"இது என்னுடைய உழைப்பு. படத்தில் போஸ்ட் ஆபிஸ் செட்டில் ஒரு பக்கம் காந்தி படத்தையும், மறுபக்கம் அம்பேத்கர் படத்தையும் வைத்திருந்தேன். அது எப்படி அம்பேத்கர் படம் இருக்கமுடியுமென மூத்திர சந்தில் படத்தைக் கடாச, வேறு வழியில்லாமல் படத்தைவிட்டு விலக வேண்டியாதாயிற்று. மரியாதைக்குக்கூட கலை இயக்குநர் என எனது பெயரை பதிவு செய்யவில்லை படத்தின் இயக்குநர்'' என சர்ச்சையை உருவாக்கியுள்ளார் கலை இயக்குநரான சதீஷ்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pothanur.jpg)
"திரைப்படம் சம்பந்தமாக இளம் படைப்பாளிகளை உருவாக்கிவரும் கல்லூரி ஒன்றில் நான் இருந்தபொழுது, போத்தனூர் தபால்நிலையத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமாறன் சுந்தர் மூலமாக எனக்கு அறிமுகமானார் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரவீன் வெங்கட்ராமன். "இது லோ பட்ஜெட் கதை. என்னிடம் இவ்வளவுதான் பணமிருக்கு. இதை வைச்சு நீங்க செட் அமைச்சு தந்துடணும்'னு கையில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தவர், "படம் நல்லபடியா வெளிவரும்போது உங்களுக்குண்டான தொகையைத் தந்துவிடுவேன்' எனவும் உறுதியளித்தார்.
அதை நம்பி பூஜையும் போட்டாச்சு. இரண்டு உதவியாளர்களை வைத்துக்கொண்டு கோயம்புத்தூர் மணிக்கூண்டு அருகிலுள்ள பாழடைந்துபோன கட்டிடம் ஒன்றில் ஆங்கிலோ இந்தியன் செட், போஸ்ட்ஆபீஸ் மற்றும் பேங்க் செட் போட்டேன். படத்தைப் பார்த்தீங் கன்னா உங்களுக்கே தெரியும். அதில் பயன்படுத்தியிருக் கின்ற ஒவ்வொரு பொருளையும் தேடித் தேடி பார்த்து ஓசி வாங்கி செட்டில் பயன்படுத்தினேன். இதைவிட ஒரு விஷயம் என்னவென்றால், கார்பெண்டரே இல்லாமல் நானே ஆணியடிக்கின்ற வேலை வரை செய்தேன். இந்தச் சூழலில் போஸ்ட்ஆபீஸ் செட்டில் போஸ்ட் மாஸ்டர் இருக்கைக்கு மேலே காந்தி படத்தையும், அம்பேத்கர் படத்தையும் மாட்டி வைச்சேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pothanur1.jpg)
மறுநாள் ஷூட்டிங்கிற்கு நான் லேட்டாகப் போக, அம்பேத்கர் படத்தை காணவில்லை. செட்டில் ஏதாவது மாற்றமிருந்தால் படத்தின் இயக்குநரே ஆனாலும் ஆர்ட் டைரக்டரிடம் கூறிவிட்டுத்தான் அதனை மாற்றனும். பிரவீனிடம் வாக்குவாதம் செய்ய, "அந்த காலகட்டத்தில் அம்பேத்கர் படம் இருந்ததில்லை' என பதில் வாக்குவாதம் செய்தார். நானும் விடாப்பிடியாக தெரிந்த பெரியார் படிப்பகத்தைச் சேர்ந்த மூத்த தொண்டரை அணுகி விபரம் கேட்க, "அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம் வைப்பதில்லை. அப்பொழுது அரசு அலுவலகத்தில் உயர் பதவியில் இருந்தவர்கள் பெரும்பாலோர் உயர்சாதி யினர். அவர்கள் அந்த படத்தை தவிர்த்து வந்துள்ளார்கள்'' என்றார். இருந்தும் இயக்குநரிடம், "அம்பேத்கர் படத்தை வைப்பதால் தப்பில்லை' என வாக்குவாதம் செய்து தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தியும் பிரயோசனமில்லை. பின் என்னுடைய இரண்டு உதவியாளர்களை வைத்து படத்தை முடித்துவிட்டார். மரியாதைக்குக்கூட எனது பெயரை திரைப்படத்தில் காண்பிக்கவில்லை'' என ஆதங்கப் பட்டார் கலை இயக்குநர் சதீஷ்.
1990-ம் ஆண்டை பிரதிபலிக்கும் ஹெயிஸ்ட் சினிமாவான போத்தனூர் தபால்நிலையம் சமீபத்தில் ஆஹா ஓ.டி.டி. மூலம் நேரடியாக ரிலீஸ் ஆனது. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரவீன் வெங்கட்ராமன் இவ்விவகாரம் குறித்து, "இந்தப் படம் இப்பொழுதுதான் ரிலீசாகியுள்ளது. திரைப்படம் எடுக்க ஆரம்பித்தது 2016-லிருந்து. தொடக்கத்தில் இப்படத்திற்கான கலை இயக்குநராக பணியாற்ற சதீஷ் வந்தாரு. நாங்க கொடுத்த பணத்தை செலவு செய்துவிட்டு வெறுமனே செட்டுக்கு வந்தாரு. சரின்னு நான் அக்கம்பக்கத்திலிருந்து அந்த காலத்துப் பொருட்களை தேடி வாங்கிக் கொடுத்தேன். அதனை பயன்படுத்தியும் பார்த்தேன். எல்லாவற்றையும் நான் செய்திருக்க, அவர் எதுக்கு? அதனால் நானே அவருடைய இரண்டு உதவியாளர்களை வைத்துக்கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தேன். இப்ப அம்பேத்கரை வெச்சு பிரச்சனையை அவர் உருவாக்குகின்றார். நான் கேள்விப்பட்ட வரைக்கும் 1990-களில் அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம் வைப்பதில்லை. பப்ளிசிட்டிக்காக இதை செய்யுறார் அவர்'' என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/pothanur-t.jpg)