ff

(56) ரஜினி சார்தாம்பா கதவை தட்டுறாரு!

த்யா மூவீஸுக்காக ரஜினிகாந்த்-ராதிகா நடிப்பில் நான் இயக்கிய "ஊர்க் காவலன்'’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, அதிகாலை நாலுமணிக்கு முடிந்தது. அடுத்து மைசூரு வில் படப்பிடிப்பிடிப்பு. ஆறு மணி ஃபிளைட்டில் கிளம்பி னோம் நானும், ரஜினியும்.

அன்று மதியம் இரண்டு மணிக்கே ஸ்ரீரங்கபட்டணம் கோவில் பக்கத்துல இருக்க, ஆற்றுப் படித்துறையில் பாடல் காட்சி ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்தேன்.

Advertisment

"நான்தான் உங்களுக்கு ஐம்பது நாள் கால்ஷீட் கொடுத்திருக்கேனே... அப்புறம் ஏன் இவ்வளவு ஸ்பீடா, ரெஸ்ட் எடுக்காம ஷூட்டிங் பண்றீங்க?''’எனக் கேட்டார் ரஜினி.

"ஒரு டைரக்டரா நமக்கு பொறுப்பு இருக்குல்ல சார். தயாரிப்பாளர் காசு போடுறார். சீக்கிரமா படத்தை முடிச்சுக் கொடுத்தா அவருக்கும் சந் தோஷம்தானே. பொதுவாவே நான் ஆர்டிஸ்ட் டைரக்டர் கிடையாது, புரொடியூஸர் டைரக்டர். என் புரொடியூஸர் லாபம் சம்பாதிக்கணும் கிறதுல ரொம்பக் குறியா இருப்பேன் சார்''’என்றேன்.

ரஜினிக்கு ரொம்ப சந்தோஷம் என் பதிலைக் கேட்டு. "குட்'’என்றார்.

Advertisment

மாசி மாசம் தான், கொட்டு மேளதாளம் தான்

மாத்து மால தான், வந்து கூடும் வேள தான்

பட்டுச்சேல ரவிக்க, தாலி இருக்க

வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு ஜனம்’

என்கிற பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தினேன்.

சென்னையில் ஒரே பேச்சு...

"இருக்குற கேரக்டர் ஆர்டிஸ்ட்ட பூராவும் மனோபாலா கூட்டிட்டுப் போய்ட்டான்'’என.

அந்தளவுக்கு "ஊர்க்காவலன்'’படத்தில் ரகுவரன், பாண்டியன், மலேசியா வாசுதேவன், சங்கிலி முருகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், குமரிமுத்து, சேதுவிநாயகம், எஸ்.என்.பார்வதி, நல்லெண்ணெய் சித்ரா இப்படி நிறைய கேரக்டர் ஆர்டிஸ்ட்டுகள் நடித்தனர்.

பாடல் காட்சியின் முதல் ஷாட்டாக... "வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு ஜனம்'’என்கிற வரியை எடுத்தேன்.

ப்ளூ கலர் சட்டையில், புதிய தோற்ற ஸ்டைலில் வந்து நின்ற ரஜினியை கேமரா வழியே பார்த்தேன்.

ff

எனக்கே பிடித்துப் போனது...

ஷூட்டிங் முடிஞ்சு வந்ததும்... ராதிகா, ரகுவரன் உட்பட எல்லாருமே என் ரூம்லதான் வந்து அஸெம்பிள் ஆவாங்க. காரணம்... காமெடி களை கட்டும். ஆளாளுக்கு காமெடி பண்ணி, சிரிச்சு உருண்டுக்கிட்டிருந்தோம். திடீர்னு ரூம் இண்டர்காம் போன் அடிக்குது.

எடுத்தேன்.

"நான் ரஜினி பேசுறேன்...''”

"சொல்லுங்க சார்...''”

