கொரானா பணிக்காக கடந்த 15ஆம் தேதி பெருமுக்கல் அருகே சென்றுகொண்டிருந்தார் திண்டிவனம் சார் ஆட்சியர் அனு. அப்போது எதிரில் டிப்பர் லாரி ஒன்று கருங்கல் சல்லி, சக்கை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அதை நிறுத்த சொல்லி ஆய்வு செய்தார் அனு. அந்த டிப்பர் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என்றும் நல்லாளம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்வரது கல்கிரஷரில் இருந்து அந்த லாரி சல்லி ஏற்றி வந்துள்ளதும் தெரிய வந்தது.

cc

முறையான அனுமதி இல்லாமல் விதிமுறை களை மீறியும் டிப்பரில் ஜல்லி ஏற்றிவந்துள்ளதை கண்டறிந்த சார் ஆட்சியர் அனு, லாரியை பறிமுதல் செய்து காவல்துறையில் ஒப்படைத்து முறைப்படி புகார் அளிக்குமாறு கீழ்அருங்குனம் கிராம அலு வலர் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார் அதன்படி பாலாஜி பிரம்மதேசம் காவல்நிலையத்தில் லாரியை ஒப்படைத்து புகார் எழுதிகொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த லாரி முதலாளி சுரேஷ் மீது வழக்கு போடாமல் லாரி டிரைவர் ரஜினி மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

சுரேஷ், அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத் திற்கு நெருக்கம் என்பதால் அவர் மீது வழக்கு போடாமல் டிரைவர் மீது வழக்கு போட்டுள்ளது போலீஸ் இதற்கு காரணம் சுரேஷ் வீட்டில் தான் இன்ஸ்பெக்டர் சீனிபாபு குடியிருந்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டிவனத்தில் பணிசெய்துவந்தார். ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியில் உள்ளவர்களுக்கு பணி மாறுதல் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு அ.தி.மு.க.வினருக்கு சாதகமாக செயல்படுவதால் அதே திண்டிவனம் சப்டிவிசனில் உள்ள பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு பணிமாறு தல் பெற்று சென்றுள்ளார். அந்தக் கரிசனம் தான் சுரேஷை தப்ப வைத்திருக்கிறது எனக் குற் றச்சாட்டுக்கள் நமது அலுவலகத்திற்கு வந்ததை யடுத்து அதுபற்றி தீவிர விசாரணை செய்தோம்.

Advertisment

சார் ஆட்சியர் அனுவால் பறிமுதல் செய்யப் பட்ட டிப்பர் லாரி (பச 21 ஐ 1442) சுரேஷூக்கு சொந்தமானது என்பது உண்மை. இவர் அ.தி.மு.க. பிரமுகர். அமைச்சர் பெயரை சொல்லி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் காரியம் சாதித்து கொள்வது வழக்கம். அதேபோல் தான் எங்கள் மாவட்டத்திலும் நடக்கிறது. இதில் அமைச்சருக்கு நேரடித் தொடர்போ தலையீடோ இல்லை. ஆனால், அமைச்சரின் பெயரை இவரைப் போன்ற பலரும் பயன்படுத்துகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் கட்சிகாரர்களுக்கு அனுசரனையாக அதிகாரிகள் நடந்துகொள்வது எல்லோரும் அறிந்ததுதான். அதேபோல்தான் இன்ஸ்பெக்டர் சீனிபாபுவும் நடந்துகொள்கிறார். பல்வேறு விஷயங்களில் அட்ஜஸ்மன்ட் டைப் உள்ளவர்.

சார் ஆட்சியர் வாகன தணிக்கையில் சிக்கிய சுரேண் டிப்பர் லாரி நல்லாளம் ராமலிங்கம் என்பவரது கிரசரில் இருந்து ஜல்லி ஏற்றிவரப்பட் டது. இவர் தி.மு.க. பிரமுகர். அதனால் இம் மாவட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. இருதரப்பினருக் குமே கல்குவாரிகள், கல் உடைக்கும் கிரஷர்கள், அதை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் சொந்தமாக உள்ளன. இதுபோன்ற தொழில் விஷயத்தில் இருகட்சியினருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து போவார்கள் என்கிறார்கள் விஷயமறிந்த அப்பகுதி பிரமுகர்கள்.

