2024ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் காரணமாக, ஆண்டின் நிறைவே பரபரப்பை எகிறவைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆளும் பா.ஜ.க. அரசு, ஓர் அரசு விழாவைப்போல் மாற்றிவருகிறது. இதன்மூலம் பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்காக வாக்குவங்கியை வலுப்படுத்தும் உத்திகளை வகுத்துவருகிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு யாருக்கெல்லாம் அழைப்பிதழ் வழங்கப்படுகிறது, யாரெல்லாம் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
அயோத்தி ராமர் கோவிலைப் பற்றி பேசும்போது, ஏற்கெனவே அங்கிருந்த பாபர் மசூதியையும், அதனை இடித்த தையும், அதற்கென அத்வானி தலைமையில் நடத்தப்பட்ட ரத யாத்திரையையும் மறந்துவிட முடியாது. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் தான் ராமர் கோவில் பிரச் சனையின் முக்கிய சம்பவமான பாபர் மசூதி இடிப்புக்கான தூண்டுதலை முன்னின்று நிகழ்த்தியவர்கள். இதன்காரணமாக இந்துத்வா அமைப்பினர் மத்தியில் அவர்கள் ஹீரோக்களாக வும், மத நல்லிணக்கத்தை பேணுவோர் மத்தியில் மதவாதத் தலைவர்களாகவும் காட்சிதருகிறார்கள். மோடி பிரதமராக உருவெடுத்ததிலிருந்தே அத்வானி மீதான ஹீரோயிசத் தன்மையை நீர்த்துப் போக வைப்பதற்காக, அத்வானியை ஓரங் கட்டத் தொடங்கினார். அதன் தொடர்ச்சி யாக, ராமர் கோயில் அறக்கட்டளை சார்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான அத்வானிக்கும், முரளிமனோகர் ஜோஷிக்கும் அழைப்பிதழை வழங்கிய போதே, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வேண்டா மென்று கேட்டுக்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களின் வயோதிகம் காரணமாகவே விழாவில் கலந்துகொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொண்டதாக உடனடியாக விளக்கமளித்தனர்.
இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் எக்ஸ் தளத்தில், 'ராமர் கோவில் இயக்கத்தின் முன்னோடிகளான அத்வானிஜி மற்றும் முரளி மனோகர் ஜோஷிஜி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சி செய்வோமென்று கூறினார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் இருவரும் கலந்துகொள்வார் களா என்பது ஜனவரி 22ஆம் தேதிதான் தெரியவரும்.
இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டதென்றும், அந்நிகழ்ச்சியில் சி.பி.ஐ.(எம்) கலந்து கொள்ளாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி யும் கும்பாபிஷேக விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி, இன்னமும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி, கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள் ளப்போவதாக அறிவித்துள்ளார்.
-ஆதவன்