manobala

(2) பாவம் பாலசந்தர்!

யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியாகத்தான் தன்னோட வீட்டுக்குள் நுழைந்தான் பாலசந்தர்.

Advertisment

"வந்துட்டானா?'' என மூக்கு வேர்த்ததோ என்னவோ... பின்வாசல் வழியாக நுழைந்தவனை பிரித்து மேய... முன்வாசல் வழியாக நுழைந்தார்கள் உறவுக்காரர்கள்.

"ஏன்டா இப்படியா பண்றது?''”

"நீயெல்லாம்... என்ன மனுஷன்டா?''”

Advertisment

"உசுற வாங்குறதுக்குன்னே வந்து வாய்ச்சிருக்கே...''”

"தாயில்லாப் புள்ள தறுதலைன்னு சும்மாவா சொன்னாங்க?''”

-இதுபோல... இன்னும் என்னென்னமோ சொன்னார்கள்.

எதற்குமே பதில் சொல்லவில்லை பாலசந்தர்.

கவிழ்ந்த தலை கவிழ்ந்தபடியே இருந்தான்.

யார், யார் திட்டுகிறார்கள் என காதுகளின் வழியே திட்டுபவர்களின் முகங்களை உணர்ந்துகொண்டான் பாலசந்தர். அவனை நினைத்து அவனுக்கே பாவமாக இருந்தது. "பயங்கர அவமானமா இருக்கே...'’என அவன் நினைத்துக்கொண்டிருந்தபோதே... ஒரு பெருசு சொன்ன விஷயம் அவனுக்கு ‘அவமானமா... பயங்கரமா’ இருந்தது.

"இவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்'’என்பதுதான் பெருசு சொன்ன விஷயம்.

பாலசந்தர் அப்படி என்ன செய்தான்? ‘எதுக்கு’ அவன் சரிப்படமாட்டான்?

தஞ்சை மாவட்டம் நன்னிலம் பக்கத்தில் இருக்கிற மருங்கூர் கிராமம்தான் பாலசந்தரின் ஊர்.

ஒரு தெருவில் முன்வாசல் தொடங்கி, பக்கத்து தெருவில் பின்வாசல் முடியும். அவ்வளவு பெரிய நீளமான வீடுகள் கொண்டதுதான் அக்ரஹாரம். பாலசந்தரின் வீடும் அப்படித்தான் இரண்டு தெருக்களை இணைத்திருந்தது. அவனோட குடும்பம் ரொம்பப் பெரிசு. அவனுக்கு மூன்று அண்ணன்கள், நான்கு அக்காள்கள்.

அப்பாவுக்கு சொந்தமாக ஊரில் விவசாய நிலங்கள் இருந்தன. ஆள் வைத்து விவசாயம் பார்த்து வந்தார். அப்பாவின் மாமனார் வீடு... அதாவது அம்மாவின் அம்மா -அப்பா சென்னையில் பழைய மாம்பலத்தில் வசித்துவந்தார்கள். காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் குடியிருந்துகொள்ள அந்த வீடு வழங்கப்பட்டிருந்தது.

சங்கரமடத்திலிருந்து ஏன் வீடு குடுத் தாங்கன்னா... காஞ்சி மகா பெரியவா அவர்கள், தன்னிடம் ஆசி வாங்க வரும் பக்தர்களுக்கு குங்குமப் பிரசாதம் தருவார். அந்தக் குங்குமத்தை பல வருஷங்களா மிகப் பக்குவத்தோட தயாரிச்சுக் கொடுத் தது பாலசந்தரோட அம்மம்மா பாட்டி தான்.

பாலசந்தரோட அம்மா "லுக்கீமியா'’ அப்படிங்கிற நோயால அவஸ்தைபட்டுக் கிட்டிருந்தாங்க. இந்த நோய் வந்தா ஈரல் வீங்கிடுமாம். ‘"இதுக்கு மருந்து இல்லை'’அப்படின்னு பேசிக்கிட்டாங்க. “"மெட்ராஸ் போனா வைத்தியம் பார்த்திடலாம்'னு ஒரு யோசனையும் சொன்னாங்க.

manobala

பாலசந்தர், அப்போ பச்ச மண்ணு. நாலு நாலரை வயசுதான் இருக்கும். அம்மாவோட நோய் பத்தியெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனா... ’மெட்ராஸுக்கு போகப் போறோம்கிற மகிழ்ச்சியும், தாத்தா -பாட்டியை பார்க்கப் போற ஆர்வமும் அவனை தொத்திக்கிச்சு.

மெட்ராஸ் போறதில்’அவனைக் காட்டிலும் அதிக ஆர்வமாக... ‘இப்பவே கிளம்பணும்ங்கிற மாதிரி... இருப்புக் கொள்ளாம இருந்தார் அவனோட அப்பா. "மாமியார் வீட்டுக்கு போறதுன்னா... மருமகன்களுக்கு ஒரு குஷிதானே' என நினைச்சிட வேண்டாம்.

அப்பாவுக்கு குதிரை ரேஸ் பழக்கம் உண்டு. ‘மெட்ராஸ்ல போய் பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்த்து சௌகர்ய மாக்கினது மாதிரியும் இருக்கும்... ரேஸ் ஆடின மாதிரியும் இருக் குமே... அதனாலதான் பரபரப்பா இருந்தார்.

