"ஹலோ தலைவரே, தமிழகத்தில் இப்போது எல்லாப் பக்கமும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியிருக் கிறது.''”

"ஆமாம்பா, கடந்தமுறை நாம் பேசிக்கொண்ட மாதிரியே பெரிய அளவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றமும் நடந்திருக்கிறதே?''”

ss

"ஆமாங்க தலைவரே, ஒன்பது மாவட்ட கலெக்டர்கள் உட்பட 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. கடந்த வாரம் பேசும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட இருக் கிறார்கள் என்றும் இதற்கான பட்டியல் ரெடியாகி வருகிறது என்றும் தகவலைப் பகிர்ந்திருந்தோம். அதன்படியே பெரிய அளவில் மாற்றம் நடந்திருக்கிறது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், அதன் பின்னணியில் பல விசயங்கள் புதைந்து கிடக்கின்றன என்கிறது கோட்டைத் தரப்பு. குறிப்பாக, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு மட்டும் அவர் துறை சார்ந்த மாற்றங்கள் அவர் விரும்புகிறபடி நடந்திருக்கிறதாம். சில அமைச்சர்களின் விருப்பங்கள் இதில் நிறைவேறவில்லை என்றும் கூறுகிறார் கள். அதேபோல், 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே துறை யில் கோலோச்சும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்பது விதி. ஆனால் இதில் தமிழக அரசு கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.''”.

"சரிப்பா, புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை தந்திருக்கிறாரே?''”

"புதிய கலெக்டர்களாக நியமிக்கப்பட்ட தர்மபுரி சதீஷ், கிருஷ்ணகிரி தினேஷ்குமார், திருவண்ணாமலை தர்பகராஜ், திருப்பத்தூர் மோகனச் சந்திரன், விழுப்புரம் ஷேக் அப்துல்லா ரஹ்மான், திருவள்ளூர் பிரதாப், திருவாரூர் சிவசவுந்திரவள்ளி, திண்டுக்கல் சரவணன், நெல்லை சுகுமார் ஆகிய 9 பேரும் முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். அவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்ளுக்கு முழுமையாகப் போய்ச் சேருகிறதா? என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். அதில் தடைகள் இருந்தால் அதனைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அதேபோல் முக்கியமான திட்டங்கள் குறித்து நேரடி ஆய்வினை நீங்கள் எல்லோரும் நடத்த வேண்டும். தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் சமரசத்துக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காதீர்கள். அதில் அரசியல் தலையீடு இருந்தால் என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். மாவட்ட எஸ்.பி.க் களுடன் இணைந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றெல்லாம் அட்வைஸ் செய்திருக்கிறார்.''”

"சரிப்பா, அரசியலிலும் சில அதிரடித் திருப்பங்களைப் பார்க்க முடிகிறதே. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனால் தி.மு.க. -சிறுத்தைகள் இடையே சலசலப்பு தெரியுதேப்பா?''”

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் பரமஎதிரியாகக் காட்டிக்கொள்ளும் ஆதவ் அர்ஜுன், நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் சேர்ந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, வாழ்த்து பெறுவதற்காக சந்தித்தார். கட்சியிலிருந்து அவரை சஸ்பெண்ட் செய்த திருமாவோ, அவரைப் பூரிப்போடு வரவேற்றார். இது தி.மு.க. தரப்பிற்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவே, திருமாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஆதவ் அர்ஜுன் என் தம்பிபோல என்றாராம் திருமா. வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஆதவ் அர்ஜுன் நின்றால், அப்போதும் ஆதவ்வை, திருமா ஆதரிப்பாரா? என்கிறார்கள் தி.மு.க.வினர். எது எப்படியோ ஆதவ் அர்ஜுன், தி.மு.க.வுக்கும், சிறுத்தைகளுக்கும் இடையில், தான் நினைத்த மாதிரியே விடாமல் விரிசலை ஏற்படுத்திய படியேயிருக்கிறார்.''”

"ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் சென்னைக்கு வந்திருந்தாரே?''”

rr

"முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் கடந்த 31ஆம் தேதி சென்னைக்கு வந்திருந்தனர். அன்று இரவு 7 மணிக்கு சென்னை வந்த அமித்ஷா, விமான நிலையத்திலிருந்து திருமண வரவேற்பு நிகழும் மாமல்லபுரம் தனியார் மண்டபத்துக்கு காரிலேயே சென்றார். நிகழ்ச்சி முடிந்து அதேமாதிரி சென்னை விமானநிலையம் வந்து டெல்லிக்குக் கிளம்பிவிட்டார். அவரது வருகையை முன்னிட்டு, போக்குவரத்தில் பல மாற்றங்களை காவல்துறை செய்திருந்தது. இதனால் சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் தொடங்கி கிழக்கு கடற்கரைச் சாலையிலும், பழைய மாமல்லபுர சாலை யான ராஜீவ்காந்தி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கோபப்பட்ட பொதுமக்கள் போலீசாரிடம் மல்லுக்கட்டினார்கள். இதனால், அமித்ஷா சென்னை வந்து திரும்பிச் செல்லும்வரை போலீசார் பதட்டத்திலேயே இருந்தார்கள்.''”

"இந்த சென்னைப் பயணத்தின்போது, கட்சி நிர்வாகிகள் மீதான புகார்கள் பற்றி அமித்ஷா விசாரணை நடத்தியிருக்கிறாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, சென்னை வந்த அமித்ஷாவுக்கு ஏர்போர்ட்டில் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்பு கொடுத்தனர். அதேபோல் அவர் மகாபலிபுரம் செல்லும் வழி நெடுகிலும், அவரை வரவேற்க பா.ஜ.க.வினர் திரட்டப்பட்டிருந்தனர். ஏர்போர்ட்டிலிருந்து மாமல்லபுரம் கிளம்பிய அமித்ஷா, தற்போதைய பா.ஜ.க.வின் மாநில நிர்வாகியை, தனது காரில் ஏறச் சொன்னார். இதனால் தனக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக நினைத்து உற்சாகமாகக் காரில் ஏறிய அவரிடம் சீரியஸ் முகத்தையே அமித்ஷா காட்டினாராம். உள்கட்சி விவகாரம் குறித்தும், தி.மு.க. அரசின் செயல் பாடுகள் குறித்தும் அவரிடம் விசாரித்தாராம் அமித்ஷா. அப்போது, அண்ணா பல்கலைக் கழகத்தை கடக் கும்போது அதனைச் சுட்டிக்காட்டி, இந்த பல்கலையில் படிக்கும் மாணவிக்குத்தான் பாலியல் சீண்டல்கள் நடந்தன என்று அமித்ஷாவிடம் அந்த பா.ஜ.க. நிர்வாகி கூற, அது குறித்தும் அவர் விசாரித்திருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, மீண்டும் என்னை மாநிலத் தலைவராக நியமித்தால், 2026 தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு என்னால் உத்தரவாதம் தரமுடியும் என அந்த மாநில நிர்வாகி சொன்னாராம். அதற்கு பதில் தராத அமித்ஷா, பல்வேறு வணிக நிறுவனங்களிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் பணம் பறித்ததாக ஹெச்.ராஜா தலைமைக்கு அனுப்பியிருந்த புகார் குறித்து, அந்தக் காரிலேயே தீவிரமாக விசாரணை நடத்தி னாராம். அப்போது அவர் குரலில் கடுமை அதிகமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள்.''”

ds"சரிப்பா, இப்போதைய பா.ஜ.க. மாநில நிர்வாகியை தன் நேரடிப் பார்வையிலேயே டெல்லி வைத்துக்கொள்ள நினைக்கிறது என்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகக் கட்சிப் பதவியை வைத்து, சகல விதத்திலும் எடக்கு மடக்காகச் சம்பாதித் திருக்கிறாராம் அந்த நிர்வாகி. அதனால் அவரை இனியும் அந்தப் பதவியில் விட்டுவைத் திருப்பது நல்லதல்ல என்று டெல்லி தலைமை நினைக்கிறதாம். அதனால் அவரை ஒன்றிய அமைச்சரவையில் பத்தோடு பதினொன்றாக உட்காரவைத்துவிட்டு, தமிழகத்துக்கு புதி தாக ஒருவரைத் தலைவராக்கத் தீர்மானம் செய்திருக்கிறார்களாம். தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியைக் குறிவைத்து, தமிழிசை சௌந்தர ராஜன் தொடங்கி வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் என பலரும் முண்டியடித்துவரும் நிலையில்.. பொன்னார் மீது டெல்லி கவனம் செலுத்தியதாம். இந்த நிலையில், என்னை மீண்டும் தலைவர் பதவியில் உட்கார வைக்கவில்லை என்றால், கோவை ஏ.பி. முருகானந்தத்தையாவது தலைவராக்குங்கள் என்று மாநில நிர்வாகி டெல்லியிடம் கெஞ்சு கிறாராம். அந்த முருகானந்தம் பாஜகவின் பொதுச் செயலாளராக இருப்பவர். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் களமிறங்கி போராட்டங்களை முன்னெடுத்தவராம். எனவே, முருகானந்தத்தையே தலைவ ராக்கி விடலாம் என்று டெல்லி எண்ணுகிறதாம். அதற்கான அறிவிப்பு 5 ஆம் தேதியே வரலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகிறது.''

