(281) ஒரு தாய்க்கு நடக்கக்கூடாத கொடுமை... சித்ரவதை!
எஸ்ஸ்... மறுபடியும் சத்தியம் டி.வி. முக்தார் கேள்விக்கு தேவாரம் பதில்... அதுக்குள்ள போறோம். இன்னும் கொஞ்சம்தான். தேவாரத்தோட வவுசிய நீங்க தெரிஞ்சுக்கணுங்கறதுக்காகத்தான்.
சும்மா சொல்லக்கூடாது... நம்ம முக்தார் சும்மா வளைச்சு, வளைச்சு கெடாசுறாரு... தைரியமான ஆளுதான்...!
முக்தார்: டி.ஐ.ஜி. தேவாரம் வந்து அங்க போனாரு, அங்க இருக்கிற பெண்கள பலாத்காரம் பண்ணுனாங்க...
தேவாரம்: அது பண்றதுக்கு அவசியம் இல்ல. அங்கவுள்ள பொம்பளைகள யாரும் நம்மாளுக பாத்ததும் கெடையாது.
(எப்படி... எப்படி... நம்மாளு பாத்தது இல்லையாம். என்ன மாதிரி பொய்... இந்தா போன இதழ்ல அசோக்குமாரே சொல்றாரே, "தங்கம்மாவ நாங்க பாத்தோம், அரெஸ்ட் பண்ணுனோம்'னு...)
முக்தார்: நீங்களும்...
தேவாரம்: அது பொய். அது செய்றதுக்கு அவசியமும் கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கோம். நம்ம டீம் போறவேள ரெண்டு நாளைக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போவோம். பாக்கெட்... சின்னச் சின்னதா. ரெண்டு நாளைக்கு முடிஞ்ச உடனே, காட்டுல மீனு புடிச்சு தீயில வாட்டிச் சாப்புடுவோம், அப்படியில்லன்னா காட்டுப் பழங்கள சாப்புடுவோம். அப்படி இல்ல ஒரு இடத்துக்குப் போறாம் அங்க ஆதிவாசி வீடு இருக்கு. அவுங்கள்ட்ட காசு குடுத்து கேப்ப வாங்கி அத சாப்புடுவோம். ரூபா குடுத்துருவோம். ரூபா குடுத்தா அவனுக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா அவங்களுக்கு ரூபால்லாம் கெடையாது காட்டுல... எல்லாமே பார்ட்டர் சிஸ்டம். நான் ஒங்களுக்கு அரிசி குடுப்பேன், நீங்க எனக்கு வேற எதையாவது குடுப்பீய, அதவச்சு சாப்புடுவோம். அப்படி பழக்கம் இருந்தது.
முக்தார்: அப்ப தொடர்ந்து ஏன் பெண்கள் மேல காவல்துறை அத்துமீறுனாங்க, பலாத்காரம் பண்ணுனாங்க...
தேவாரம்: அதெல்லாம் பொய். ஒரு பொம்பளையும் தொட்டுருக்கமாட்டானுக நம்மாளுக.
முக்தார்: ஒருத்தருமா...?
தேவாரம்: இல்லன்னு சொல்-யாச்சுல்ல...
முக்தார்: வீரப்பன் சந்தனக்கட்ட கடத்தப் போனான், அதுனாலதான் அங்க இருந்தான், ஆனா... ஒரு எல்லைக்கு மீறி வீரப்பனப் பிடிக்க வந்த காவல்துறை அதிகாரிகள் அங்க இருக்கிற பெண்கள பலாத்காரம் பண்ணுனாங்க... அதனாலதான் வீரப்பன் கோபம் அடைஞ்சான்னு...
தேவாரம்: வீரப்பன் வந்து, ஒரு இடத்துல போலீஸ்காரங்க வந்துட்டாக, அவுகளுக்குத் தகவல் கொடுத்தது இந்த ஆதிவாசிகள்னு சொல்- அந்த வில்லேஜ்ல போய் 30 பேர கொன்னுருக்கிறான். ஏன் கொன்னான்னா... "நீங்கதான் தகவல் கொடுத்து, அதனாலதான் போலீஸ் வந்தாக'ன்னு அவன்தான் கொன்னது.
