"ஹலோ தலைவரே தமிழகம், புதுவை உட்பட பல்வேறு மாநிலங்களிலும் 19ஆம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாவே நடந்திருக்கு. நம்ம தமிழக வாக்காளர்கள், இந்தியா விடியணுங்கிற ஆர்வத்தோடு வாக்குச்சாவடிகளுக்கு வந்திருக்காங்களே?''

"ஆமாங்க தலைவரே, 7 கட்டங்களாக நடத்தப்படும் இந்தத் தேர்தலில், நம் தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் தொடங்கி, மேற்கு வங்கம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 19ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஜூன் 1ஆம் தேதிவரை மற்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கின்றன. தமிழகம் முழுக்க அமைக்கப்பட்டிருந்த 68,321 வாக்குச் சாவடிகளில் பெரும்பாலானவற்றில், வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே,நம் வாக்காளர்கள் தலைக்கு மேல் கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல், தங்கள் வாக்குகளை ஆர்வமாகப் பதிவுசெய்ய ஆரம்பிச்சிருக்காங்க.தேர்தல் நடக்கும் பெரிய மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் தான், அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு 19ஆம் தேதியே நடந்திருக்கு. நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத்தின் தலையெழுத்தை இந்தத் தேர்தல் மூலம் எழுதும் முயற்சியில் வாக்காளர்கள் இருக்காங்க.''

rr

"ஆமாம்பா, இடையில் அதிகார எந்திரங்கள் மூலம், முடிந்தவரை அடிச்சி ஆடும் முயற்சிகள் நடக்கும். அதை எல்லாம் கடந்து 7 கட்டத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் அமைதியாக நடத்தி முடிக்கணுமே?''

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, பிரதமர் மோடியைப் பொறுத்தவரை எப்படியும் மூன்றாவது முறையாகவும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும்னு துடிக்கிறார். ஆனால், மோடி குரூப் எதிர்பார்த்ததற்கு மாறாகவே வடமாநிலங்களின் தட்பவெப்பமும் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறிக்கிட்டு இருக்குது. இருந்தாலும் நினைச்சதை சாதிச்சிடனுன்னு சகல அஸ்திரங்களையும் கையில் எடுக்க டெல்லி பரபரக்குது. இதுக்கிடையில் கடந்த 16ஆம் தேதி, ஒன்றிய உளவுத்துறை தமிழகத் தொகுதிகளின் பல்ஸ்ரேட் பற்றி கொடுத்த ரிப்போர்ட்டைப் பார்த்த மோடி, முகம் இறுகிப் போய்விட்டாராம். தான் பலமுறை பிரச்சாரப் படையெடுப்பை நடத்தியும், தமிழகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதை அவரால் ஜீரணிக்க முடியலையாம். அதிலும் பா.ஜ.க.வின் முக்கிய தலைகளுக்கே வெற்றி வாய்ப்பு இழுபறியாக இருப்பதையறிந்த அவர், நீங்கள்லாம் என்ன செய் வீங்களோ தெரியாது. நீலகிரி, கோவை போன்ற சில முக்கிய தொகுதிகளிலாவது எனக்கு வெற்றிச் செய்தி வந்தாகணும் என்று, மாநில பா.ஜ.க. நிர் வாகிகளுக்கு உத்தரவிட் டாராம். இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு முதல் நாள் வரை, பா.ஜ.க. குறிவைத்த சில தொகுதிகளில் கரன்சித் தாள்களின் உரசல் சத்தம் அதிகமாகக் கேட்டிருக்கு.''

"கோவையில்தான் குளிரக் குளிர அதிகமாக கரன்சி மழை பெய்ததாமே?''”

