ரண்டு அரசியல் பிரமுகர்களின் அதிரடி க்ரைம் நடவடிகைகள், தென் மாவட்டங்களை ஒட்டுமொத்தமாய் அதிர வைத்திருக்கின்றன.

oo

சம்பவம்-1:

ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலைவெறித் தாக்குதல் உள்ளிட்ட, பிணையில் வெளியே வரமுடியாத ஆறு பிரிவுகளில், தி.மு.க. ஆட்சியிலேயே தி.மு.க., ஒ.செ. ஒருவர் தூத்துக்குடி மாவட் டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த வில்லாதி வில்லன், ஒட்டப்பிடாரம் தி.மு.க. வடக்கு ஒ.செ.வாக இருக்கும் இளையராஜாதான். பல நிழல் வேலைகளைத் திரை மறைவில் நடத்தி வந்திருக்கிறார் ராஜா என்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது...

Advertisment

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பல் மருத்துவராகப் பணி புரிகிற முருகபெருமாள், மதுரையைச் சேர்ந்தவர். இவர் இதே மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும் தூத்துக் குடியைச் சேர்ந்த பெண் மருத்துவரைக் கடந்த மூன்று மாதமாக காதலித்து வந்திருக்கிறார். இந்த உரிமையில், முருகப் பெருமாள் சில வேளைகளில், அந்தக் காதலி வீடுவரையும் போய் வந்திருக்கிறார். இவர்களின் காதல், காதலியின் தாயாரான கல்லூரிப் பேராசிரியைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதையறிந்து அதிர்ந்துபோன அவர், அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.

d

தாயின் எதிர்ப்பிற்குப் பிறகும் அவர்களின் காதல் தீவிரமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பேராசிரியை, தனது முன்னாள் மாணவரான இளைய ராஜாவிடம், இது பற்றித் தெரிவித்து, பையனைக் கண்டிக்கும்படி கேட்டி ருக்கிறார்.

Advertisment

இதையடுத்து கடந்த 18-ஆம் தேதியன்று மதியம், பயிற்சி முடித்துவிட்டு வந்த டாக்டர் முருகப்பெரு மாளை, தன் சகாக்களுடன் தனது காரில் கடத்திக்கொண்டு ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டனூத்தில் இருக்கும், தன் தோட்ட வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா. திடீரென தாட்டியமான ஆட்களால் கடத்தப்பட்ட முருகப்பெருமாள் பயத்தில் அரண்டுபோனார். கோழிக்குஞ்சாய் சுருண்டுபோயிருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து, ஊராட்சி காண்ட்ராக்ட் தொடர்பான பேரங்கள் பண பரிவர்த்தனைகள் மற்றும் நிழல் காரியங்கள் போன்ற வரவு செலவு களையெல்லாம் இங்கேதான் டீல் பண்ணு வாராம் ஒ.செ. இளையராஜா.

மருத்துவர் முருகப்பெருமாளைச் சுற்றி நின்றுகொண்டிருந்த இளையராஜாவும், சகாக்களும், "காதலை இத்தோட முடிச்சுக்க லேய்... அவ பின்னால இனி போன.. நடக்குறது வேற''’என மிரட்டியவர்கள்... கம்பாலும், ரப்பர் பைப்பாலும் வெளுத்து வாங்க... அதில் ரத்தக் காயமாகி அலறியிருக்கிறார் முருகப்பெருமாள்.

உயிர் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த முருகப்பெருமாளை அரிவாளை உயர்த்தி மிரட்டியதும், பதறிப்போன அவர்... "இனி அந்தப் பக்கம் திரும்பவே மாட்டேன்'’எனக் கதறியிருக்கிறார்.

dd

"இனி தூத்துக்குடிப் பக்கமே நடமாடக்கூடாது. ஒன்னோட டிரஸ்சை எல்லாம் எடுத்துக்கிட்டு மதுரைக்கே ஓடிப் போயிரு''’-என மிரட்டியிருக்கிறார் இளைய ராஜா. அதன் பிறகே தன் சகாக்களை மருத்துவருடன் அனுப்பி அவரின் பகுதியில் கொண்டுசென்று விடச் சொல்லியிருக்கிறார். விடுதியில் மருத்துவரை இறக்கிவிட்ட சகாக்கள், உடனடியாக அவரது உடைமை களை பேக்கப் செய்து எடுத்து வர மிரட்ட... மருத்துவரும் அதன்படி தன்னுடைய லக்கேஜுடன் வர, பின்னர் அவரை அப்படியே கொண்டு சென்ற அவர்கள், மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பியதோடு, பல கிலோமீட்டர் தொலைவுக்குப் பேருந்தையும் ஃபாலோ செய்திருக்கின்றனர்.

