மிழகத்திலுள்ள தொடக்கப்பள்ளிகள் 35,621, நடுநிலைப் பள்ளிகள் 9,392, உயர்நிலைப்பள்ளிகள் 5788, மேல்நிலைப்பள்ளிகள் 8096. இதுவல்லாமல் தனியார் நடத்தும் பள்ளிகள் தனி. அனைத்திலும் சேர்த்து பல லட்சம் மாணவ- மாணவிகள் கொரோனா காரணமாக கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறந்து, 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் துவங்க உள்ளன.

v

கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் சேர்த்துவருகிறார்கள். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த கல்வியாண்டில் மட்டும் தனியார் பள்ளிகளில் படித்துவந்த 75,725 பிள்ளைகளை அவர்களது பெற்றோர் அரசுப் பள்ளியில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப் பள்ளிகளை வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம்''’என்று சட்டமன்றத்தில் பலத்த கை தட்டலுக்கு இடையே பேசியுள்ளார்

vvஅரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாள மாக மாறுமா என்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் நாம் கருத்து கேட்டோம். திருநாவலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவருபவர் அன்புச்செழியன். இவரது துணைவியார் அன்புபாரதி. இவர்களது மகள் விவேகாஸ்ரீயை உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். தங்கள் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்தது குறித்து அந்த ஆசிரியர் தம்பதிகளிடம் நாம் கேட்டோம்

Advertisment

"நாங்கள் இதை விளம்பரத்திற்காகச் செய்யவில்லை. அரசுப் பள்ளியில் நல்ல தரமான கல்வி கிடைக்கிறது. கட்டட வசதிகள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானம் என அனைத்தும் சிறப்பாக உள்ளன. ஆசிரியர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகிறார்கள். காலணி, சீருடை, பாடப் புத்தகம் இப்படி அனைத்தும் இலவசமாக வழங்குகிறது அரசு. அரசு, பள்ளி மாணவ- மாணவி களுக்காக பல ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய் கிறது. அதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து பயனடைய வேண்டும்

அரசுப் பள்ளியில் கல்விகற்று பல்வேறு மேதைகள், சாதனையாளர் கள் உருவாகியுள்ளனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. நான் பணிசெய்யும் திருநாவலூர் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியை இளங்கோதை தலைமையில் கிராமம் தோறும் சென்று பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது, இணையவழியில் கல்வி பயில்வது, அரசு அறிவித்துள்ள கல்வி டி.வி. சேனல் குறித்து என பல்வேறு விதமான தகவல்களை நோட்டீஸ் மூலம் அச்சிட்டு பெற்றோர் களுக்கும் மாணவ- மாணவிகளுக்கும் விநியோகித்து வருகிறோம்.

அதுமட்டுமல்ல, எங்கள் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக திருநாவலூர், மார னோடை, கெடிலம், சேந்தமங்கலம், மேட்டத்தூர், மயிலம்குப்பம், ஈஸ்வரகண்டநல்லூர் உட்பட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பொது இடத்தில் மாணவ-மாணவிகளை வரவழைத்து ஆசிரியர் -ஆசிரியைகள் பாடம் நடத்துகிறோம்''’என்கிறார்கள் ஆசிரியர் தம்பதி களான அன்புச்செழியன் அன்புபாரதி ஆகியோர்.

Advertisment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த திருமதி சரிதா, “"எனது மகள் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவந்தார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கற்றுத் தரப்படுகிறது என்பதை அறிந்தேன். அரசுப் பள்ளியில் நல்ல கல்வி கிடைக்கும்போது, தனியார் பள்ளியில் ஆண்டுக்கு பத்தாயிரம் இருபதாயிரம் ஏன் வீண் செலவு செய்யவேண்டும் என்றுதான், எனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளேன்''’என்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு அந்தப் பள்ளியை சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் திருப்பதி தலைமையில் அந்த கிராம பள்ளிக்கு தேவையான இரண்டு பீரோ, மூன்று கணினி, மூன்று விலை உயர்ந்த டிவி மற்றும் டேபிள் சேர் உட்பட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த பிள்ளை களின் பெற்றோர், ஆசிரியர் இணைந்து பள்ளியின் மேலாண்மைக் குழு சார்பில் சீர்வரிசையாக எடுத்துச் சென்று பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அதற்கு ஒரு விழாவும் நடத்தினார்கள்

vv

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை என்ன மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பது குறித்து, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் திருப்பதியிடம் கேட்டோம். “"ஒவ்வொரு பள்ளியிலும் போதிய அளவு கட்டடங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால் அவை பல பள்ளிகளில் சீர் கெட்டுக் கிடக்கின்றன. அவைகளை சீர்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான சுத்தமான கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். கழிப்பறைகள் இல்லாததால் பெண் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதிற்குமேல் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடுகிறார்கள். அவர்களுக்கு மாதம் தோறும் மூன்று நாட்கள் ஏற்படும் இயற்கை உபாதை இவைகளுக்காக நாப்கின் மற்றும் கழிப்பறை வசதி வேண்டும். கால மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பள்ளியிலும் கணினி பயிற்சி யாளர்கள் அவசியம் நியமிக்கவேண்டும். ஒரு ஆசிரியருக்கு 25 மாணவர்கள் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளி களில் ஆசிரி யர்கள் குறை வாகவும் ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் கள் அதிகமாகவும் உள்ளனர். நீண்ட தூரமுள்ள கிராமப்புற பள்ளிகளுக்குச் சென்று பாடம் நடத்து வதற்கு விருப்பமில்லாத ஆசிரியர்களால் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே கல்வி அமைச்சர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சமமான அளவில் ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்யவேண்டும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளியின் ஆசிரியர்கள், பிள்ளைகளின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து மேலாண்மைக் குழு அமைத்து அவர் கள் பிள்ளைகள் கல்வி பயில்வதை கண்காணித்து ஆய்வு செய்யவேண்டும். வட்டார அளவில் உள்ள கல்வி அதிகாரிகள் தினசரி 10 அரசுப் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்தவேண்டும்''’என்றார்.

சமீபகாலங்களாக அரசுப்பள்ளியை நோக்கி ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதீத அக்கறை செலுத்திவருகிறார்கள். அரசும் பள்ளிக்கல்வித்துறை யும் அவர்களை ஊக்கப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வறுமையின் அடையாளமாகக் காணப்படும் அரசுப் பள்ளிகள், பெருமையின் அடையாளமாக மாறுவதை பள்ளிக் கல்வி அமைச்சர் நிரந்தரமாக்கிக் காட்டுவார் என எதிர்பார்க்கிறார்கள் பெற்றோரும் ஆசிரியரும்.