s

எலிக்கு எதுக்கு இன்ஸ்பெக்டர் வேலை...!

ங்... இதச் சொல்ல மறந்துட்டேன்.

வீரப்பன் டாக்குமெண்ட் சீரிஸ், என் மகள் ஆர்.வி. பிரபாவதி.டீம் தயாரித்து வெளிவந்து ஓஹோன்னு ழங்ங்-5 ஞபப ல ஓடிக்கிட்டு இருக்குல்ல, அந்த சீரியலுக்கு முதல் முதலா ஒரு அவார்டு கொடுத்தாங்க. அதுக்குப் பேரு எடிசன் அவார்டு. செல்வகுமார்னு ஒரு அண்ணன்தான் ஆர்கனைஸ் பண்ணினார். இது எடிசன் அவார்டோட 16வது அவார்டு பங்ஷன். பெரிய பெரிய தலைலாம் வாங்குனாங்க. இந்த அவார்டை யாரு கையில என் மகள் டீம் வாங்குனாங்கன்னா இயக்குநர் இமயம்... சினிமா உலகத்தையே தன் இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வச்ச வித்தைக்காரர், சாதனையாளர் அண்ணன் பாரதிராஜா கையிலதான் வாங்குனாங்க. ஓபனிங்கே ஜே... ஜேன்னு இருந்துச்சு. பாரதிராஜா சார் கையில முதல் படைப்புக்கே அவார்டு வாங்குனதுங்கறது அவங்க கடின உழைப்புக்கு கிடைச்ச பெரிய அங்கீகாரம். நக்கீரனுக்கு கிடைச்ச பெரிய மகுடம்.

Advertisment

"நமக்கு நல்லது செஞ்சவங்கள மறப்பது எவ்வளவு பெரிய தப்போ, அதை விட பெரிய தப்பு நமக்கு கெட்டது செஞ்சவங்கள மறக்குறது''.

போன சனியன் ஒரே நெட்டாப் போச்சுன்னு இருந்தா அது பக்கத்து சந்துக்குள்ள நின்னு கீச்சு கீச்சுன்னு கத்துதும்பாய்ங்கள்ல அப்படித்தான், தான் தான் காட்டுக்கே ராஜா மாதிரி சைடு குடுக் காமலேயே தொண தொணன்னுட்டு ரோட்டுல போறது வர்றது எல்லாத்தை யும் வாரி வாரி மேல கீழ மொழுவி வச்சு கூத்தடிக்குது ஒண்ணு. எல்லாம் "கூச முனுசாமி வீரப்பன்'' குடுத்த குடுப்பு. அவனவன் துண்டக்காணோம் துணியக் காணோம்னு பிதுங்கிப் போய் திரியுறான்.

"அது அதுக்கு கவலை ஐயாவுக்கு எட்டுக் கவலை''ன்னு சொல்லுவாங்க. அதுமாதிரி வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் மேல வரிஞ்சு கட்டுறான் இந்த போலீஸ் எடுபுடி. அந்த புள்ள ஏதோ அப்பன இழந்து இப்பதான் சூதானமா நாம் தமிழர் கட்சியில சீட்ட கீட்ட வாங்கி ஒரு நம்பிக்கையில தேர்தல்ல நிக்கிது. அது பொறுக்கல நம்ம பயலுக்கு. பி.ஜே.பி.யில பொறுப்புல இருந்தப்ப ஒண்ணும் பண்ணலையாம். இவரு பாத்தாரு. அடுத்த வீட்டு குழம்ப நம்பி ஆறு மரக்கா கம்பு இடிச்சாளாம் பாதகத்திம்பாங்க. நம்ம வீட்டு சொத்த திருட்டுத்தனமா எடுத்துற லாம்னு நம்பி ஏதேதோ திட்டம் போட அது வெடுக்குனு ஆயிருச்சு.

Advertisment

அந்த கடுப்புல வீரப்பன் புள்ள மேல தாவுறான். இவனுக்கென்ன, அந்த புள்ள ஓட்டு வாங்குது, வாங்காம போகுது. "எலிக்கு எதுக்கு இன்ஸ்பெக்டரு வேலை''ம்பாய்ங்கள்ல அதுமாதிரிதான். வேணும்னா பாரு அந்த புள்ள எக்குத்தப்பா ஓட்டு வாங்கப் போகுது. அப்ப இந்த மூஞ்ச எங்க கொண்டு போய் உரசுவ...

"பணக்காரன் பின்னால பத்துப் பேர்னா பைத்தியக்காரன் பின்னாலயும் பத்துப்பேர்''ன்னு சொல்லுவாய்ங்க. இந்த மூதி கண்டத அள்ளி விடுது. ஆகா ஓஹோன்னு சொல்ல 10 காக்கா வேற...