"ஆமாங்க தலைவரே, கோவை பா.ஜ.க. வேட்பாளர் தரப்புக்கு நிலைமை மோசமாக இருக்கிறதாம். தோற்றால் டெல்லிப்பக்கம் தலைகாட்டமுடியாது என்று நினைத்த அவர் தரப்பு, அங்கிருக்கும் வாக்காளர் களுக்கு ஜீபே மூலமும் பண விநியோ கத்தை விறுவிறுப்பாகச் செய்திருக்கிறது. இதையறிந்த தி.மு.க. தரப்பு, பணம் விநியோகித்தவர்களின் பெயர்களை யும் குறிப்பிட்டு புகார் கொடுத்திருக் கிறது. அதேபோல், அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி தரப்பை வைத்தே, அவரது தொண்டாமுத்தூர் சட்ட மன்றத் தொகுதியை கரன்சி மழையில் தொப்பலாகக் குளிப்பாட்டி இருக்கிறது பா.ஜ.க. முதலில் தயங்கிய வேலுமணியை, டெல்லியே தொடர்புகொண்டு, "இன்னும் எதற்காக அந்த எடப்பாடிக்கு உழைக்கறீங்க? நம்ம வேட்பாளரை கவனிங்க. அப்பதான் உங்க எதிர்காலம் பிரகாசமா இருக்கும்'’என்றபடி அவரைத் தங்கள் பக்கம் நகர்த்தியதாம். இதனைத் தாமதமாகத் தெரிந்து கொண்ட எடப்பாடி, கடும் கோபத்தோடு, வேலுமணியைத் தொடர்புகொண்டு அவருக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடத்தினாராம். இதனால் வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே இப்போது பெரும் மனவருத்தம் ஏற்பட்டிருக் கிறதாம். இவர்களுக்கு இடையில் தீப்பிடித்ததில், தாமரைத் தரப்புதான் சில்லிப்பாகக் குளிர் காய்ந்ததாம்.''”

Advertisment

"அதேபோல், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்கள் மத்தியிலும் கரன்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, பெரும்பாலான தொகுதிகளில், வாக்குகேட்டு வரும் வேட்பாளர் களிடமே, "எங்களுக்கு எப்ப பணம் கொடுப் பீங்க?'’என பலரும் வாய்விட்டுக் கேட்பதைப் பார்க்க முடிந்தது. இதனால், கொடுக்காமல் ஒன்றும் ஆகாது என்பதைப் புரிந்துகொண்ட பிரதான கட்சிகள் அனைத்துமே, கடைசி நாட்களில் கரன்சி விநியோகத்தில் இறங்கின. மோடியின் ஆர்வம் குவிந்திருக்கும் தொகுதிகளில் ஒன்றான நீலகிரியில், எப்படியாவது கரையேறி விடவேண்டும் என்ற தவிப்போடு, பா.ஜ.க. எல்.முருகன் தரப்பு, கரன்சி விநியோகத்தில் இறங்கியது. இதைக்கண்டு தி.மு.க.விடமும் எதிர்பார்ப்பு உருவானது. இதையறிந்த சூரியத் தரப்பும் ஓட்டுக்கு 5 ஆயிரம் வரை தாராளம் காட்டியது. அதேபோல் அ.தி.மு.க. ஓட்டுக்கு 3 ஆயிரமும், பா.ஜ.க. 2 ஆயிரமும் தயங்காமல் கொடுத் தன. எனவே அங்கே வாக்காளர்கள் முகத்தில் அதிக வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், தோத்தகிரி தி.மு.க .ஒ.செ.வான கண்ணன், பறக்கும் படையினரிடம் சிக்கிக்கொள்ள... அதன்பின் மற்ற கட்சிகள் இந்தப் பட்டுவாடா விசயத்தில் ரொம்பவும் கவனமாக நடந்து கொண்டன. இந்த வகையில் நீலகிரி தொகுதியில் உள்ள வாக்காளர்களில் சரிபாதி பேர், கரன்சி மழையில் குளித்திருக்கிறார்கள்.''”

’"கடைசிநேரக் களத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் அறிமுகப்படுத்திய பாடல் ஒன்று அதிக அளவில் வைரலாகியிருக்கிறதே?''”

