dd

(72) கை-கால் கழுவ இளநீர்?!

வ்வொரு படத்தை உருவாக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும்.

"மல்லு வேட்டி மைனர்'’படத்தை நான் இயக்கி முடித்த பின், "முற்றுகை'’படத்தை இயக்க ஒப்பந்தமானேன். இது ஆபாவாணன் தயாரித்த படம்.

Advertisment

இந்த இடத்தில் நான் ஆபாவாணன் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

தமிழ் சினிமாவை பாரதிராஜாவும், பாரதிராஜாவின் அஸிஸ்டெண்ட்டுகளாக இருந்து டைரக்டரான பாக்யராஜ் உள்ளிட்ட நாங்களும், எஸ்.பி.முத்துராமன் சாரும் ஆண்டுகொண்டிருந்த காலம்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு பெரிய ஸ்கோப் அமையாமல் இருந்தது. அந்தச் சமயத்தில் அரசு திரைப்படக் கலூரியில் படித்த ஆபாவாணன் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையோடு விஜயகாந்த்தைச் சந்தித்தார்.

Advertisment

தயாரிப்பு, இயக்கம் என எல்லாருமே திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்த புதியவர்கள்தான். கதையைக் கேட்ட விஜயகாந்திற்கு, கதை மிகவும் பிடித்துவிட்டது.

அதைத்தாண்டி... திரைப்படக் கல்லூரி மாணவர்களான இந்த புதுமுகங்களுக்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும் என விஜயகாந்தே களத்தில் இறங்கி, ஜெய்சங்கர் உட்பட எல்லாருக்கும் போன் செய்து, “"நீங்க இந்தப் படத்தில் நடிக்கணும்... ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்ஸை நாம அங்கீகரிக்கணும்'’எனச் சொல்லி கேன்வாஸ் செய்தார்.

விஜயகாந்த், சரிதா, கார்த்திக், சசிகலா, செந்தில், மலேசியா வாசுதேவன்... இவர்களுடன் சீனியர்களான ஜெய்சங்கர் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்தனர். அந்தப் படம்தான் "ஊமை விழிகள்'.’

இந்த படத்தோட பிரம்மாண்டமும், வெற்றியும் பரபரப்பா பேசப்பட்டது.

அதனால்தான் ஆபாவாணன் டீமை வச்சு, விஜயகாந்த் நடிப்பில் இப்ராஹிம் ராவுத்தர் ‘"உழவன் மகன்'’படத்தைத் தயாரித்தார். இதுவும் பிரம்மாண்டமா தயாரானது.

எந்தளவுக்கு பிரம்மாண்டம்? அப்படிங் கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்...

f

கேப்டன் விஜயகாந்த்தைத் தேடி யார் வந்தாலும் வயிறார சாப்பாடு கிடைக்கும். இதை ஆரம்பத்துலருந்தே செய்து வந்தார்கள் விஜயகாந்தும், ராவுத்தரும். அத னால் விஜயகாந்த்- ராவுத்தர் சம்பந்தப் பட்ட படப்பிடிப் பில் படக்குழுவினர் களுக்கு பாகுபாடில் லாமல் நல்ல சாப்பாடு, தாராளமா கிடைக்கும்.

"உழவன் மகன்'’படப்பிடிப் பில் கோபிசெட்டிப் பாளையம் பகுதியில நடந் துக்கிட்டிருந்தப்ப... சாப்பாடு விஷயத்தை கண்ணும், கருத்துமா பார்த்துக்கிட்டாங்க ராவுத்தர் ஃபிலிம்ஸ்ல தயாரிப்பு நிர்வாகத்தில் இருந்த என் நண்பர்களான (அம்மா கிரியேஷன்ஸ்) டி.சிவாவும், சௌந் தரும்.

அப்போ நல்ல வெய்யில் சீஸன். கொங்கு மண்டலத்துப் பக்கம் இளநீர் விளைச்சலுக்கு கேட்கவா வேணும்.

ஆயிரம் இளநியைச் சீவி, இளநீரை ஒரு பெரிய ட்ரம்ல நிரப்பி வச்சாங்க. இப்படி இளநீர் ட்ரம் வைக் கிறவங்க அதை எங்க வைக்கணும்?

சாப்பிடுற இடத்துக்கிட்ட வச்சிருக்கணும். ஆனா... இடம் மாறிப் போனதால் என்ன நடந்துச்சுன்னா... ட்ரம்ல இருந்தது தண் ணீர்னு நினைச்சு, சாப்பிட வந்தவங் கள்லாம் அதை மொண்டு மொண்டு கை-கால் கழுவி காலி பண்ணீட்டாங்க.

