""ஹலோ தலைவரே, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரா இருந்த வி.பி.துரைசாமி, பா.ஜ.க.வில் துண்டு விரிப்பது பற்றி போன முறைதான் நாம பேசினோம்.''

""ஆமாம்பா, 18-ந் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனை துரைசாமி சந்திச்சார். பா.ஜ.க. தயவில் தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதைப் பற்றியும் நாம பேசி யிருந்தோமே?''

rr

""தி.மு.க. தலைமையிடம் வி.பி.துரைசாமி ராஜ்யசபா எம்.பி. பதவியை எதிர்பார்த்தார். அருந்ததியர் சமுதாயத்திற்கான கோட்டா தனக்கு கிடைக்கும்னும் நினைச்சார். ஆனா, அதே சமூகத்தைச் சேர்ந் தவரான அந்தியூர் செல்வராஜுக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட்டைக் கொடுத்தது தி.மு.க. தலைமை. இதில் துரைசாமி அப் செட்டா இருப்பதை ஸ்மெல் பண்ணிவிட் டாராம் தமிழக பா.ஜ.க. தலைவரான முருகன்.''

Advertisment

""ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் முருகனை மரியாதை நிமித்தமா சந்திச்சேன்னு துரைசாமி சொல்லியிருந்தாரே?''

""சட்டமன்றத் தேர்தலின்போது, ராசிபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைசாமியும், பா.ஜ.க. சார்பில் முருகனும் போட்டியிட்டாங்க. இரண்டு பேருமே அ.தி.மு.க. வேட்பாளர்கிட்ட தோத்துப் போயிட்டாங்க. அதில் பா.ஜ.க. முருகன் நோட்டாவுக்கு டஃப் கொடுத்தாரு. தோற்றவருக்கு தோற்றவர் ஆறுதல்ங்கிற முறையில் இருவருக்கும் அப்போதே நட்பு உருவாயிடிச்சாம். அதைத்தான் இப்ப பா.ஜ.க. பயன்படுத்திக்கிச்சி.''

""வி.பி.துரைசாமி, ஸ்டாலின் தரப்பு மீது பகிரங்க விமர்சனத்தை வச்சிருக்காரே?''

Advertisment

""ஆமாங்க தலை வரே, பா.ஜ.க. முருகனை, துரை சாமி சந்திச்சது பற்றிய செய்தி வந்ததுமே, அது பற்றி துரைசாமியைத் தொடர்பு கொண்டு ஸ்டாலின் கேட்டி ருக்கார். அதுக்கு உரிய விளக்கம் தராத துரைசாமி, ஒரு ஊடக பேட்டியில், எம்.பி. பதவிக்காக உதயநிதியைக்கூட வயது வித்தியாசம் பார்க்காமல் தான் சந்தித்ததாகவும், ஸ்டாலின் நல்லவர் என்றாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரைத் தவறாக வழிநடத்து கிறார்கள் என்றும், தி.மு.க.வில் எ.வ.வேலுதான் செயல் தலை வராக உலவுகிறார் என்றும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.''

""வாட்ஸ்ஆப்பிலும் அது பரவிடிச்சே!''

sst

""அதுமட்டுமில்லீங்க தலைவரே.. தி.மு.க. சீனியர் ஒருவரிடம் துரைசாமி பேசும் போது, கட்சித் தலைமை பற்றி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்க, அப்பவே அவர் கட்சிக்கு எதிரான முடிவை எடுத்துட்டாருங்கிறதை தி.மு.க. தலைமை புரிஞ்சிக்கிச்சி. மேற்கு மாவட்ட தி.மு.க.வின் அருந்ததியர் சமூக பிரதிநிதியா அந்தியூர் செல்வராஜ் மறுபடி யும் செல்வாக்கு பெறுவதில் வி.பி.துரைசாமிக்கு விருப்ப மில்லைங்கிறதையும் தி.மு.க தலைமை தெரிந்துகொண்டது. அதனால், அவர் வகித்து வந்த தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் அந்தியூர் செல்வராஜிடமே கொடுத்திடுச்சு.''

