சிவகங்கை மகளிர் கல்லூரி அருகில், முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கான நலச்சங்க அலுவலகம் இயங்கி வருகின்றது. அங்கே முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தார்களுக்காக இயங்கும் பாலி கிளினிக் ஒன்றும் உள்ளது. அம்மருத்துவமனையில் பெண் துப்புரவுப் பணியாளராக லட்சுமி என்பவர் வேலை பார்க்கிறார். லட்சுமிக்கு கம்ப்யூட்டரில் பணியாற்றிய அனுபவ முள்ளதால், ஓ.ஐ.சி. அதிகாரி நாகராஜன், அவருக்கு கணினிப் பிரிவிலும் பில்லிங் பணிகளைக் கொடுத்துள்ளார். துப்புரவு வேலைகளை முடித்த பின் கணினியில் பில்லிங் பணிகளையும் பார்த்துவந்துள்ளார்.

ccஇதற்கிடையில் அதிகாரி நாகராஜன் மாற்றலாகி, புதிய ஓ.ஐ.சி. அதிகாரியாக லெப்டினன்ட் கர்னல் வி.துரைசிங்கம் வந்திருக்கிறார். பணியாளர் லட்சுமி வழக்கம்போல் கணினியில் பில் விவரங்களை ஏற்றியபின், அவற்றுக்கான கையொப்பம் பெறுவதற்காக துரைசிங்கத்தின் அலுவலக அறைக்குள் சென்றிருக்கிறார். கையொப்பமிடும்போது, லட்சுமியின் குடும்ப நிலவரம், ஜாதி குறித்தெல்லாம் பாசத்துடன் கேட்பதுபோல் விசாரித்திருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் பிரிந்து சென்றதால் இரு குழந்தைகளோடு தனித்து வாழ்வதாகவும், வட்டிக்குப் பணம் வாங்கியதில் சிரமப்பட்டுக் குடும்பத்தை நடத்திவருவதாகவும் எதார்த்தமாக லட்சுமி கூறியுள்ளார். மேலும், தான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும் கூறியிருக்கிறார்.

லட்சுமியின் குடும்பச்சூழல் குறித்து தெரிந்துகொண்ட துரைசிங்கம், வேலை ஏவும் சாக்கில் லட்சுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதோடு, ஆபாசமாகவும் பேசியிருக்கிறார். உடனே லட்சுமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். துரைசிங்கத்தைப் போலவே அங்குள்ள நர்சிங் அசிஸ்டென்ட் சுப்பிரமணி என்பவரும் லட்சுமியிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்திருக்கிறார். இவர்களிடமிருந்து தப்பி வெளியேறி வந்த லட்சுமி, லேப் அசிஸ்டென்ட் ஜான்கென்னடி என்பவரிடம், "சார் இனிமேல் ஓ.ஐ.சி.யிடம் கையெழுத்தை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள். இனி, அவரது அலு வலகத்துக்குள் நான் செல்லமாட்டேன்''’என்றிருக்கிறார். அடுத்து, பாலியல் சீண்டல் குறித்து விசாரிக்கும் அலுவலகக் கமிட்டியிடம் இருவர் மீதும் புகாரளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அந்த கமிட்டியினர், பாலி கிளினிக்கில் பொதுவிசாரணை செய்தபோது, "நான் எனது மகளாக நினைத்துத்தான் அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினேன். அதற்காக நான் அவரிடமே மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்'' என நர்ஸிங் உதவியாளர் சுப்பிரமணி பொதுமன்னிப்பு கேட்டார். ஓ.ஐ.சி. அதிகாரி துரைசிங்கத்தின் தவறையோ அங்கிருந்த நபர்கள் மறைக்கவே முயன்றுள்ளனர். எனினும், விசாரணைக் கமிட்டியினருக்கு உண்மை புரிந்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்க திருச்சி ஸ்டேசன் ஹெட்குவார்ட்டர்ஸிற்கு கடிதம் அனுப்பினர்.

Advertisment

இதனால் லட்சுமியை வஞ்சம் தீர்க்க நினைத்த துரைசிங்கம், சம்பள தொகையில் ஏதோ ஒரு குளறுபடி உள்ளது என்று கூறி மீண்டும் லட்சுமியைத் தனது அறைக்கு அழைத்து, அவரை தரக்குறைவாகத் திட்டி, டார்ச்சர் கொடுத்து எச்சரித்திருக்கிறார். இதன்பின்னர், தன்னை ஜாதிரீதியாகத் திட்டியதாகக் கூறி, ஜூன் 19-ம் தேதியன்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் லட்சுமி. இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.கண்ணன் என்ற காவலர் மூலமாக அமுக்கப் பார்த்திருக்கிறார் துரைசிங்கம். "கர்னல் தவறை ஒத்துக்கொள்கின்றார். அலுவலகமென்றால் அப்படித்தான் இருக்கும்... இனி இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம்மா'' என்று அவர் லட்சுமிக்கு அறிவுரை கூறியுள்ளார். எனவே அடுத்ததாக, முதல்வரின் தனிப் பிரிவிற்கும் புகார் மனு அனுப்பியிருக்கிறார் லட்சுமி. மேலும் சமூக நலத்துறையிலும் புகாரளித்துள்ளார்.

cc

Advertisment

முதல்வரின் தனிப்பிரிவில் கொடுத்த புகாருக்கு பெண் ஆய்வாளர் நேரடியாக வந்து விசாரணை நடத்திச் சென்றுள்ளார். அதோடு, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், லட்சுமிமீது நடைபெற்ற பாலியல் சீண்டல்கள் தொடர்பான அனைத்து சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளையும் கர்னல் துரைசிங்கம் அழித்துள்ளது தெரிய வந்ததால், அதனை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். கர்னலிடம் மூன்றுகட்ட விசாரணைகள் நடைபெற்றாலும், அவரை கைது செய்யாமல் இருக்க, இராணுவ சங்கத்தினர் மூலம் கடிதம் பெற்ற கர்னல், அதை நீதிமன்றத்தில் கொடுத்து முன்ஜாமீன் பெற்றுள் ளார்.

இந்நிலையில் திருச்சியில் ஒரு பாலி கிளினிக்கில் காலி பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்த நிலையில், லட்சுமி அந்த நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருக்கிறார். லட்சுமிக்கு 7 ஆண்டுகால அனுபவமுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு இரண்டே பேர்தான் வந்திருந்ததால் தனக்கு வேலை கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்தார் லட்சுமி. ஆனால், கர்னல் மீது புகாரளித்த ஒரே காரணத்துக்காக லட்சுமிக்கு அந்த பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு இன்னொருவருக்கு வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தான் செய்யாத குற்றத்துக்குத் தண்டனையாகத் தனது பணி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக லட்சுமி ஆதங்கப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டு தனக்கு நீதி வழங்க வேண்டுமென்று லட்சுமி கேட்டுக் கொண்டார்.

பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான இந்த மோசமான பார்வை மாறவேண்டு மென்றும், அப்போதுதான் தன்னைப் போன்றவர்களால் இச் சமூகத்தில் முன்னேற முடியுமென்றும் வேதனையுடன் குறிப்பிட்டவர், தனக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன் என்றும் குறிப்பிட் டார்.