த்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏற்றப்பட்டு 4 விவசாயிகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

pp

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான பன்வாரியில் சில திட்டங்களைத் தொடங்கிவைக்க, உத்தரப்பிரதேச துணைமுதல்வர் கேசவ் மௌரியா வருவதாக இருந்தது. விவசாயிகள் போராட்டம் குறித்து அஜய் மிஸ்ரா சமீபத்தில் மோசமாக விமர்சனம் செய்திருந்த நிலையில், விவசாயிகள் தரப்பில் அவருக்கெதிராக வலுவான எதிர்ப்பைக் காட்ட திரண்டிருந்தனர்.

இந்நிலையில், கறுப்புக் கொடிகளுடன் திரண்டிருந்த விவசாயிகளின் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட உதவியாளர்களுடன் நான்கு வாகனங் கள் தொடர, அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வந்த கார் மோதியது. கார் மோதியதில் நான்கு விவசாயிகள் மரணமடைந்ததோடு, பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர். விவசாயிகள் மீது கார் மோதியதையடுத்த கலவரத்தில், நான்கு பா.ஜ.க.வினர், பத்திரிகையாளர் ஒருவர் என ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர். கார் ஏற்றப்பட்டதை வீடியோவாகப் பதிவு செய்ததால்தான் பத்திரிகையாளர் மீதும் காரை ஏற்றினர் என்கிறார்கள் விவசாயிகள்.

Advertisment

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி லக்கிம்பூர் கிளம்பினார். சீதாப்பூரில் அவரை காவலர்கள் தடுத்துநிறுத்த முயன்றனர். அவர் களிடம் ஆவேசத்துடன் விவாதம் செய்ததுடன், திரும்பிச் செல்ல மறுத்த ப்ரியங்கா காந்தியை, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தடுப்புக் காவலில் வைத்தனர். போலீசாரின் மிரட்டலுக்குப் பயப்படாமல், ப்ரியங்கா ஆவேசமாகப் பேசும் வீடியோ நாடு முழுவதும் வைரலானது. விருந் தினர் மாளிகையில் தான் தடுத்துவைக்கப் பட்டிருந்த அறையை, துடைப்பம் பிடித்து பிரியங்காகாந்தியே சுத்தம் செய்வதும் வைரலானது. சில மணி நேரத்தில், உத்தரப்பிரதேச போலீஸார் ப்ரியங்கா உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.

priyanka

அதேசமயம், பா.ஜ.க. அமைச்சர் மகனின் வாகனம் விவசாயிகள் கூட்டத்தில் அதிவேகமாகப் புகுந்து, ஆட்கள் மீது ஏறும் வீடியோவும் வெளியாகி பதற்றம் அதிகமானது. டெல்லி, அரியானா, பஞ்சாப் போல விவசாயிகள் போராட்டம் உத்தரப்பிரதேசத்திலும் வலுத்து விடக்கூடாது எனப் பயந்த ஆதித்யநாத் யோகி அரசு, அவசர அவசரமாக மத்திய இணை யமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 15 பேர் மீது கொலைமுயற்சி வழக்கைப் பதிவுசெய்தது.

Advertisment

தவிரவும், இச்சம்பவத்தில் பலியான நான்கு விவசாயிகளுக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ 45 லட்சம் நிவாரணத்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என அறிவித்தது. அதேபோல காயமடைந்த விவசாயிகளுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது.

லக்கிம்பூர் சம்பவத்தில் விவசாயிகள் நட்சத்திரா சிங், தல்ஜித் சிங், லாவேபிரித்சிங், குருவேந்திர சிங் ஆகியோர் பலியாகினர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்கப்பட்ட நிலையில், குருவேந்திர சிங், ஆஷிஷ் மிஸ்ராவின் காரிலிருந்து வந்த துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார் என சம்பவ இடத்தில் போராடிய விவசாயிகளும் அவரது உறவினரான மிஸ்கின் சிங்கும் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையோ குண்டுக் காயம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றுகூறி குருவேந்திர சிங்கின் உறவினர்களும், அவரது குடும்பத்தினரும் அக்டோபர் 5-ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.

ttஅவரது உடலை மீண்டும் முறையாக மறுபரிசோதனை செய்யவேண்டுமென்ற கோரிக்கை விவசாயிகளிடையே வலுப்பெற்றது. தவிரவும், குருவேந்திர சிங்கைச் சுட்டுக்கொன்ற ஆசிஷ் மிஸ்ராவை கைதுசெய்ய வேண்டுமென விவசாயி கள் சங்கக் கூட்டமைப் பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்தது.

ப்ரியங்கா காந்தியை தடுப்புக் காவலில் வைத்து பலமணி நேரங்களுக்குப் பின்னும் அவர் விடுதலை செய்யப் படாததை அடுத்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் பின் சித்து உள்ளிட்ட தலைவர்கள் போராட் டத்தில் இறங்கினர்.

