ராஜபாளையத்திலிருந்து டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராம்சங்கர் ராஜாவை மத்திய அரசின் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த ராம்சங்கர் ராஜா? தனது துறையில் அவரது சாதனைகள் என்ன?

rr

Advertisment

இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்சங்கர் ராஜா, உச்சநீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச்செய லாளராகவும், அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பார் கவுன்சிலின் சிறப்பு வழக்கறிஞராகவும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிவருகிறார். குற்றவியல் துறையில் முதுநிலைப் பட்டமும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என சொல்லப்படும் "கொலிஜியம்' அமைப்பு குறித்த ஆய்வில் டாக்டர் பட்டமும் பெற்றவர். இங்கிலாந்து பாராளுமன்றம், அமெ ரிக்க அட்டர்னி ஜெனரல் கமிட்டி, ஐக்கிய நாடு கள் சபை போன்றவற்றில் இந்திய சட்டங்கள் குறித்து உரையாற்றியுள்ளார். உலகளாவிய சட்டங்கள் குறித்த படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தென் அமெரிக்காவிலுள்ள கயானா நாட்டின் பிரதமரை இந்திய உச்சநீதிமன்றத்திற்கு அரசுப் பயணமாக தனது சொந்த முயற்சியில் அழைத்துவந்து, அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோபால் கவுடா, கொரியன் ஜோசப், நாகேஸ்வர ராவ் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் 2015-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கை உச்ச நீதி மன்ற வளாகத்தில் நடத்தினார். வேறு நாட்டின் பிரதமர் உச்சநீதி மன்ற வளாகத்திற்குள் வருகை தரும் முதல் நிகழ்வு என அது அனைவராலும் அப்போது பேசப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் டெல்லி முதன்மை அமர்வில் அரசின் சார்பில் பல்வேறு வழக்கு களில் ஆஜராகி வாதிட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார் பில் சிறப்பு வழக்கறிஞராக முக்கிய வழக்குகளில் வாதாடியவர். சென்னை மெரினா கடற்கரை பாதுகாப்பு வழக்கு மற்றும் ரயில் தண்டவாளங்களில் யானைகளின் இறப்பைத் தடுப்பது குறித்த வழக்கில் நீதிமன்றத் திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி ரிப்போர்ட் டபிள் ஜட்ஜ்மெண்ட் என சொல்லப்படக்கூடிய நல்ல தீர்ப்புகளைப் பெற்றுள்ளார். கங்கையை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற பொதுநல வழக்கை தாக்கல் செய்து அதில் வெற்றிபெற்று நீதிபதிகளின் பாராட்டைப் பெற்றவர்.

மனித உரிமைகள் குறித்த படிப்புகளில் ஆர்வம்கொண்டு அதிலும் முதுநிலைப் பட்டம் பெற்று சமீபத்தில் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார். அரசியல் அமைப்பு மற்றும் பாராளுமன்ற படிப்புகள் குறித்த கல்லூரியின் ஆயுட்கால உறுப்பினராக கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இத்தனை சிறப்புமிக்க ராம்சங்கர் ராஜா, மத்திய அரசின் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதில் தமிழகத்துக்கும் பெருமைதான்!

-அறிவழகன்