2019 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் கிடைத்த பிரம்மாண்ட வெற்றி காரணமாக இந்த முறையும் ராகுல்காந்தி வயநாடு தொகுதியி லேயே போட்டியிடுகிறார்.
கடந்த 2019 தேர்தலில் போட்டியிடும்போது இங்கு 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். அத்தேர்த லில் 7,06,367 வாக்குகள் பெற, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி. சுனீர் 2,74,597 வாக்குகளே பெற்றிருந்தார்.
2024-ன் முதல்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் கள் பட்டியலில் வயநாட்டில் ராகுல் போட்டியிடு வது உறுதிசெய்யப்பட்டிருந்தது. ராகுலுக்கு முன்பே வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனிராஜா, வயநாடு தொகுதியில் போட்டியிடப்போவதாக அக்கட்சி அறிவித்திருந் தது. ஆனிராஜா, இந்திய மகளிர் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்துவருகிறார். மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியா கூட்டணியின்கீழ் இணைந்து போட்டியிடும் நிலையில், கேரளாவில் மட்டும் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுவதை பா.ஜ.க. விமர்சனம் செய்துவருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியும், “"இந்தியா கூட்டணி யில் இருந்தும் கேரளாவில் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளதும் ஆனிராஜாவுக்கு எதிராக ராகுல் போட்டியிடுவதும் மக்களுக்கு தவறான சேதியைத் தரும். இந்தியா கூட்டணிக்கு இது எதிர்மறையாக அமையும்'” என விமர்சித்துள்ளது. இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சியிலுள்ள ஒரே மாநிலம் கேரளாதான். இங்கு இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது கட்சியினரைக் கோபமடையச் செய்துள்ளது என்கிறார்கள்.
வேட்பாளரான ஆனிராஜா கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பிரச்சாரம் தாய்மொழியான மலையாளத்தில் இருப்பதும் அவரது பலம். மேலும், “"வயநாடு தொகுதிக்குத் தேவை இங்கேயே தங்கியிருந்து தொகுதி மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் ஒரு வேட்பாளர். மாறாக, விருந்தினராகவோ, டூரிஸ்ட்டாகவோ வந்துசெல்லும் வேட்பாளரல்ல. தேசிய காங்கிரஸ் தலைமை, வயநாட்டில் போட்டியிடச் செய்வதன் மூலம் ராகுலை வெறும் கேரள காங்கிரஸ் தலைவராக சுருக்குகிறது''’என ராகுலைப் போட்டுத் தாக்குகிறார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்தே ஆனிராஜா தீவிரப் பிரச்சாரம் செய்துவருகிறார்.
மாறாக, ராகுல் நாடுமுழுவதும் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்வதால் தனது வயநாடு தொகுதிக்காக அதிகபட்சம் மூன்று நான்கு விசிட்டுகளை ஒதுக்கினாலே அதிகம். மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் ராகுலுக்காக வாக்குச் சேகரிக்க வேண்டிய நிலை.
வயநாடு தொகுதியில் போட்டியை மேலும் பலப்படுத்தும்விதமாக, கேரள பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. சுரேந்திரனை, ராகுலுக்கு எதிராக நிறுத்தியுள்ளது பா.ஜ. மஞ்சீஸ்வரம் சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பத்தனம்திட்டாவில் போட்டியிட்டிருந் தாலும் சுரேந்திரன் இதுவரை வெற்றிக்கணக்கைத் தொடங்கவே இல்லை. ஆனாலும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இவர் வேகம்காட்டியதால், கட்சியின் கவனத்துக் குள்ளாகி மாநில பா.ஜ.க. தலைவராக உயர்ந்தார். ஆனால் இவர் மீது மாநிலத்தில் 242 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
2019-ல் அமேதி, வயநாடு இரு தொகுதி களிலும் போட்டியிட்ட ராகுல், அமேதி தொகுதி யில் ஸ்மிர்தி ரானிக்கு எதிராகத் தோல்வியைத் தழுவினார். சுரேந்திரனின் துணைக்கு கேரள மாநில பா.ஜ. துணைத்தலைவர் கே.எஸ். ராதாகிருஷ்ண னையும் அனுப்பியுள்ளது. ராகுலை நெருக்குதலுக்கு உள்ளாக்க வயநாடு பிரச்சாரத்துக்கு வந்த ஸ்மிர்தி ரானி, "வயநாடு தொகுதியில் வெற்றிபெற, தீவிரவாத அமைப்புகளின் ஆதரவைக் கோருகிறார் ராகுல். அமேதியைப் போலவே வயநாடு தொகுதியிலும் ராகுல் தோல்வி காண்பார்'’என பேசியுள்ளார்.
பாப்புலர் ஃபராண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாகச் சித்தரித்து ஸ்மிருதி இதுபோல் பேசியுள்ளார். மேலும், ராகுலின் வேட்புமனு தாக்கலின் போதான பேரணியில் இவ்வமைப்பின் கொடிகளைத் தவிர்க்கும்படி காங்கிரஸ் கேட்டுக்கொண்டதும் சர்ச்சையாகியுள்ளது.
ஏப்ரல் 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்செய்ய வந்தபோது, மாபெரும் கூட்டத்தைத் திரட்டி ராகுலை வரவேற்றது கேரளா காங்கிரஸ். அதேபோல வயநாடு பிரச்சாரத்தின்போது திரண்ட மாபெரும் கூட்டமும் எதிர்க்கட்சிகளை விழியுயர்த்த வைத்துள்ளது. “"வயநாடு மக்களுடன் எனக்கு உறவு உள்ளது. நீங்கள் அனைவருமே என் குடும்ப உறுப்பினர்கள். நமது கருத்துகளில் சிலவற்றில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நமக்கிடையில் மகத்தான உறவு இருப்பதை மறுக்கமுடியாது'' என மக்களை தன் குடும்ப உறுப்பினர்களாகக் கருதிப் பேசிய அவர் பேச்சு பலரையும் ஈர்த்தது. அதேபோல் கம்யூனிஸ்ட்டு களைத் தாக்கிப் பேசுவதையும் அவர் தவிர்த்தார்.
அதேசமயம், “மோடியும் அமித்ஷாவும் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயல்வதாக தனது உரையில் வெளுத்துவாங்கி னார்.
தற்போதைய நிலவரப்படி, கம்யூனிஸ்ட்டும், பா.ஜ.க.வும் பிரபலமான இரு வேட்பாளர்களை ராகுலுக்கு எதிராக நிறுத்தியிருக்கும் நிலையில், கடந்த தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது சிரமம். ஆனால் ராகுலின் வெற்றி உறுதி.