திய நிலுவை, பி.எப்., தொகையை செட்டில்மெண்ட் செய்யாமல் பணிகளைத் தொடங்க பூஜை போடக்கூடாது என எதிர்ப்பு தெரி வித்ததால், டோல் கேட் ஒப்பந்த நிறுவனம், 100-க்கும் மேற்பட்ட பணி யாளர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rre

சேலம் -உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்ப்ரா (பி) லிமிடெட் நிறுவனம் 30 ஆண்டு களுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. எஸ்.யு., டோல் பிளாஸா என்ற பெயரில் சேலம் மாவட்டத்தில் நத்தக்கரை, மேட்டுப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் ஆகிய இடங் களில் சுங்கச்சாவடிகளை நடத்தி வருகிறது. சேலம் முதல் உளுந்தூர் பேட்டை வரை மொத்தம் 136 கி.மீ. தூரத்திற்கு சாலை பராமரிப்பு பணிகள், ரிலையன்ஸ் இன்ப்ரா வசம் உள்ளது. அதனை சப் காண்ட்ராக்ட்டும் விடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேற்சொன்ன மூன்று சுங்கச் சாவடிகளையும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.கே. எம். காண்ட்ராக்டர் அண்ட் சர்வீசஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு உள் ஒப்பந்தம் கொடுத்திருக்கிறது.

இதற்கு முன்பு உள் ஒப்பந்தம் எடுத்திருந்த டி.பி.ஆர். இன்ப்ரா நிறுவனம், டோல்கேட் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம், பி.எப், இ.எஸ்.ஐ உள்ளிட்ட இனங்களில் தலா 50 ஆயிரம் ரூபாய் வரை நிலுவை வைத்திருந்த நிலையில், திடீ ரென்று சொல்லாமல் கொள்ளா மல் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது.

Advertisment

இதையடுத்து, புதிதாக பொறுப்புக்கு வந்த எஸ்.கே.எம். நிறுவனம், "முந்தைய நிறுவனம் வழங்க வேண்டிய பணப் பலன்களை பெற்றுக் கொடுப்ப தாக உறுதியளித்தால் மட்டுமே பணிகளைத் தொடர்வோம்' என டோல்கேட் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கினர். இதற்கு எஸ்.கே.எம். நிறுவனம் மறுத்து விட்டதோடு, ஒரே நாளில் மூன்று டோல்கேட்களிலும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர் களை டிஸ்மிஸ் செய்துள்ளது.

ree

இது தொடர்பாக தமிழ் நாடு சுங்கச்சாவடி பணியாளர் கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) மாநில செயலாளர் கார்ல் மார்க்ஸ், துணை செயலாளர்கள் சிலம்பரசன், பாலமுருகன் ஆகியோர் நம்மிடம் பேசினர். "தொழிலாளர் நல சட்டப்படி, ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் குறைந்தபட்சம் 30 நாள்களுக்கு முன்னதாக அதுகுறித்த அறி விப்பை வெளியிட வேண்டும். ஆனால் டி.பி.ஆர். அப்படி செய்யவில்லை. ஒவ்வொரு டோல்கேட் தொழிலாளருக்கும் ஊதியம், பிஎப், இ.எஸ்.ஐ. என தலா 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்காமல் ஓடிவிட்டது. அந்த நிறுவனத்திடமோ அல்லது முதன்மை ஒப்பந்ததாரரான ரிலையன்சிடம் இருந்தோ பணப்பலன்களைப் பெற்றுத் தருவதாக இருந்தால் நாங்கள் பணிக்குத் திரும்புகிறோம் என்று எஸ்.கே.எம். நிறுவனத்திடம் கூறினோம். அதை ஏற்காமல், புதிதாக ஆட்களை பணி நியமனம் செய்வோம் என்றும் கூறி மிரட்டியது. நத்தக்கரையில் உள்ள டோல்கேட்டில் பணிக ளைத் தொடங்க பூஜை போட ஏற்பாடுகளைச் செய்தது. அப்போது நாங்கள், தொழி லாளர்களின் கோரிக்கை தொடர்பாக முடிவு தெரியாமல் பூஜை போடக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தோம்.

Advertisment

எஸ்.கே.எம். நிறுவன பொறுப்பு அலுவலர் அமித்சிங் என்பவர், "நாங்கள் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாவின் ஆள்கள். எங்களிடமே மோது கிறீர்களா? இந்த டோல்கேட்டில் நாங்கள் எடுப்பதுதான் முடிவு' என்று பகிரங்கமாகவே மிரட்டி னார். "எங்களுடைய பர்சனல் ஈகோவை "டச்' செய்து விட்டீர் கள், இனிமேல் ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் பணியில் தொடர முடியாது' என்றும் கூறினார். அதையடுத்து நத்தக்கரை, மேட்டுப் பட்டி, வீரசோழபுரம் ஆகிய மூன்று டோல் கேட்களில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை டிஸ்மிஸ் செய்துவிட்ட னர். மண்டல தொழி லாளர் துறை ஆணை யர், "உள் ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் முந்தைய நிறுவனம் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், யாரையும் பணிநீக்கம் செய்யக் கூடாது' என்றும் அக்டோபர் 1-ம் தேதி உத்தரவிட்டார்.