அடுத்ததா... நண்டு ஒண்ணு பொந்தவிட்டு வெளிய வராம எகத்தாளமா கால் மேல காலப் போட்டு மல்லாக்க கிடந்துச்சா. இப்ப அது வெளிய வந்து காலு காலுங்குது. நான் வேற யாரையும் சொல்லல. அண்ணாத்தே தேவாரம் அவுகளத்தான்.

சத்யம் டி.வி. சேனல்ல பேட்டி குடுத்து இருந்தாக. ஏய்ங்கப்பா என்னா மருவாத! யாரை எடுத்தாலும் அவன் இவன்னு ஏக வசனம்தான்.

ss

யோவ் கோவாலு... போர்க்களம் போர்க் களம்னு... போகப் போக ரொம்ப போர் அடிக் குற களமாக்கிட்டே இருக்கியேன்னு யோசிச்சிராதீக. இதெல்லாம் காலத்துக்கும் பதிவா இருக்கணும். எது தேவாரம் சொன்னதா... போய்யா தேவாரம்லாம் ஒரு ஆளு... அடுத்து முன்ன ஒருத்தனச் சொன்னியே துரோகிப் பய அவனெல்லாம் ஒரு ஆளு. அவன மறந்து ரொம்ப நாளாச்சு. நீதான் ஞாபகப்படுத்து றேன்னு தோணுதா... அங்கங்க "அயிரைக்கு எதுக்கு விலாங்கு சேட்டை''ன்னு சொலவடை இருக்கு. அது மாதிரி அப்ப அப்ப தட்டணும். தேவாரத்த ஏன் சொல்லுறேன்னா ஐயா இப்பதான் பொத்துக்கிட்டு வெளிய வர்றாரு. வந்தவரு உண்மையப் பேசுனா ஓ.கே. வாய் பூரா புளுகு... அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.

வீரப்பன் விவகாரத்தில் போலீஸ் சொன்ன பொய்யெல்லாம் ஒவ்வொன்னா வெளியே வருது. அதை நம்ம போர்க்களம் தொடருல சொல்லி வர்றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதையை சொல் றாங்க. சமீபத்திய கதை ஒரு பேட்டியில் தேவா ரம் கொமச்சுருப்பாரு. பேட்டி பூரா புருடா. அதுல கொஞ்சப்பகுதிய உங்களுக்காக தர்றேன். படிங்க அப்பதான இவனுக பவுசு எல்லாம் தெரியும்.

ss

சத்யம் டி.வி. அண்ணன் முக்தார் கேட்குற கேள்விக்கு தேவாரத்தோட பதில்.

"சேதுராமன் எம்.ஏ. பிலாசபி நம்ம ஒண்ணு கேட்டா நம்ம அசற மாதிரி பதில் சொல்வாரு பாரு. அது நமக்கு இங்க புரியாது. வீட்டுக்கு போனாத்தான் புரியும். சில பேர் பதில் தெரியாமலே பயந்து ஓடியிருக்காங்க. எம்.ஏ. பிலாசபி பிலாசபி...'' இது நம்ம நடிகர் கவுண்டமணியும் செந்திலும் ஒரு படத்துல பேசுற வசனம்..

நம்ம முக்தார் அண்ணன் கேட்குற கேள்வி ஒண்ணா இருக்கும். ஆனா, தேவாரம் சொல்ற பதிலைக் கேளுங்க மக்களே கவுண்டமணி அண்ணன் சொன்ன மாதிரியே அசர வைப்பார்.

நெறியாளர் : வீரப்பன உங்களால சந்திக்க முடியல, பாக்க முடியல, நெருங்க முடியல, நக்கீரன் கோபால் மட்டும் எப்படிப் போனாரு?

தேவாரம் : நம்ம அனுப்புனதுதான? ஆக்டர் ராஜ்குமார புடிச்சுட்டுப் போனபிறகு அதுக்கு முந்தி 3 பேர, சிதம்பரநாதன்னு ஒரு டி.எஸ்.பி., பெறகு அவருக்கு சொந்தக்காரன் ரெண்டுபேருன்னு 3 பேர புடிச்சிர்றான்.

அவன் தோட்டம் வச்சிருக்கான் அங்க காட்டுக்குள்ள, காட்டுப் பக்கத்துல.

நெறியாளர் : யாரு?

தேவாரம் : சிதம்பரநாதன் அங்க போகும் போது புடிச்சிட்டான். நாங்க போகக் கூடாதுன்னு சொல்லியிருந்தோம். போகும் போது புடிச்சிட்டாங்க. புடிச்சு 3 பேரையும் கொன்னுருவோம். கொல்லக்கூடாதுன்னா, நீங்க 1000 கோடி குடுக்கணும்னான்.