இந்நிலையில் ராகுல்காந்தியும் விவ சாயிகளுக்கு ஆதரவாக லக்கிம்பூர் சென்று விவசாயிகளைச் சந்திக்க லக்னோ வந்திறங்கினார். விவகாரம் வளர்ந்துகொண்டே செல்வதைக் கண்டு உத்தரப்பிரதேச மாநில அரசு ராகுல், ப்ரியங்கா காந்தி லக்கிம்பூர் செல்ல அனுமதி யளித்தது.

ராகுல் காந்தி தனது வாகனத்தில் கிளம்ப ஆயத்தமானபோது, காவல்துறை வாகனம் மூலம் மட்டுமே செல்லவேண்டும், சொந்த வாகனத்தில் செல்லக்கூடாதென கெடுபிடி காட்டியது. இதையடுத்து லக்னோ விமான நிலையத்தில் தர்ணாவில் அமர்ந்தார் ராகுல். அவருடன் பூபேஷ் பாகலும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

pppஇறுதியில் ராகுலை அவரது வாகனத்தில் செல்ல அனுமதிக்க, சீதாப்பூர் வந்து ப்ரியங்கா காந்தியை அழைத்துக் கொண்டு சென்று, கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயக் குடும்பத்தினரைச் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறினர். “"விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். மாறாக, விவசாயிகளுக்கு குரல் கொடுப்பவர்கள் பா.ஜ.க. அரசால் சிறை பிடிக்கப்படுகின்றனர்'’என டுவிட்டரில் கருத்துத் தெரிவித்தார் பிரியங்கா.

விவசாயிகள் போராட்டத்தில் ஏ.பி.பி. செய்தியாளரான ராமன் காஷ்யப் மரணமடைந்தது குறித்து, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் குமார் பிரசாத் கவலை தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திஜேந்தர் என்பவர், “"அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்த எங்கள் மீது கார் வந்து மோதியது. காரில் அமைச்சரின் மகன் ஆசிஷ் உள்ளிட்டவர்கள் இருந்ததை நான் பார்த்தேன்''’என்பவர் பேட்டியளித்துள்ள நிலையில், விவகாரம் சிக்கலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அக்டோபர் 6-ஆம் தேதி நேரில் சென்று சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளித்தார். உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை அக்டோபர் 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

சட்டமன்றத் தேர்தலை உத்தரப்பிரதேசம் எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், விவசாயிகளின் உயிர் பறித்த தாக்குதலும், போராட்டக் களத்தில் ப்ரியங்காகாந்தி காட்டிய ஆவேசமும் அரசியல் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்திராகாந்தியின் சாயலை ப்ரியங்காவிடம் காண்கின்ற யோகி அரசு, தனது மிரட்சியை மறைக்க -கைது -வழக்கு -நிவாரண அறிவிப்பு என நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

________________________________________

தீக்குளித்தவர் மரணம்! மறுதேர்தல் கோரிக்கை!

2021, அக்டோபர் 02-05 இதழில் “"முதல்வர் வீட்டு முன் தீக்குளிப்பு'’செய்தியில், ஜமீன் தேவர்குளத்தின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து மனு நிராகரிக்கப்பட்ட வெற்றிமாறன், தனது வேட்புமனுவை வாபஸ் பெற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணனிடம் காசு கேட்டதாக வெளியான செய்தியை, வெற்றிமாறனின் மனைவி சவரியம்மாள் மறுக்கிறார்.

ff

முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன் தீக்குளித்த நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 50%-க்கும் அதிகமான தீக்காயத் துடன் வெற்றிமாறன் அனுமதிக் கப்பட்டிருந்தார். இக்கட்டான நிலையிலும் நக்கீரன் அலு வலகத்தைத் தொடர்புகொண்ட சவரியம்மாள், தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார்.

"வெற்றிமாறன் முதலில் வேட்புமனுவை அளித்தபோது ஏற்றுக்கொண்டனர். ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளதாகவும் கூறினார்கள். வெற்றிமாறனின் வேட்புமனு ஏற்கப்படக்கூடாது என்பதற்காக முன்னாள் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தரப்பில் செயல்பட்டனர். நாங்கள் வீடு திரும்பியபின், வீட்டு வரி 65 ரூபாய் பாக்கியுள்ளது என்றார்கள். வரி பாக்கியைக் கட்ட அலுவலரைப் பார்க்கப் போனபோது, அவர் அங்கு இல்லை. போனில் பேசியதற்கு மீட்டிங்கில் இருப்பதாக சொல்லி எங்களைத் தவிர்த்தார். இரண்டு நாட்கள் எங்களை வீணே அலையவிட்டு, அலைக்கழித்தனர். பின் அதனையே காரணம் காட்டி கணவரது மனு நிராகரிக்கப்பட்டது.

சூழ்ச்சியால் ராமசாமியின் மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக விசாரணை செய்து, ஜனநாயக முறைப்படி ஜமீன் தேவர்குளத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்'’என தெரி வித்தார்.

சவரியம்மாள் நம்மைத் தொடர்புகொண்டு தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்த சிறிதுநேரத் தில், அக்டோபர் 04-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வெற்றிமாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

-க.சு.