அம்மா -அப்பாவோட... பாலசந்தரும் சென்னை வந்தான்.

சென்னை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி யிருக்க தெருவில்தான் பாட்டி வீடு இருந்தது. வீட்டுத் தெருவுல விளை யாடுறது... ரயில்வே ஸ்டேஷனை சுத்தி வர்றதுனு அவனுக்கு நல்லா பொழுது போனது.

சென்னை பெரியாஸ்பத்திரி யில்தான் அம்மாவைச் சேர்த்திருத் தாங்க. அங்க வேலை பார்த் திட்டிருந்த அவனோட உறவினர்... (அதாவது நடிகர் அரவிந்த்சாமி இருக்காரே... அவரை தத்தெடுத்து வளர்த்தவர்) மூலம்தான் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாங்க.

ஒருநாள்...

அம்மா இறந்துட்டாங்க.

mm

பாலசந்தருக்கு அம்மா தூங்குறதா நினைப்பு. வழக்கம் போல விளையாடிக்கிட்டிருந் தான். உறவினர்தான் (அரவிந்த் சாமியோட அப்பாதான்)... பாலசந்திரனைத் தூக்கி... “"டேய் கண்ணா... அம்மா வானத்துக்கு போய்ட்டாங்க...''’என்றார்.

அவன் மேலே பார்த்தான்.

"இனிமே அம்மா திரும்ப வரமாட்டா'’எனச் சொன்னதுதான் தாமதம்... “"எனக்கு எங்கம்மா வேணும்...'’என அழ ஆரம்பித்து விட்டான். ஒருவாறு அவனைச் சமாதானப்படுத்தினார்கள்.

அம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

"தாயில்லாப் பிள்ளை... அம்மாவ நினைச்சு ஏங்கிப் போவானே. அந்தக் குறை தெரியாம அவனை யாரு கவனிச்சுக்கிறது? அந்த மனுஷனால வளர்க்க முடியுமா? பொம்ம னாட்டி யாராவதுதான் புள்ளைய பார்த்துக்கணும்...'’என பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே...

பெங்களூருவில் செட்டிலாகியிருந்த அவனுடைய கடைசி அக்கா... “"அவனை நான் நல்லபடியா வளர்த்து, படிக்க வைக்கிறேன்'' என்று சொன்னது.

எல்லாருக்குமே மன நிறைவு. அக்கா -மாமா அவனை பெங்களூருக்கு கூட்டிச் சென்றார்கள்.

பெங்களூருவில் இருந்த பிரபலமான த.இ.ஆ.ச.ங.ந பள்ளியில்தான் அவனை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள்.

பாட மொழி, பேச்சு மொழி என எந்நேர மும் ஆங்கிலமும், இரண்டாவது பாட மொழி யாக இந்தியும் இருந்தது. தாய்மொழியான தமிழில் படிக்கத் தெரியாது. வீட்டில் தமிழ் பேசுவதால்... பேச மட்டும் தெரிந்தது. வாழ் விடத்து மொழியான கன்னடமும் அவனுக்குத் தெரியாது. கன்னடத்தில் அவனுக்குப் பிடித்த வார்த்தை... "ஒத்தில்லா'’என்பதுதான். ஏன்னா... அவனுக்கு அந்த வார்த்தை மட்டுமே தெரியும்.

ஆனால் படிப்பில் படுகெட்டியாக இருந்தான் பாலசந்தர். அதனால் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை யாகவே இருந்தான். ஆனால் இப்படி செல்லப்பிள்ளையாக ஆவதற்கு, அவன் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

காலையில் நான்கு மணியிலிருந்து, இரவு ஏழெட்டு மணிவரை வீட்டிலும், பள்ளியிலும் படிப்போ படிப்புதான். அவன் படிப்ப தற்கு சுணக்கம் காட்டினால்... அக்கா வும், மாமாவும் அடி பின்னியெடுத்து விடுவார்கள். படிப்புன்னாலும் படிப்பு... உச்சகட்ட படிப்பு. பரிட்சை யில் மார்க்குகளை அள்ளிக் கொண்டு வந்தான். ஆனால் சிறுவர்களுக்கே உரிய பொழுதுபோக்குகள் இல்லாமல் இருந்தது அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது.

எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அபரிதமான மார்க்குகளை வாங்கினான். பள்ளி நிர்வாகம் அவனைப் பாராட்டியதுடன் டபுள் புரமோஷன் கொடுத்து... எட்டாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பிற்கு அனுப்பியது. எந்த நேரமும் படித்துக்கொண்டிருந்ததில் கிடைத்த மிகப்பெரிய பலன்... ஒன்பதாம் வகுப்பு என்கிற ஒரு வருடப் படிப்பை படிக்க வேண்டியது இல்லை என ஆனதுதான்.

அக்காவுக்கு மகிழ்ச்சி... தம்பி படிப்பில் டபுள் புரமோஷன் வாங்கியதால். விஷயம் அறிந்து அப்பாவுக்கும் மகிழ்ச்சி... ‘மகன் நல்ல படிப்பாளி’ என்று. ஆனால் பாலசந்தர்தான் பாவம்...

சுவரேறிக் குதித்த கதை...!

(பறவை விரிக்கும் சிறகை)