cc

Advertisment

இதுகுறித்து பிரம்மதேசம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சீனிபாபுவிடம் கேட்டோம். ""சார் ஆட்சியர் வாகன தணிக்கையின்போது அனுமதி யின்றி ஜல்லி ஏற்றிவந்த டிப்பர் கிராம நிர்வாக அலுவலர் மூலம் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில் லாரியை பறிமுதல் செய்து அதன் ஓட்டுனர் மீது முறையாக வழக்கு பதிவு செய்துள்ளோம். அந்த டிப்பர் லாரி காவல் நிலைய வளாகத்தில்தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிடும் சுரேஷ் என்பவர் இரண்டு கால்களும் நடக்கமுடியாத மாற்றுத் திறனாளி. அவர் வீட்டில் நான் குடியிருக்கவில்லை. திண்டி வனத்திற்கு பணிமாறுதலில் வந்ததில் இருந்து ஒரே வீட்டில்தான் குடியிருக்கிறேன். இதில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை. மேலும் பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு பணிமாறுதலில் வந்து 20 நாட்களே ஆகின்றன. அதிலும் முழுநேரமும் கொரானா நோய் தடுப்பு பணியிலேயே உள்ளேன். என்னைப்பற்றிய குற்றசாட்டுகளில் எதுவும் உண்மையில்லை. வீண்பழி சுமத்தும் நோக்கத்தோடு இந்த தகவலை உங்களுக்கு அனுப்பியுள்ளனர்'' என்று மறுக்கிறார் இன்ஸ்பெக்டர் சீனிபாபு.

11.05.1999 நமது நக்கீரன் இதழில் "அழிக்கப் படும் வரலாற்று சின்னங்கள்' என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கல் குவாரி கிரானைட் குவாரிகள் அரசிடம் பெற்ற அனுமதியை மீறி முறைகேடாக மலைகளை உடைத்து கபளீகரம் செய்கிறார்கள். இதனால் தொன்மை வாய்ந்த வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்ற விரிவான செய்தியை வெளியிட்டோம் அப்போதுமுதல் இப்போதுவரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கல்குவாரிகளில் அவ்வப்போது நடைபெறும் முறைகேடுகளை வெளியிட்டு வந்துள் ளோம். பல்வேறு பிரமுகர்கள் உயர்நீதிமன்றங்களில் வழக்குதொடுத்து முறைகேடுகளை தடுத்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் அவ்வப்போது நடத்திய போ ராட்டங்களின் விளைவாலும், நீதிமன்றத் தலையீட் டாலும் முறைகேடுகள் இப்போது குறைந்துள்ளன'' என்கிறார் வானூரைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்.

cc

இதுகுறித்து (சி.பி.எம்.எல்.) கம்யூனிஸ்ட் கட்சி மா.செ வெங்கடேசன் கூறும்போது, ""கள்ளக்குறிச்சி- விழுப்புரம் மாவட்டங்களில் கல்குவாரிகள் கிரானைட் குவாரிகள் பல இடங்களில் அரசு அனுமதியோடு செயல்படுகின்றன. அரசுக்கு சொந்தமான இடங்களில் குத்தகை அடிப்படையிலும் குவாரிகள் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட குவாரி முதலாளிகள் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களிலும் அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. அதோடு உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு நாச்சியார்பேட்டை, பூ.மாம்பாக்கம், பச்சைவெளி, கல்லமேடு, நல்லாளகுப்பம், மதியனூர், மட்டிகை, வானாம்பட்டு, கு.கள்ளக்குறிச்சி, ஆகிய சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அருகில் உள்ள கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் கூழாங்கற்கள் மிக அதிக அளவில் நிலத்தில் கிடைக்கின்றன.

இந்த கூழாங்கற்களை மண்ணை வெட்டி சலித்து சைஸ்வாரியாக தரம்பிரித்து விற்பனை செய்கிறார்கள். இந்த கற்கள் போர்வெல் பணிகளுக்கும் வீடுகளில் அழகுப் படுத்தவும் பயன்படுகிறது. இதை வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகிறார்கள். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வருகிறார்கள். இந்த தொழிலை வரைமுறை படுத்தாததால் கூழாங்கற்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களிலும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்திலும் கற்கள் அதிகம் நிறைந்து கிடப்பதால் நிலத்தில் விவசாயம் செய்யமுடியவில்லை.

எனவே தமிழக அரசே நிலங்களை குத்தகை அடிப்படையில் எடுத்து கிராம மக்களை கொண்டே கூழாங்கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இந்த பணி மூலம் பல ஆயிரக்கணக்கான படித்தவர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் வேலை கொடுக்க முடியும். இதன்மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் இப்படி வருமானம் வரக்கூடிய தொழில்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசாங்கம் நடக்கிறது. கனிமவளத்துறை முழுவதையும் அரசே ஏற்று நடத்த முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முறை கோரிக்கை மனுக்களும் போராட் டங்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளோம்'' என்கிறார் வெங்கடேசன்.

கொள்ளையடிக்கும் கும்பலுக்கு அரசு நிர்வாகத்தினரும் ஆளுங்கட்சியினரும் துணை இருப்பதால், அமைச்சர் பெயரைச் சொல்லி சுரண்டிக் கொழுத்து, அதற்கான கமிஷனை பங்கு வைக்கிறார்கள்.

-எஸ்.பி.சேகர்