"சிவன் சொத்து குலநாசம்' என்பார்கள். அதனால்தானோ என்னவோ சிவனை விட்டு கிருஷ்ண னிடம் கைவரிசை காட்டியிருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட் டத்திலுள்ள வங்காரபுரம் அருகே மலைமீது அமைந்துள்ளது கோபிநாத சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் கிருஷ்ணன் பசுவுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதனால் நகர மக்களைவிட கிராமப்புறங்களில் ஆடு, மாடு, பசு கன்றுகள் வைத்து வளர்த்துவரும் மக்கள் ஆர்வத்துடன் வந்து கிருஷ்ணனை வணங்குவர். பழனி முருகனுக்கு அடுத்த படியாக திண்டுக்கல் மாவட்டத்தில் இக்கோவிலும் பிரசித்திபெற்றதாக இருந்து வருகிறது.

ss

இக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பரம்பரை அறங்காவலராக கோபிநாத்தும், அற நிலையத்துறையின் செயல் அலுவலர் சீனிவாசன் உள்பட பத்து ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் அறங் காவலரும், செயல் அலுவலரும் கூட்டுச் சேர்ந்துகொண்டு கோவில் பணத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது என்று அப்பகுதியிலுள்ள ஆளுங்கட்சி பொறுப்பாளர்களுக்கு புகார்வந்தது. இத் தகவலை அமைச்சர் ஐ.பி. காதுக்கும் கொண்டுசென்றனர்.

அப்பகுதியிலுள்ள காமாட்சிபுரம், ரெட்டியார்சத்திரம், கொத்தப்புள்ளி, தாதன் கோட்டை, புதுக்கோட்டை, எல்லாப்பட்டி உள்பட சில கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களோடு எதிர்க்கட்சியினரும் சேர்ந்து அறங்காவலர் கோபிநாத், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோரின் கூட்டுக் கொள்ளையை கண்டித்து ரெட்டியார்சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

"இக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அர்ச்சனை டிக்கெட், தரிசன டிக்கெட், மாடு உருவபொம்மை இப்படி சிலவகை கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். பக்தர்கள் உண்டியல் காணிக்கையும் போடு கிறார்கள். நேர்த்திக் கடனுக்காக பசு, கன்று களையும் கொண்டுவந்து விடுகிறார்கள். இப்படி விடக்கூடிய பசு, கன்றுகளை வருடத்திற்கு ஒருமுறை ஏலம்விடுவது கிடையாது. வாராவாரம் பக்தர்களிடம் பசு, கன்றுகளை வாங்கிக்கொண்டு உடனடியாக தனக்கு வேண்டப்பட்ட புரோக்கர்களிடம் கொடுத்து ஆயிரக்கணக்கில் வசூல் பார்த்துவருகிறார்கள். அந்த பணத்தையும் கணக்கில் ஏற்றுவது கிடையாது.

kk

வருடத்திற்கு ஒன்பது லட்சம் வரை உண்டியல் வருமானம் வருகிறது. அந்தப் பணத்தை முறையாக வங்கியில் போடுவது மில்லை. உண்டியல் எண்ணுவதை சொல்வதும் இல்லை. இப்படி கோவிலுக்கு வரக்கூடிய பல வருமானங்களைக் கணக்கு காட்டாமலேயே கடந்த நான்கு வருடங்களாக 30 லட்சத்துக்கு மேல் அறங்காவலர் கோபிநாத், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கூட்டுக் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதற்கு நாதஸ்வரம் வாசிக்கக்கூடிய சிவா வும் துணைபோயிருக்கிறார்.

Advertisment

சமீபத்தில் பெருமாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திலும் செயல் அலுவலர் சீனிவாசன் நன்கொடை ரசீது போடாமலேயே முக்கிய பிரமுகர்களிடம் பல லட்சங்களை வசூலித்து கொள்ளையடித்திருக்கிறார். கன்னிவாடி பெருமாள் கோயில், ஆத்தூர் சடையாண்டி கோயில், தர்மத்துப்பட்டி சுப்பிரமணியசாமி கோவில், இப்படி நூற்றுக்கு மேற்பட்ட உபகோவில் மூலம் வரும் பல லட்சங்களைச் செயலாளர் சீனிவாசன் கொள்ளையடித்து வருகிறார். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களைத் திரட்டி போராட்டத்தில் குதித்தோம். இருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மாவட்ட அளவில் அறநிலையத் துறையை கண்டித்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்''” என்றார் ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் பால்ராஜ்

இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி செயல் அலுவலர் சீனிவாசனிடம் கேட்டபோது, “"கோயில் பணத்தை நான் கையாடல் பண்ணவில்லை. வேண்டுமென்றே அப்படிச் சொல்லிவருகிறார்கள். கிளார்க் சிவா பணம் எடுத்திருப்பதைக் கண்டு அறங்காவலர் அவரை சஸ்பெண்டு செய்திருக்கிறார். துறைரீதியாக கவனிக்கத் தவறிவிட்டதாக எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக் கிறார்கள்''’என்று பதில் கூறினார்.

இதுசம்பந்தமாக அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக்கிடம் கேட்ட போது, “"பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதைத் தொடர்ந்து ஆடிட்டிங் செய்யும்போது பணம் கையாடல் பண்ணி யிருப்பது தெரியவந்தது. செயல் அலுவலரை டிரான்ஸ்பர் செய்ய பரிந்துரை செய்திருக்கிறேன். அதோடு துறைரீதியான நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியிருப்பதால் கூடியவிரைவில் அதிரடி நடவடிக்கை இருக்கும்''” என்றார்!

-சக்தி