நம்ம அண்ணன் முக்தார் கேக்கிற கேள்வி, "போலீஸ்காரங்க பலாத்காரம் பண்ணுனாங்களா, இல்லையா...'ன்னு.
ஆனா இவரு ஒரு படத்துல வடிவேலு சொல்லுவாருல்ல... "இதுக்கு... இது பதில் இல்-யே'ன்னு அது மாதிரி ""போலீஸ் வந்துட்டாகன்னு அவுகளுக்கு தகவல் குடுத்தது ஆதிவாசிகன்னு சொல்- வீரப்பன் 30 பேர கொன்னுருக்கான்''னு. முக்தார் என்ன கேக்குறாரு, இவரு என்ன பதில் சொல்றாரு பாருங்க...!
முக்தார்: போன போலீஸ்காரன் பலாத்காரம் பண்ணல...
தேவாரம்: பலாத்காரமும் பண்ணல, கொல்லவும் இல்ல. வாங்கிச் சாப்புட்டாக, அதுக்கு பைசா குடுத்தாக.
ஆட்டு மந்தையில கொஞ்சம் ஓநாய் கலந்துட்டது மாதிரிதான். எஸ்.டி.எஃப்.ல கொஞ்சம் மோகன் நிவாஸ் மாதிரி ஓநாய்க கலந்து, காட்டுவாசி பொண்டு புள்ளைகள அள்ளிக் கட்டிட்டாய்ங்க. இந்தா... முன்ன சொன்ன ரெண்டுபேரு இல்லாம, சீரழிஞ்ச பொண்ணுக கீழ சொல்றதக் கேளுங்க...
பொய்யி... பொய்யீ... எதுக்கெடுத்தாலும் பொய்யீ. பொய்...க்கு ஒரு அளவு வேணாம். தன்னைப் பறிகொடுத்துட்டு, மனித உரிமை ஆணையத்துல ஆதிவாசி பொம்பளைங்க அழுது பொலம்பும்புனது ஊருக்கே தெரியும். அதுல கொஞ்சம் கீழ...
பெரியதாயி...
""அப்பா பொன்னுசாமி, அம்மா மினியம்மா. நாங்க நல்லூர் கிராமம். காட்டு வேலை செஞ்சிக்கிட்டிருந்தோம். போ-சு நைட்ல ஒரு மணி இருக்கும், திபுர்... திபுர்... திபுர்னு வந்தாங்க. வெளியபோயி திரும்பிய எங்க அப்பாவையும்... செருப்புக் காலாலேயே உதைச்சாங்க. அப்ப எனக்கு பத்து வயகதான் இருக்கும். "ஏன் எங்கப்பாவ அடிக்கிறீங்க?'ன்னு கேட்டேன். அப்பான்னு கத்திக்கிட்டே போயி அவரை சேத்துக் கட்டிக்கிட்டேன்.
என்னைய இடிச்சுத் தள்ளிட்டு அப்பாவ இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. எங்க அண்ணனையும் சந்தேகம்ங்கிற பேருல கூட்டிட்டுப் போயிட்டாங்க. தம்பியையும் சேத்து இழுத்துட்டுப் போயிட்டாங்க. எங்கம்மாவையும் பிடிச்சுட்டு வந்து ஒம்பதரை வருஷம் ஜெயில்ல போட்டுட்டாங்க. ஒரு தம்பியையும் அண்ணனையும் எங்க வச்சிருக்காங்கன்னே தெரியலை. சின்னவனுக்கு பத்து வயசுக்கு கீழ. பெரியவனுக்கு பன்னிரெண்டு வயசுதான். நான் நடுவு.
பண்ணாரி கேம்ப்லதான் வச்சிருந்தாங்க. எங்க அண்ணன அடிச்சி சித்ரவதை பண்ணி, எங்க அம்மா முன்னாடியே நிர்வாணமா நிறுத்தி "ஒன் பையனுக்கு உயிர் நிலைல கரண்டு வைடி'ன்னு சொல்- எங்கம்மாவ எட்டி உதைச்சாங்க.