"என்ன... ஒரே சிரிப்பும், கும்மாளமு மா இருக்கீங்க போலருக்கே''”

"சும்மா... ஜாலியா பேசிட்டிருக் கோம் சார்''”

"நானும் உங்க ரூமுக்கு வரட்டா''”

"ஐயய்யோ... வேணாம் சார். நீங்க எதுக்கு இங்க வர்றீங்க? நீங்க வந்தா எல்லாரும் இறுக்கமா ஆகிருவாய்ங்க. நீங்க ஒங்க ரூம்லயே ஜாலியா இருங்க. நாளைக்கி ஷூட்டிங் புரோக் ராம் என்ன?னு அஸிஸ்டெண்ட்டுகள் கிட்ட சொல்லிட்டு, மைண்ட் ப்ரெஷ்-அப் ஆகுறதுக்காக காமெடி பண்ணி, ரிலாக்ஸ் பண்ணிட்டிருக் கோம். ராதிகா, ரகுவரன் எல்லாருமே இங்கதான் இருக்கோம்...''”

"சரி... சரி... சரி... ஓ.கே. புரஸீட்...'' எனச் சொல்லிவிட்டு "டொக்'’ என போனை வைத்துவிட்டார்.

"டொக்'’என போனை வைத்த ஓரிரு நிமிடங்களில், "டொக்... டொக்...'’என கதவைத் தட்டும் சத்தம்.

நாங்க எல்லாரும் ஸைலண்ட் ஆனோம்.

"ஏய் மனோ... அவருதாம்பா வந்துருக்காருன்னு நினைக்கிறேன்'' என ராதிகா சொல்ல... நான் போய் கதவைத் திறந்தால்... ரஜினி நிற்கிறார்.

"என்ன இது... என்னைய விட்டுட்டு நீங்கள்லாம் சிரிச்சு, பேசிக்கிட்டிருந்தா எப்படி?''’என சொல்லிக்கொண்டே உள்ளே வந்து உட்கார்ந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் ராதிகா தவிர... மத்த எல்லாரும் ஒவ்வொருத்தரா டப்பு டப்புனு மறைஞ்சிட்டாங்க ரூம்லருந்து. ராதிகா மட்டும்தான் உட்கார்ந்திருந்தார்.

"சார், நீங்க ரொம்ப சீரியஸான ஆளு... ஜாலியா காமெடியா பேசுறது உங்களுக்கு பிடிக்காது. பார்த்தீங்களா... எல்லாருமே எஸ்கேப் ஆகிட்டாங்க நீங்க வரவும்...''’என்றேன்.

"அய்யோ... எனக்கு காமெடி பிடிக்கும். ஜாலியா இந்த மாதிரி கலகலனு பேசிக்கிட்டிருப்பது ரொம்ப பிடிக்கும். நானும் காமெடியா பேசுவேன். இனிமே சாயங்காலத்துல நானும் உங்க ரூமுக்கு வந்துடுவேன்''’எனச் சொன்னார் ரஜினி.

கொஞ்சநேரத்தில் ரஜினியைத் தேடி மிஸஸ் லதாம்மா வந்துட்டாங்க.

ff

ஏன்னா...

நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்கு பக்கத்துல ஒரு ரோடு. அதைத் தாண்டினா ரஜினி சார் தங்கியிருக்க ஹோட்டல்.

லதாம்மாகிட்ட கூட சொல்லாம நடந்தே இங்க வந்துட்டார் ரஜினி. அவரு இங்கதான் வந்துருப்பார்னு யூகமா லதாம்மாவும் தேடி வந்துட்டாங்க. சில நிமிடங்கள் பேசிக்கொண்டி ருந்துவிட்டு... "சார் நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு காலைல ஏழு மணிக்கு ஷூட்டிங்''’ என்றேன்.

"ஏழு மணிக்கா?''”

"ஆமா சார்... பொதுவா நான் ஆறரை ஏழு மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவேன்.''”

"இவ்வளவு நேரம் இப்படி கலகலனு பேசிக்கிட்டிருக்கீங்க... லேட்டா படுத்து, காலைல சீக்கிரம் எழுந்துக்க முடியுமா?''”