""பா.ஜ.க.வில் ஐக்கிய மாகியிருக்கும் துரைசாமிக்கு அவர் எதிர்பார்த்த பதவி கிடைக்குமா?''

""துரைசாமி எதிர்பார்ப் பது, பா.ஜ.க. முருகன் இதற்கு முன்பு வகித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை. அதை துரைசாமிக்கு வாங்கித் தருவதாக உறுதியளித்த முருகன், அது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டாவிடம் பேசியிருக்கிறாராம். துரைசாமிக்கு அந்தப் பதவி கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு ரெண்டு அசைன்மெண்ட்டுகள் காத்திருக்கிறதாம். அதாவது முரசொலி தொடர்பான பஞ்சமி நில விவ காரத்தையும், கோட்டையில் தலைமைச் செயலாள ருடனான சந்திப் பின்போது தாழ்த்தப்பட்டவர்களைப் போல நடத்தப்பட்டோம்னு சொல்லி, சர்ச்சையில் சிக்கிய தயாநிதி மாறன் விவகாரத்தையும் தீவிரமாக அவர் கையிலெடுத்து, அதிரடி கிளப்பவேண்டும்ன்னு சொல்லப் பட்டிருக்கிறதாம்.''

""துரைசாமியைத் தொடர்ந்து இன்னும் சில முக்கிய தலைகள் வரும்னு பா.ஜ.க. தரப்பில் சொல்றாங்களே?''

""அழுத்தமா கால் ஊன்ற முடியாத மாநிலங்களில், செல்வாக்கா இருக்கும் கட்சிகளில் குழப்பம் உருவாக்குவதுங்கிறது பா.ஜ.க. பாலிசி. அதன்படி, தி.மு.க. மீது குறி வச்சிருக்காங்க. ஸ்டாலினை முதல்வராக விடமாட் டோம்னு பா.ஜ.க. மேலிடப் பிரமுகர்கள் ஓப்பனாவே பேசுறாங்க. ஸ்டாலின் இமேஜை பாதிக்க வைக்கிற மாதிரி தி.மு.கவில் 6 மா.செ.க்களைத் தூக்க பா.ஜ.க. வியூகம் வகுக்குதாம். அறிவாலயத்திலிருந்து கமலாலயம் நோக்கி எவ்வளவு பேரை கொண்டு வருவதுன்னு டிஸ்கஷன் நடந்திருக்குது.''

rr

""பா.ஜ.க. தரப்பு எடப்பாடி மீதும் எரிச்சலில் இருக்குதாமே?''

""உண்மைதாங்க தலைவரே, தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துக்கிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, பா.ஜ.க. பிரமுகரான கரு. நாகராஜன், கடுமையாக விமர்சித்தது பற்றி போனமுறையே நாம் பேசிக் கிட்டோம். அந்த விவாதத்தில் காங்கிரஸ் ஜோதிமணி முதலில் பேசுறப்ப, கொதி நிலையில் இருக்கும் மக்களின் கோபத்தை, எங்களைப் போன்றவர்களின் களப்பணியும் சொந்த நிதியும்தான் தணிச்சிக்கிட்டு இருக்குது. இல்லைன்னா, கோபத்தில் இருக்கும் மக்கள் இந்த அரசையும் பிரதமரையும் கல்லால் அடித்தே விரட்டுவார்கள்னு சொன்னதை எதிர்த்து பா.ஜ.க. கண்டனக் குரல் எழுப்புது. ஜோதிமணி பேசியபிறகு தான் கரு.நாகராஜன் பேசினார்னும், ஜோதிமணியின் இந்த பேச்சுக்கு தங்கள் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி எந்தவித ரியாக்சனையும் காட்டலைன்னும் பா.ஜ.க. தரப்பு கொந்தளிக்கிது. பா.ஜ.க. பிரமுகரான நரசிம்மன், இதை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் எடப்பாடி யிடமிருந்து நமக்கு ஆதரவான குரல் எழவில்லைன்னு பிரதமர் மோடிக்குப் புகார் கடிதம் எழுதியிருக்காராம். உளவுத்துறையும் ஜோதிமணி விமர்சனம் தொடர்பான ரிப் போர்ட்டை மோடிக்கும் அமித்ஷா வுக்கும் அனுப்பியிருக்குதாம்.''