மேலும், சேலம் வருவாய்க் கோட்டாட்சியருடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும், ஏற்கனவே பணியாற்றிய ஊழியர் களை வேலைநீக்கம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட் டது. இவ்விரு உத்தரவுகளையுமே எஸ்.கே.எம். நிறுவனம் மீறிவிட் டது. இதனால் பொறுமை இழந்த சேலம் ஆர்.டி.ஓ. விஷ்ணு வர்த்தினி, சுங்கச்சாவடிகளை ஏன் மூடக்கூடாது? என்று விளக்கம் கேட்டு, எஸ்.கே.எம். நிறுவனத் திற்கு நோட்டீஸ் அளித்தார். அதற்கும் அந்நிறுவனம் பதில் அளிக்கவில்லை.

இதனால் வேலை இழந்து, எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்பிரச்னையில் அரசு தலையிட்டு விரைவில் சுமூக தீர்வு காண வேண்டும்,'' என்கிறார்கள் ஏ.ஐ.டி.யு.சி. தோழர்கள்.

நத்தக்கரை டோல்கேட் மூலம் 12 லட்சம் ரூபாயும், மேட்டுப்பட்டி டோல்கேட் மூலம் 15 லட்சம் ரூபாயும், வீரசோழபுரம் டோல்கேட்டில் 10 லட்சம் ரூபாயும் என, இம்மூன்று டோல்கேட் மூலம் நாள்தோறும் சராசரியாக 37 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சேலம் & உளுந்தூர்பேட்டை சாலைக்காக 1100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள இந்நிறுவனம், பத்து ஆண்டுகளில் மொத்த முதலீட்டையும் எடுத்து விடும் என்கிறார்கள் தொழிற்சங்க நிர்வாகிகள்.

re

அதோடு, சேலம் - உளுந்தூர்பேட்டை வரையில் 6 இடங்களில் நான்கு வழிப்பாதை அமைக்காமல் சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு மேல் இருவழிப் பாதையாகவே வைத்திருக்கிறது. பெரிய அளவில் லாபம் கொட்டும் நிலையிலும் கூட டோல்கேட் தொழிலாளர்களுக்கு சொற்ப ஊதியம் மட்டுமே கொடுப்பதாகவும், ஊதிய உயர்வு அளிப்பதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக எஸ்.கே.எம். நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் அமித்சிங்கிடம் பேசுவதற்காக தொடர்பு கொண்டபோது, ''நான் வெளியே இருக்கிறேன். பின்னர் நிச்சயமாக பேசுவோம்,'' என்றார். அதன்பின் னர் அவரை சில நாள்களாக தொடர்ந்து அழைத்தும் தொடர்புக்கு வரவில்லை.

இதையடுத்து நாம் தமிழ்நாடு தொழிலாளர் துறை மண்டல ஆணையர் அண்ணாத்துரையிடம் கேட்டபோது, ''சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங் களில் உள்ள டோல்கேட்டுகளில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஊழியர்களை அப்படியே பணியில் தொடரச் செய்ய வேண்டும் என்று எஸ்.கே.எம். நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளோம்.

ஆனால் அந்நிறுவனம், உத்தரவை முழுமையாக ஏற்கவில்லை. முதல்கட்ட பேச்சுவார்த்தையில், முன்னாள் ஊழியர்கள் பலருக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், ஆனால் 100 சதவீதம் அப்படியே உத்தரவை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இதற்கு மேல் உள் ஒப்பந்தம் எடுத்த எஸ்.கே.எம். நிறுவனத்துடன் பேசிப் பயனில்லை என்பதால், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்'' என்றார்.

தொழிலாளர் துறை மற்றும் ஆர்டிஓ உத்தரவுகளை எல்லாம் அலட்சியம் செய்யும் டோல்கேட் ஒப்பந்த நிறுவனம், தமிழ்நாட்டின் வேறெந்த அதிகார மையத்திற்குத்தான் அசைந்து கொடுப்பார்களோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை திறந்து வைத்து, இங்குள்ள வாகனங்களிடமே சுங்கம் வசூலிக்கும் ரிலையன்சும், அதன் உள் ஒப்பந்த நிறுவனமும், தமிழர்களுக்கே வேலை இல்லை என்பதும் கூட ஆகப்பெரிய முரணாக இருக்கிறது.