"சார் எங்க டைரக்டர் பாரதிராஜா ஏழு மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்திடுவார். லேட்டானா கொன்னேபுடுவார். அவர்கிட்ட வொர்க் பண்ணின எங்களுக்கும், ராதிகா உட்பட ஆர்டிஸ்ட்டுகளுக்கும் அது பழக்கமான ஒண்ணு சார். நாளைக்கி முதல் ஷாட்டே உங்கள்லருந்து தான் ஆரம்பிக்குது''’என்றேன்.

சிரித்துக்கொண்டே லதாம்மாவுடன் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு கிளம்பினார்.

காலையில் ஆறு மணிக்கெல்லாம் படப் பிடிப்பு லொகேஷனை நெருங்கிட்டிக்ருக்கோம். யூனிட் வேன், ஆர்டிஸ்டுகள் காரெல்லாம் பின்னால வருது. என் கார் முன்னால போகுது.

லொகேஷன் கிட்ட நெருங்கிக்கிட்டி ருக்கோம்...

ஆத்துல பாலம் போடுறதுக்காக சிமெண்ட் கட்டைகள் போட்டு வச்சிருந்தாங்க.

அந்த கட்டை ஒண்ணுல, மூஞ்சியில கர்சீப் போட்டு தூங்கிக்கிட்டிருந்தார் ஒருத்தர்.

"இன்னிக்கி ரஜினி சார் லேட்டா வந்தா கலாய்ச்சிர வேண்டியதுதான்'னு நினைத்துக்கொண்டே போனா...

எனக்கு "திக்..'னு ஆகிவிட்டது.

எங்க எல்லாருக்கும் முன்னாடியே லொகேஷனுக்கு வந்து காத்திருக்கார் ரஜினி. ஆமா... அந்த சிமெண்ட் பலகையில் படுத்திருந்தது ரஜினி சார்தான்.

"சார்...''’என்றேன்

சடாரென கர்சீப்பை விலக்கி, பரபரனு எழுந்தவர் “"ஷாட் ரெடியா? ஷாட் ரெடியா?''” எனக் கேட்டார்.

எனக்கு வியப்பும், சிரிப்பும்!

"பொறுங்க சார்... மேக்-அப் போடுங்க முதல்ல''’என்றேன்.

"நான் மேக்-அப் போட்டுத்தான் இருக்கேன்''’என்றார். பின்னாலேயே வந்தார் மேக்-அப்மேன் சுந்தரமூர்த்தி.

சொல்லி வச்சு, எங்களுக்கு முன்னாடி லொகேஷனுக்கு வந்திருக்கார் ரஜினி.

இப்படி ஷூட்டிங் முழுக்க பலப்பல அனுபவங்கள்.

படத்தின் க்ளைமாக்ஸ், குதிரை சண்டைக் காட்சிகள் ‘"ஊர்க்காவலன்'’ படத்தில் மிகப் பிரமாண்டமாகவும், மிரட்டலாகவும் இருக்கும்.

பாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் பப்புவர்மாதான் அந்த ஸ்டண்ட் காட்சியை அமைத்த மாஸ்டர்.

பத்து நாட்கள் குதிரைகளையும், ஃபைட்டர்களையும் (படத்தில் அடியாட் கள்) வைத்து அந்த ஸ்டண்ட் காட்சிகளை எடுத்தவர். ரஜினியை ஒரே ஒரு நாள் மட்டும் வைத்து ஸ்டண்ட் எடுத்து, அந்தச் சண்டைக்காட்சி முழுக்க ரஜினி இருக் கும்படி எடுத்துக் கொடுத்தார் பப்புவர்மா.

பத்தாயிரம் எம்.ஜி.ஆர் ரசிகர்களை வைத்து, எடுக்கப்பட்ட ரஜினி படத்திற்கான காட்சி....!

(பறவை விரிக்கும் சிறகை)