நெறியாளர் : அடப்பாவி

தேவாரம் : அவன் குரூப்புல ஒரு 156 பேரு ஜெயில்ல இருந்தாங்க. தடா ஆக்ட்ல அவுகள எல்லாம் நீங்க விடணும்னு நெறைய கண்டிஷன் லாம் போட்டான். இந்த ஆபரேஷன்ல நீங்க போலீஸ வித்ட்ரா பண்ணி காட்ட விட்டு வெளிய போயிரணும்னு.

ஆனா நாங்க 3 டீம் ஃபார்ம் பண்ணி நான்தான் கூட்டிட்டுப் போனேன். ஒண்ணு வந்து அரோரா, இன்னொன்னு கர்நாடகா சைடுல மோகன் நிவாஸ்னு ஒருத்தர் இருந்தாரு. நம்மாளு அப்ப நாங்க வந்து பவானி ஆத்த கடந்து போனா அவனுக்குத் தெரிஞ்சுரும். பவானி ஆத்துக்கு அந்தப் பக்கம் காட்டுலதான் இருக்கிறான். அப்போ நாங்க அங்க போகாம, மேல ஊட்டிக்குப் போய் அங்க 6000 அடியில இருந்து கீழ இறங்கி, 3 டீமா வர்றோம் இப்ப புடிச்சி வச்சிருந்த 3 பேரும், வாட்ச் பண்ணிக் கிட்டிருந்த நாலுபேரு, முக்கியமான வீரப்பன் ஆளுங்க... இவ்வளவு பேரும் அங்க இருக்கிறாக.

நெறியாளர் : சரி..

தேவாரம் : அப்ப அந்த 3 பேரையும் நாங்க ரெஸ்க்யூ பண்ணிர்றோம். மத்த 4 பேரையும் சுட்டுர்றோம்.

நெறியாளர் : ஓ காப்பாத்திர்றீங்க.

தேவாரம் : ஆமா, காப்பாத்தி கொண்டு வந்துட்டோம். அதுக்கு முந்தி என்ன பண்ணிட் டான்? வீரப்பன் தம்பி அர்ஜுனன், அவன் வந்து, "இந்த 3 பேரையும் நாங்க கொல்லாம இருக்க ணும்னா அர்ஜுனனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்க ணும்னு சொல்லி அனுப்புனாக. அவனுக்கு ஏதோ டிரபிள் இருந்தது. கோயம்புத்தூர் கலெக்டர்தான் இடம்லாம் ஒதுக்கிக் கொடுத் தாரு. அவன பாத்துக்கிட்டிருந்தது சிவகுமார் ஒண்ணு, கருப்பசாமி ஒண்ணு, அவுக அவ்வளவு தைரியமா வெப்பன் இல்லாம பாத்துக்கிட் டாங்க. அர்ஜுனனையும் இன்னும் வேற ஒரு நாலுபேரையும், இந்தப் பேச்சுவார்த்த நடக்குது. நாங்க மேல இருந்து கீழ இறங்கி, எல்லாரையும் காப்பாத்திட்டோம். கலெக்டர் ஒரு மீட்டிங் போட்டுருந்தாரு அதோடு முடிஞ்சு போச்சு. அப்போ கர்நாடகக்காரங்க என்ன பண்ணு னாங்க. "நீங்க அர்ஜுனனையும் 3 பேரையும் புடுச் சுருக்கிறயே எங்க விசாரணைக்கு வேணும்னு சொல்லவும், அவங்ககிட்ட குடுத்துட்டோம்.

தேவாரம் சொன்ன பதில் எப்படி இருக்குன்னா, "இரும்பு குண்ட முழுங்கிபுட்டு இஞ்சிச்சாறு குடிச்ச கதையா இருக்கும்.

மேலே தேவாரம் சொல்லிருக்கிறது போல சிதம்பரநாதன் அவரு கூட இருந்தவய்ங்களை இவரு காப்பாத்தல. இதை சிதம்பர நாதனே நம்மிடம் தெரிவிச்சாரு. அதை அப்பவே நக்கீரன்ல வெளியிட்டோம். அதற்கு பரிசுதான் அவருக்கு ராமேஸ்வரம் டிரான்ஸ்பர். மேலே குறிப்பிட்டது போல இவிய்ங்க கர்நாடக போலீஸ்ட்ட ஒப்படைச்ச அர்ஜுனன் மத்த இரண்டுபேரோட நிலைமை என்ன ஆச்சு என்பதை உலகம் அறியும். கேள்வி கேட்பவர் நக்கீரன் கோபால் எப்படி சென்றார் என்று கேட்கும்போது அதற்கு பதிலளிக்காம, கவுண்ட மணி அண்ணன் சொல்ற மாதிரி நம்ம அசர வக்கிறாரு பாருங்க. சுத்தி சுத்தி வரும் தேவாரம், அதே பேட்டியில இன்னொரு இடத்தில்...

(புழுதி பறக்கும்)