""சசிகலா தரப்பிலும் அதிக பரபரப்பு தெரியுதே?''

rr

""உண்மைதாங்க தலைவரே, செப்டம்பர் வாக்கில் அவர் ரிலீசாவார்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ஜூன், ஜூலையிலேயே அவரை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் வேகமெடுத்திருக்கு. லாக் டவுன் காலம் முடிவதற்காகக் காத்திருக்கும் சசிகலா தரப்பு, உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக சிறப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்யப் போகுதாம். அவர்கள் முயற்சிக்கு டெல்லியின் சிக்னல் கிடைத்திருப்பதாகவும் சொல்றாங்க. சசிகலா வெளியில் வந்தால், அவர் எப்படியெல்லாம் தங்களை ஆட்டி வைப்பாரோங்கிற பீதியில் சில ஆளும்கட்சிப் புள்ளிகள் வியர்த்துப்போயிருக்காங்க.''

""தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சிதான் வரும்ங்கிற நம்பிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரவி வருவதால், அங்குள்ள உயரதிகாரிகள் பலரும், தி.மு.க. வி.ஐ.பி.க்களோடு இருந்த பழைய நட்பைப் புதுப்பிக்க ஆரம்பிச்சிட்டாங்களாமே?''

""ஆமாங்க தலைவரே, தி.மு.க. ஆட்சி வந்ததும் தங்களுக்குத் தோதான பதவிகளுக்குப் போகனும்னு இப்போதே சிலர் கணக்குப் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதேபோல் சிலர் அ.தி.மு.க. பவரில் இருக்கும் போதே சாதிச்சிக்கனும்ன்னு துடிக்கறாங்க. குறிப்பா. இப்ப சென்னை சிட்டி கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் ஓய்வுபெற இருப்பதால், அவர் பதவிக்கு ஏ.டி.ஜி.பி.க்களான ஜாபர் சேட்டும், ஜெயந்த் முரளியும் விறுவிறுப்பாக் காய் நகர்த்தறாங்க. எடப்பாடியின் கடைக் கண்பார்வையோ, ஜெயந்த் முரளியின் பக்கம்தான் இருக்குதாம். அதேபோல் ஓய்வுபெறும் இன்னொரு அதிகாரியான உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தியின் இடத்துக்கு வர, ஐ.பி.எஸ் அதிகாரிகளான ஈஸ்வரமூர்த்தியும், டேவிட்சன் தேவஆசிர்வாதமும் மூவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இவர்களில் ஆசிர்வாதத்துக்கே எடப்பாடியின் ஆசிர்வாதம்னு டாக் அடிபடுது. பெரிய போஸ்ட்டிங்கை எதிர்பார்க்கிற டேவிட்சன் தேவஆசிர்வாதம் தற்போது பொறுப்பு வகிக்கும் மதுரையில் கொரோனா தடுப்பிலும் சரி, போலீஸாரின் அடிப்படைத் தேவைகளிலும் சரி ஒழுங்கா கவனம் செலுத்தலைன்னு காக்கிகள் வேதனைப்படறாங்க.''

rr

""எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அண்மையில் சந்திச்சி மனம்விட்டுப் பேசிக்கிட்டாங்களாமே?''

""அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகரான சுனில், அந்தக் கட்சியின் ஐ.டி. விங்கை மாற்றியமைக்கும்படி அட்வைஸ் செய்திருக்கார். இதற்காக ஓ.பி.எஸ்.சை எடப்பாடி அழைத்தபோது, எனக்குத் துணை முதல்வர் பதவி கொடுத் தும், அதற்கு உரிய முக்கியத்துவத்தை நீங்க தரவில்லை. அட்லீஸ்ட் வேலுமணிக்கு இருக்கும் மதிப்பு கூட எனக்கு இல்லை. உங்களுக்கு உங்க சமூகத்தைச் சேர்ந்த வர்கள் மட்டுமே போதும்னு நினைக்கிறீங்களா? முக்குலத்தோர் ஆதரவு உங்களுக்குத் தேவை இல்லையான்னு உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டிருக்கார்.''

""எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவாம்?''

""கவலைபடாதீங்க. உங்களுக்கு உரிய முக்கியத்துவம் இனி தரப்படும். அதே போல் கட்சியையும் இனி, நாம் இருவரும் சேர்ந்தே நிர்வகிப்போம்ன்னு சொன்ன எடப்பாடி, கட்சியின் ஐ.டி. விங்கை, நான்கு மண்டலமாகப் பிரித்து, அதில் இரண்டு விங்கிற்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர் களையும் மற்ற இரண்டில் தன் ஆதர வாளர்களையும் அப்போதே நியமிச்சிருக் கார். இதன்படிதான் சென்னை மண்டலத் துக்கு ஆஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் மண்டலத்துக்கு கோவை சத்யன், மதுரை மண்டலத்துக்கு ராஜ்சத்யன், கோவை மண்டலத்துக்கு சிங்கை ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டதா அறிவிப்பு வெளியாச்சு. அதேபோல் கட்சிப் பதவிகளிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்து தங்கள் ஆட்களை நியமிக்கத் திட்டம் வகுத்திருக்கிறார்கள்.''

""எப்படி?''

""இப்போதிருக்கும் மா.செ.க்களிடம் ஏற்கனவே எடப்பாடி, வேலுமணி தரப்பு ஏரி மராமத்துப் பணிகளின் அடிப்படையில் ஏகத்துக்கும் வசூல் செய்திருக்கிறதாம். இந்த நிலையில் சிறிய மாவட் டங்களை இரண்டாக்கியும் பெரிய மாவட்டங் களை மூன்றாக்கியும் புதிய மா.செ. பதவிகளில் தங்கள் ஆட்களை சரிக்குச் சரியாக அமர்த்து வதுன்னும் அவர்கள் இருவரும் முடிவெடுத்திருக் காங்களாம். குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தை பிரித்து, அதில் ஒன்றுக்கு அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனை மா.செ.வாக்கலாம்னு அப்போது ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி சொன்னாராம்.''

""ராஜேந்திர பாலாஜியை ஓரங்கட்டி மாஃபாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி என்ன?''

""பல காரணங்கள் இருக்குது. அத்துடன், பொதுவாகவே தென்மாவட்டங்களில் நாடார் சமூகத்திற்கு எடப்பாடி அரசு முக்கியத்துவம் தராமல் ஒதுக்குதுங்கிற விமர்சனம் கடுமையான இருக்குது. தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கப் பொதுச் செயலாளரான சதீஷ் மோகன், எடப்பாடித் தரப்பு, எப்படியெல்லாம் தங்கள் சமூகத்தை ஓரங்கட்டுதுன்னு, அவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து போர்க்கொடி தூக்கியிருக்காரு. அதேபோல் தங்கள் சமூக உட்பிரிவினர்களை ஒன்றிணைக்கும் பணியிலும் அவர் இறங்கியிருக் காராம். இதையறிந்த எடப்பாடி, அவர்கள் தரப்பைக் குளிரவைக்க, அவர்கள் சமூக அமைச்சரான மா.ஃபாவுக்கு மா.செ. பதவியோடு கூடுதல் இலாகாவையும் ஒதுக்கலாம்ன்னும் முடி வெடுத்திருக்காராம். ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஊராட்சிக்கு ஒரு ஒன்றிய செயலாளர், பெரிய மாவட் டங்களை மூன்றாகப் பிரித்து தனித்தனி மா.செ.க்கள்னு எடப்பாடி ப்ளான் பண்ணுறாராம்.''

""முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரோட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, காங்கிரஸ் தரப்புக்கு முதலில் காவல்துறை அனுமதி கொடுக் கலையாமே?''