"ஐயோ நான் பெத்த பையனுக்கு நான் எப்படி கரண்டு கொடுப்பேன்'னு அம்மா அழுதாங்க. அந்தக் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் எங்க அம்மாவ எட்டி உதைச்சி எங்க அண்ணனுக்கு உயிர்நிலைல கரண்டு வைக்கச் சொன்னாங்க. ஒரு பெத்த தாய்க்கு நடக்கக் கூடாத கொடுமை அது. தெனம் சித்ரவதை. (அழுகிறார்)
எங்க குடும்பத்துல எட்டு பேரு செத்துட்டாங்க. எட்டுப்பேரையும் சுட்டுக் கொன்னுட்டாங்க. அப்பா, அண்ணன்மாரு ரெண்டு பேரு. எங்க தாய்மாமன் ரெண்டு பேரு. எங்க சித்தப்பா, பெரியப்பா. எங்க பாட்டிக்கெல்லாம் கையே இல்லாமப் பண்ணிட்டாங்க. அந்தக் கிழவிக்கு அந்த வயசுல அப்படிக் கொடுமையெல்லாம் நடந்துருக்கக் கூடாது. பாட்டியோட மார்ல கரண்டு வச்சி ரொம்பக் கொடுமை பண்ணுனாங்க. (அழுகிறார்)
என் அண்ணன், தம்பிய அடிச்சே மெண்டலாக்கிட்டாங்க. பத்து ரூபா காச கையில குடுத்தாக்கூட எண்ணத் தெரியாத அளவுக்கு ஆக்கிட்டாங்க. "பைத்தியக்காரப் பிள்ளைக ரெண்டுபேரப் பெத்துவிட்டுப் போயிட்டா மினியம்மா'ன்னு’’பாக்குறவங்க பேசுனாங்க. அவங்க எல்லாத்துக்கும் நல்லது கேட்டது எல்லாம் நானே பாத்து அவங்களுக்கு செய்றதெல்லாம் செய்றேன். (அழுகிறார்)
ஒம்பதரை வருஷம் கழிச்சு ஜெயில்லருந்து அம்மா வந்தா. அவளை அடிச்சு கரண்டு வச்சதுனால கிட்னி எல்லாம் போயிடுச்சு. ரெண்டு வருசத்துல அம்மாவும் செத்துட்டாங்க. அப்ப எனக்கு பத்து வயசுதான். என் கண்ணு முன்னாடியே சித்ரவத செஞ்சாங்க. அடிச்சாங்க. கரண்டு குடுத்தாங்க. அவங்க பண்ணுன எல்லாக் கொடுமையும் எனக்குத் தெரியும்.
சின்னப் பிள்ளைகள இப்படியெல்லாம் அடிப்பாங்கன்னு எனக்குத் தெரியல. தம்பி முட்டியெல்லாம் பேத்து புண்ணாக்கிட்டாங்க. அண்ணனுக்கு முட்டி வழியா ரத்தமா ஊத்துது. ரத்தம் கீழே போய்க்கிட்டே இருக்கும். முகத்துலயே திருப்பித் திருப்பி அடிச்சே வெட்டுக்காயம் மாதிரி ஆக்கிட்டாங்க. புத்தி சுவாதீனம் இல்லாம ஆக்கிட்டாங்க''ன்னு நம்ம தம்பி சுப்பு, வீரப்பன் டாக்கு சீரிஸ்úஸôட கிரியேட்டிவ்ல ஒருத்தரான தம்பி வசந்த் எல்லாரும் நேர்ல பாத்து ஆறுதல் சொன்னப்ப, அவங்கள்ட்ட... தன் கைகளால் கன்னப் பகுதியில் ஏற்பட்ட வீக்கத்தையும் வெட்டுக் காயங்களின் தன்மையையும் செய்து காமிச்சு அழுதிருக்கிறார்.
சரசு
""என் பெயர் சரசு. எனக்கு ஏழு வயசு இருக்கும்போது, விடியக்காலம் ஆறு, ஏழு மணி வாக்கில் எங்க அம்மாவ...
(புழுதி பறக்கும்)