இடத்தில் 100 ரூபாய்க்கு சாப்பிட்டேன். இந்தமுறை வெறும் 35 ரூபாய் தான். சாப்பாடும் அருமை''’என்றார். அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிர்மலா, "நான் பூலாம்பட்டியிலிருந்து வர்றேன். எங்களைப் போன்ற ஏழைபாழைகளுக்கு தரமா விலை குறைவா சாப்பாடு போடுறார்''’என்றார்.

ஊமச்சிகுளம் டீக்கடையின் மேலாளர் சக்தி நம்மிடம், “"சார் இதுவரை மதுரையில் கோலோச்சிவந்த பெரிய, பெரிய ஹோட்டல் நிறுவனங்களின் வயிற்றெரிச்சல்தான் தான் இது''” என்று சிரித்தார்.