வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதால், ரேசன் கடை விற்பனையாளர் வேலைக்கு முதுகலை பட்டதாரிகள் வரை முண்டியடிக்கும் அவலம் அரங்கேறிவருகிறது.

தமிழகம் முழுதும் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் 5578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள், கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. 29-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இதற்குத்தான் பெரும் முண்டியடிப்புகள் நடக்கின்றன.

சேலம் மாவட்டத்தைப் பொருத்த வரை, 236 விற்பனையாளர், 40 கட்டுநர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் ரேஷன் கடை வேலைக்காக 22 ஆயிரம் பேர் விண் ணப்பித்துத் திகைக்க வைத்திருக்கிறார்கள்.

Advertisment

kk

மாதம் வெறும் 6,200 ரூபாய் மட்டுமே சம்பளமாகக் கிடைக்கும் விற்பனையாளர் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியும் கல்வித் தகுதியாக நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், விண்ணப்பித்தவர் களில் 88 சதம் பேர் பட்டதாரிகள் என்பதோடு, இவர்களில் 22 சதவீதம் பேர் இரட்டை டிகிரி பெற்றவர்களாக இருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

இந்தப் பணியை விரும்பி நேர்காணலுக்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரிடம் பேசினோம். ஓமலூரைச் சேர்ந்த பி.இ., மெக்கானிக்கல் பட்டதாரியான அசோக் கூறுகையில், "அரைக்காசு என்றாலும் அரசாங்க உத்தியோகம்; கால்காசு என்றாலும் கவர்ன்மென்ட் வேலையாக இருக்கணும்னு ஊர்பக்கம் சொல்லுவாங்க. அதனாலதான் இந்த வேலையில் சேர விண்ணப்பித் தேன். பி.இ. படித்துவிட்டு ரேஷன் கடை வேலைக்குப் போகலாமா?ன்னு எங்க அப்பா ஆரம்பத்தில் ஆட்சேபித்தார். பின்னர் அவரேதான், அரசாங்க வேலை என்று சொல்லி இண்டர்வியூக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியும் வைத்தார்'' என்றார் சுரத்தே இல்லாமல்.

Advertisment

கன்னங்குறிச்சி பி.சி.ஏ. பட்டதாரி பிரதீப் கூறுகையில், "நேர்காணலின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டார்கள். முன்பு ஐ.பெரியசாமி என்பவர் இருந்தார். அதன்பிறகு அந்தத் துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் ஒப்படைக்கப்பட் டது. இது அந்த நேரத்தில் மறந்துவிட்டதால், பெரியகருப்பன் என்பதற்கு பதிலாக 'பெரிய கண்ணன் என்று சொல்லிவிட்டேன்''’என்றதோடு... ”"ரேஷன்கடை யில் வேலைக்குச் சேர +2 போதும் தான் என்றாலும், உள்ளூரிலேயே வேலை பார்க்கும் வசதியும், பெற்றோ ரையும் கவனித்துக் கொள்ள முடியும் என்ற வாய்ப்பும் இருப்பதால் இந்த வேலையில் சேர விரும்புகிறேன்'' என்றார் புன்னகையோடு. எம்.பி.ஏ. முடித்த இளம்பெண் ஒருவர், நேர்காணலின்போது ஆங்கிலத்திலேயே சரள மாக பேசினார். அதைப் பார்த்துத் திகைத்த அதிகாரி கள், "நீங்கள் ஏதாவது கார்ப்ப ரேட் நிறுவனங்களில் வேலைக் குச் சேர்ந்தால் நல்ல உயரத்திற்கு வரலாம்' என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துவிட்டார்கள்.

கூட்டுறவுத்துறை சார்பதி வாளர் ஒருவரிடம் பேசியபோது, "வேலைவாய்ப்பின்மை காரண மாக, கிடைத்த வேலையைச் செய்யும் நிலைக்கு இளைஞர்கள் ஆளாகியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ரேஷன்கடை ஊழியர் என்பதை அரசாங்க வேலை என்ற எண் ணமே பல இளைஞர்களிடம் இருந்தது. உண்மையில், கூட்டு றவுத்துறை என்பதை முழுமை யான அரசுத்துறையாகக் கருத முடியாது. ஒரு நேரடி அரசு ஊழியருக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் ரேஷன் ஊழியர்களுக்குக் கிடைக்காது என்ற புரிதலும் அவர்களிடம் இல்லை''’என்றார் வருத்தம் இழையோட.

இரண்டு, மூன்று பட்டப் படிப்பு முடித்தவர்கள்கூட ஒரு சாதாரண வேலைக்கு முண்டி யடித்துக் கொண்டு வருவது என்பது, வளர்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு மாநிலத்திற்கு நல்ல அறிகுறி அல்ல.

-வைகறை

__________

இறுதிச் சுற்று

ff

டிசம்பர் 26-ஆம் தேதி திங்களன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டா-ன், பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். ம.தி.மு.க. தலைவர் வைகோ, இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முன்னதாக, ஐயா நல்லகண்ணுவின் இல்லத்துக்கு குடும்பத்துடன் சென்ற நக்கீரன் ஆசிரியர், ஐயாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இளைய மகள் ஆர்.வி. சாருமதி, சமீபத்தில் லண்டனில் "பாரிஸ்டர்' பட்டம் பெற்றதற்கான சான்றிதழை ஐயா நல்லகண்ணுவிடம் காட்டி வாழ்த்துகளைப் பெற்றார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் உதயநிதி ஸ்டா-ன் டிசம்பர் 24-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்திலுள்ள வீடுகளைப் பார்வையிட்ட உதயநிதியை, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் உரிமையோடு கைப்பிடித்து தங்களுடைய வீட்டிற்கு வர வற்புறுத்த... மறுப்பேதும் கூறாமல் அவர்களுடைய வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்து ஆட்டோகிராப் போட்டு மகிழ்ந்தார். மறுநாள் கோவைக்கு வருகைபுரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டா-ன், கோவை நேரு விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுபாதை அமைப்பதற்கும், ரூ.65.15 லட்சத்தில் சிறப்பு மராமத்துப் பணிகளைம் மேற்கொள்வதற்கும் அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பேசும்போது, "கோவையில் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. கூட ஜெயிக்காததால், கோவையை இந்த அரசு புறக்கணித்துவிடும் என பலரும் பேசினார்கள். ஆனால் 1,60,000 பயனாளிகளுக்கு ரூ.1,600 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நலத்திட்ட உதவிகள் பெற்றதில் தமிழ்நாட்டிலேயே கோவைக்குதான் முத-டம்'' என்றார்.

-நாகேந்திரன்

படங்கள் : அசோக்