’"ஆமாங்க தலைவரே, பிரச்சாரத்திற்கு இறுதி நாளான கடந்த 17ஆம் தேதி "தேசத்தின் துயரக் குரல்' என்ற தலைப்பில், ஒப்பாரி பாணியிலான பிரச்சாரப் பாடல் ஒன்று, தி.மு.க. தரப்பில் இருந்து வெளி யாகி படுவைரலாகி இருக்கு.’"நாடு இப்ப மோசம் போச்சே'’ என துயரம் சொட்ட ஒலிக் கும் அந்தப் பாடல், மோடி தலைமையிலான, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் கொடுமைகளை எல்லாம் கண் ணீர்க் குர லில் பட்டியல் போட்டுக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறதாம். இதைத் தனது எஸ் பக்கத்தில் அறிமுகப்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ்,’இது ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். நாம் இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?’ என்ற கேள்வியையும் வாக்காளர்களுக்கு எழுப்பியிருந்தார். இதே பாடலை பிற துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்ட தால், மொழிமாற்றக் குறிப்புகளோடு அந்தப் பாடல் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.''”

"டாக்டர் ராமதாஸ் அப்செட்டில் இருக் காராமே?''

"ஆமாங்க தலைவரே... பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ், கடைசிவரை அ.தி.மு.க.வோடு தான் கூட்டணி என்று பிடிவாதம் பிடித்ததோடு, அன்புமணியையும் தன் வழிக்குக் கொண்டுவந் தாராம். இதன் மூலம் தங்கள் தரப்புக்குக் கிடைக்கும் ஸ்வீட் பாக்ஸுசுள் அனைத்தும், தன் கைக்கே வரும் என்று அவர் எண்ணியிருந்தாராம். இது அவர் குடும்பத்துப் பெண்களை நெருடிய நிலையில், டெல்லியில் இருந்து ராமதாஸுக்கு அந்த அதிரடி போன் வந்திருக்கிறது. அதில் பேசிய அந்த முக்கியமான பவர் புள்ளி, ’நீங்க எங்க கூட்டணிக்கு வராட்டி, சி.பி.ஐ. கையில் இருக்கும் வழக்கில், உங்கள் மகன் அன்புமணி, உடனடியாகக் கைது செய்யப்படுவார்’ என்று எச்சரித்தாராம், இதையறிந்த தைலா புர குடும்பத்து பெண் கள் அனை வரும் நிலைகுலைந்து போன தோடு, பா.ஜ.கவுடன் தான் நாம் கூட்டணி வைக்கவேண்டும் என்று வலியுறுத்திய தோடு, இதற்கு மாறாக ராமதாஸ், யாரிடமும் போனில் பேசிவிடாதபடி, அன்று இரவு முழுக்க விழித்திருந்து அவரைக் காவல் காத்தார்களாம். அன்புமணியையும் அவர் குடும்பத்தினரின் உறுதியே அமைதியாக்கிவிட்டதாம். எனினும், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் கொஞ்சமும் விருப்பமில்லாத டாக்டர் ராமதாஸ், பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்து விட்டாராம். மருமகள் சௌமியாவுக்காக தருமபுரி தொகுதிக்கு அவர் சென்றபோதும், மனப் பதட்டத்தில் சௌமியாவின் பெயரையே அவர் சொல்லவில்லையாம். அதேபோல் தோப்பூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிடிவாதமாக அழைத்துச் செல்லப்பட்ட அவர்,’ "கூட்டமே இல்லை. இதுல நான் எப்படி பேசுறது?' என பாதியிலேயே கிளம்பி வந்துவிட்டாராம். இன்னும்கூட டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. கூட்டணியை மனதளவில் ஏற்க முடியாமல் தவிக்கிறார் என்கிறார்கள் பாட்டாளித் தரப்பினர்.''’

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கிறேன்... கடந்த 17-ந் தேதி மாலை பிரச்சாரத்தை முடித்த ஸ்டாலின், சற்று ஓய்வுக் குப் பின் இரவு, அமைச்சர்களிடமும், தி.மு.க. மா.செ.க்களிடமும் அவரவர் லிமிட்டில் உள்ள தொகுதிகளின் நிலவரம் குறித்து நீண்டநேரம் விவாதித்திருக்கிறார். அப்போது பலரும், ’100 சதவீத வெற்றி நமக்குத்தான் தலைவரே’ என்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் சொல்லியிருக்காங்க. இருந்தபோதும் உளவுத்துறை மூலம் தன் கைக்கு வந்த ஒரு ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் சிலரிடம் சில கேள்விகளை எழுப்பி, தன் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டிருக்கிறார். இதன்பின்னரே மனதளவில் அவர் ரிலாக்ஸ் ஆனாராம்.''”