யிற்சி மருத்துவர் வந்தனாதாஸ், போதை அடிமையாக வந்த விசாரணைக் கைதியால் குத்திக்கொல்லப்பட்டது கேரளாவையே அதிரவைத்துள்ளது. கேரள நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கைக் கையிலெடுத்ததுடன் காவல்துறையையும் கண்டித்துள்ளது.

dd

கேரள மாநிலம் கொல்லம் நெடும்பனா அரசுப் பள்ளி ஆசிரியர் சந்தீப். இவர் மதுவுக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி அருகி லுள்ளவர்களுடன் தகராறு செய்வார். இந்நிலை யில் மே 10-ஆம் தேதி போதையில் தகராறு செய்து சண்டையிட, அதில் காலில் காயம்பட்டி ருக்கின்றது. அண்டை வீட்டார் போலீஸில் புகார் செய்ய, போலீசார் அவரை விசாரணை செய்வதற்காக அழைத்துச் சென்றதுடன் காலில் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சையளிக்க கொட் டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விதி அங்கேதான் விளையாடியிருக் கிறது. பயிற்சி மருத்துவரான வந்தனாதாஸ்தான் அப்போது அங்கே இருந்தார். அவர் சந்தீப்பின் காயத்தைச் சுத்தம் செய்து கட்டுப்போட்டுக் கொண்டிருந்தார். தொடர் போதையின் காரணமாக ஏற்பட்ட மூர்க்கம் அனைத்தும் சேர்ந்து திடீரென அவர் சிகிச்சையளித்த பயிற்சி மருத்துவரைத் தாக்கத் தொடங்கினார்.

Advertisment

துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த கத்திரி, அறுவைச் சிகிச்சைக்கான ஆயுதங்கள் கிடைக்க, அதனைக் கொண்டு முரட்டுத்தனமாக வந்தனா வை சரமாரியாகக் குத்தினார். சந்தீப்பின் தாக்குதலில் அவருக்கு 11 கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தடுக்கவந்த போலீஸா ரையும் தாக்க முயன்றார். பயிற்சி மருத்துவரான வந்தனா இதில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணைக் கைதியின் கத்திக்குத்தில் பயிற்சி மாணவி உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவ, கேரள அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இதனையடுத்து கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமே முன்வந்து எடுத்து விசாரித்தது. "இத்தகைய சம்ப வங்களைக் கையாள போலீசார் பயிற்சி பெற்றவர் கள்தானே. விசாரணைக் கைதியோடு உடன்சென்ற போலீசாரிடம் துப்பாக்கி இல்லையா? இந்த சம்பவம் மருத்துவர்கள், பயிற்சி மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசு என்னசொல்லப் போகிறது?''’என கேள்வியெழுப்பியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், “"நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பணி யிலிருக்கும் மருத்துவர்களை தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது''” என்று கூறி, வந்தனாதாஸ் மறைவுக்கு அஞ்சலியையும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

Advertisment