Advertisment

"புதுக்கோட்டை மாநகர உ.பி.க்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பியிருக்கே?''

"ஆமா தலைவரே, புதுக்கோட்டை மாநகரச் செயலாளராக செந்திலையும், அவரது மனைவி திலகவதியை மேயராகவும் மாவட்ட அரசியலைத் தாண்டி அமைச்சர் கே.என். நேரு.தான் கொண்டு வந்தாராம். அதனால் நேருவுக்கு விசுவாச மாகவும், அவரது சொத்துக்களைப் பாதுகாப்பவர்களில் ஒருவராகவும் இருந்த செந்தில், போன மாசம் மாரடைப்பால் இறந்துட்டாரு. இந்த செந்தில் குடும்பத்திற்கு அடுத்த அதிர்ச்சியாக, நூறு 'சி'லிக்கு மேலான சொத்துக்களை திருச்சிக்காரர் தன்வசப்படுத்திக் கொண்டாராம். இந்த பஞ்சாயத்து அமைச்சர் கே.என்.நேருகிட்ட ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மறைந்த செந்திலின் தம்பி சிவக்குமாரும் தற்கொலை செய்துவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. செந்தில் உயிரோடிருக்கும்போதே செந்திலின் தம்பி சிவக்குமார், குடும்பச் சொத்துகளை பிரித்துக்கொடுக்கச் சொல்லி பிரச்சனை செய்துவந்திருக்கிறார். செந்தில் மறைந்த பின்னர் அவரது குடும்பத்தாரிடம் கேட்டும் கிடைக்காததால் தற்கொலை முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். செந்தில் வகித்துவந்த பதவியை அவரது மகன் கணேஷ்க்கு வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் அமைச்சர் நேரு இறங்கியுள்ள நிலை யில், செந்தில் குடும் பத்தில் அடிமேல் அடி விழுவதாக உ பி.க்கள் பரபரப்பாகச் சொல்றாங்க.''

rr

"காற்று வாக்கில் என் காதுக்கு வந்த ஒரு தகவலை, நானும் இங்கே பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க.விலும் இப்போது அதிரடி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது அக் கட்சியின் அரசியல் வியூக அமைப் பாளராக பிரசாந்த் கிஷோரை நியமித்திருக்கிறாராம் எடப்பாடி. முன்பு தி.மு.க.வின் வியூக அமைப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோரிடம், எங்களை இந்தமுறை எப்படியாவது ஆட்சியில் அமரவையுங்கள் என்று தஞ்சம் அடைந் திருக்கிறாராம். அண்மைக்காலமாக அ.தி.மு.க.வின் வியூக அமைப்பாளராக இருந்த சுனில் இப்போது, அங்கிருந்து நகர்ந்துவிட்டார். பிரசாந்த் கிஷோருடன் த.வெ.க.வில் இணைந்திருக்கும் ஆதவ் அர்ஜுனும் கைகோக்கிறார். எனவே அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க. என வரும் தேர்தலில் ஒரு புதிய கூட்டணி அமைவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.''”

______________

இறுதிச் சுற்று!

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை (பிப். 3-ஆம் தேதி) அமைதிப் பேரணி நடந்தது. சென்னை வாலாஜா சாலை, அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்ட பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். அமைதிப் பேரணி அண்ணா சதுக்கத்தை அடைந்ததும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்துப் பேசிய முதல்வர், "வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பை யும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்'' என்றார்.

-இளையர்