இப்படி எதை எடுத்தாலும் பிரம்மாண்டம்தான்.

நூறு மீட்டர் நீளத்துக்கு ட்ராக் போட்டு, அதுல ட்ரா- வச்சு, மாட்டு வண்டி ரேஸ் ஸீன் படம் எடுத்தாங்க.

இப்படி ஆபாவாணன் சார்ந்த, ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் எடுக்கிற படங்கள் லாம் மிகப் பிரம்மாண்டமாக பேசப்பட்டது.

ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களெல்லாம் ஆபாவாணனுக்குப் பிறகு தொடர்ச்சியா வர ஆரம்பிச்சாங்க.

அதுல ரொம்ப முக்கியமானவர் ஆர்.கே. செல்வமணி.

dd

ஸீனையோ, கதையையோ திங்க் பண்ணும்போதுகூட வைட் ஆங்கிள்லதான் திங்க் பண்ணுவார் செல்வமணி. குண்டுச் சட்டியில குதிரை ஓட்டுறவர் இல்லை.

செல்வமணியோட முதல் படமே ‘"புலன் விசாரணை.' அது பிரம்மாண்டம்னா அடுத்து எடுத்த ‘"கேப்டன் பிரபாகரன்'’ அதைவிட பிரமாண்டம். இன்னைக்கி பிரம்மாண்ட டைரக்டரா ஷங்கர் இருக்கலாம். ஆனா அவருக்கெல்லாம் முன்னோடி செல்வமணிதான்.

(கேப்டன் பிரபாகரன்ல மன்சூர் அலிகான் சந்தனக் கடத்தல்காரனா அறிமுகமானார். சினிமாவில் டான்ஸராக இருந்த மன்சூரை பிரம்மாண்ட நடி கராக அறிமுகப் படுத்தினார். அதன் பின் முக்கியமான தமிழ் சினிமா நடிகர் களில் மன்சூரும் இடம்பிடித்தார். இதுல ஒரு விஷயம் என் னன்னா... டான்ஸர் மன்சூரை, நடிகர் மன்சூரா போட்டோ எடுத்து ராவுத் தரிடம் கொ டுத்தது நான் தான். போட் டோவைப் பார்த்ததுமே ‘"இந்தாளு பெரிய நடிகரா வருவாரு'’ என கணித்தது சத்தியமா நானில்லை. ராவுத்தர்தான்.)

"அவன் சத்தம் போடுற போராளி இல்ல... சாதிச்சுக் காட்டுற போராளி'’என செல்வமணியைப் பற்றி எங்க டைரக்டர் பாரதிராஜா சொல்லுவார்.

பிரம்மாண்ட படங்களை மட்டும் தரலை அவர். சினிமா உலகம் என்கிற பெரிய பிரம்மாண்ட இண்டஸ்ட்ரியின் தலைமை அமைப்பான "ஃபெஃப்சி' அமைப்பிற்கு தலைவராக இருக்கிறார். அதிலும் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் செல்வமணி. 24 உறுப்பு சங்கங்களைக் கொண்ட அமைப்பிற்கு தலைவராக இருக்க எவ்வளவு சாதுர்யம் தேவை... துணிச்சல் தேவை.

"பார்த்துக்கலாம்... சரி பண்ணிடலாம்...'' அப்படித்தான் சொல்வார் செல்வமணி. உண்மையைச் சொல்வதானால் எங்களுக் கெல்லாம் "காட்ஃபாதர்' செல்வமணி.

(பறவை விரிக்கும் சிறகை)

________

ஒரு ராத்திரி... ஒரு பாடல்!

பொதுவாக ஆர்.கே.செல்வமணிக்கு இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் பிடிக்கும்.

இளையராஜாவிடம் ‘"கேப்டன் பிரபாகரன்'’ கதையோட்டத்தைச் சொன்ன செல்வமணி “"இந்தக் கதைக்கு பாடல்கள் தேவைப்படாது...'” என்று சொன்னார். படம் எடுத்து முடிந்த பிறகு... "ஒரு பாடல் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும்' என எல்லோரும் அபிப்ராயப் பட... பட ரிலீஸ் வேளை நெருங்கிக் கொண்டிருந்த அவசரத்திலும் ஒரே ராத்திரியில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் செல்வமணி.

அதுதான் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆடும் ‘"ஆட்டமா... தேரோட்டமா'’ பாடல் காட்சி.