""உண்மைதாங்க தலைவரே, கொரோ னாவைக் காரணம் காட்டி அன்று காலை 7 மணிவரை, அனுமதி தராமல் போலீஸ் இழுத் தடிக்க ஆரம்பிச்சிது. அதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ். அழகிரி, நேரடியாக முதல்வர் எடப்பாடியையே தொடர்பு கொண்டு இது குறித்துப் பேச, அடுத்த அரைமணி நேரத்தில் அனுமதி கிடைத்திருக்கு. இதைத் தொடர்ந்து, கே.எஸ்.அழகிரியும் எம்.பி.க் களான டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், வசந்தகுமார் உள்ளிட் டோரும் அஞ்சலி செலுத்தியிருக்காங்க. இப்போது கட்சி சீனியர்களோ, அழகிரி எதுக்கு இதுக்காக எடப்பாடியிடம் பேசனும்? போராட்டம் நடத்தியிருந்தா மக்கள்கிட்ட கவனம் பெற்றிருக் கலாம். தி.மு.க. கூட் டணியில் இருந்துக் கிட்டு எடப்பாடி யுடன் நட்பான்னு புகார்க் குரலை எழுப்பறாங்களாம்.''

""நானும் ஒரு முக்கியமான தக வலை பகிர்ந்துக் குறேன்... அரசு நிர்வாகத்தில் ஊழி யர்களின் எண்ணிக் கையைக் குறைப்பதன் மூலம் அவர்களுக் கான செலவினங் களைக் குறைக்கலாம் என்பது உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் பாலிஸி. அதனால் தான் அது அரசுப் பணியாளர்களைக் குறைக்கனும்னு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடு களையும், மாநில அரசுகளையும் தொடர்ந்து நிர் பந்திக்கிது. இதன் அடிப்படையில் தான், கடும் எதிர்ப்புக்கு நடுவிலும் தற்போது எடப் பாடி அரசு, முதற்கட்டமாக புதிய நியமனங்களுக்குத் தடை விதிச்சிருக்கு. ஆட்குறைப்பு செய்தால்தான் கடன் கிடைக்கும்.''

_______________

காசி விவகாரம்! நக்கீரனிடம் விசாரணை!

காதலிக்கிறேன்; திருமணம் செய்துகொள்கிறேன்...’ என்று பெண்கள் பலரையும் ஏமாற்றிய "வீடியோ-பிளாக்மெயில்’பேர்வழி' kkகாசி குறித்த புலனாய்வுக் கட்டு ரைகளை, நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், நமது நிருபர் மணிகண்டனைத் தொடர்புகொண்டு, ""அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி புகார் அளித்திருக்கிறார். நக்கீரனில் செய்தி வெளியிட்டது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டும்'' என்று அழைத்தார். அதனைத் தொடர்ந்து, உதவி காவல் கண்காணிப்பாளர் முன் நிருபர் மணிகண்டன் 22-ஆம் தேதி நேரில் ஆஜராகி, உரிய விளக்கம் அளித்துள்ளார்.

நக்கீரனைப் பொறுத்தவரை, அதன் செய்திகள் சார்ந்த ஆவணங்கள், படங்கள், வாக்குமூலங்கள் ஆகியவை அரசுத் தரப்பின் விசாரணைக்கு பெரிதளவில் உதவியுள்ளன. வீரப்பன் காட்டில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் நிலை குறித்து விசாரித்த நீதிபதி சதாசிவா கமிஷனில் தொடங்கி, ஜல்லிக்கட்டு கலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் என நீதி விசாரணை மற்றும் காவல்துறை விசாரணைகளிலும் விசாரணை கமிஷன்களிலும் நக்கீரன் தன் ஒத்துழைப்பை வழங்கத் தவறியதில்லை. காசி விவகாரத்திலும் அதே ஒத்துழைப்பைத்தரத் தயாராக உள்ளது. குற்றவாளிகளில் ஒருவர்கூட தப்பிக்காதபடி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

-ராம்கி