ரத்தமும், வலியும் வேதனையுமாய் மதுரை வந்த முருகப்பெருமாள், வீட்டில் பெற்றோர்களிடம் கூடச் சொல்லாமல், தன் உயிர் நண்பனிடம் நடந்தவைகளைச் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார். அதிர்ந்துபோன நண்பர்கள் கொடுத்த தைரியத்தில், அவருடன் தூத்துக்குடி திரும்பிய முருகப்பெருமாள், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார்.

சிகிச்சையின் பொருட்டுவந்த மருத்துவ அதிகாரியிடம் தனக்கு ஏற்பட்டவைகளைத் தெரிவித்திருக்கிறார். அதன்பின் தொடர்புடைய தென்பாகம் காவல்நிலையத்திற்குத் தகவல் போக, மருத்துவமனையிலிருந்த மருத்துவர் முருகப்பெருமாளிடம் விசாரணை நடத்திய போலீசார், விஷயத்தை மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்க... அதன் பின் காவல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. ஒ.செ. இளையராஜா அவரது சகா வானவராயன் இருவரையும் கைது செய்திருக்கிறது போலீஸ்.

இதுகுறித்து நாம் மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "“ஆள் கடத்தில், மிரட்டல், ஆயுதம் கொண்டு தாக்கிய குற்றங்களுக்காக, 324, 506 (2) உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் இளையராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தலைமறைவான அவரது டிரைவர் கோபால் தேடப்படுகிறார். இதுதவிர, இளையராஜா மீது ஆறு பழைய வழக்குகள் இருக்கின்றன''’என் றார் அழுத்தமாக.

dd

சம்பவம்-2:

கடத்தல் மாஃபியாவாக மாறியிருக்கிறார் மாஜி அ.தி.மு.க. அமைச்சர் செல்லப் பாண்டியனின் மகனான ஞானராஜ் ஜெபசிங். இவர் செய்தது என்ன?

கேரளாவின் எஸ்டேட்களில் விளைபவை தரமான முந்திரியாம். அவைகளைக் கொள்முதல் செய்யும் கிள்ளியூர் முந்திரி ஆலை, அவற்றை உடைத்து சேதமில்லாமல் கிடைக்கும் முந்திரிப் பருப்புகளை அப்படியே பேக்கிங் செய்து, முதல் தரமான இவற்றைக் கூடுதல் விலைக்கு ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துவருகிறதாம்.

இதனை நோட்டமிட்ட ஜெபசிங், தன்னுடைய கூட்டாளிகளுடன் முந்திரி ஏற்றிச் செல்லும் கன்டெய்னர் லாரியைக் கடத்தத் திட்டம் போட்டார். ஆலையிலிருந்து கன்டெய்னர் கிளம்பும் போது அதனைப் பின் தொடர்ந்தவர், லாரியோடு கடத்தியிருக்கிறார்.

இந்த லாரி தூத்துக்குடி ஃபார்வேடிங் கம்பெனியைச் சேர்ந்ததாம். மேலும், கடத்தப்படும் கன்டெய்னரின் முந்திரிப் பருப்புகளை மொத்தமாக சேலத்தைச் சேர்ந்த பார்ட்டி ஒருவரிடம் விற்பதற்கு பேரம் பேசிய ஜெபசிங், கடத்திய கன்டெய் னர் லாரியை சேலம் நோக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். தகவல் போலீஸுக் குப் போயிருக்கிறது.

இந்தச் சூழ லில், கன்டெய்னர் லாரியை போலீஸ் விரட்டுவதை அறிந்தவர், உஷாராகி அதை நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் பகுதியில் நிறுத்திவிட்டுத் தப்பி யிருக்கிறார்.

இதற்கிடையே ஜெபசிங் குரூப், கன்டெய்னரின் டிரைவர் ஹரியை தங்களின் காரில் கடத்திக்கொண்டு சென்ற போது, காரிலுள்ளவர்கள் ரிலாக்சுக்காக வெளியே நின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஹரி, தன்னுடைய லாரியைக் கடத்தியவர்கள், தன்னைக் காரில் கடத்தி அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக தனது வாயில் மது ஊற்றியதையும் அந்தக் காரின் நம்பர் 5555 என்றும் தன்னோடு ஆலையிலிருந்து வெளியேறிய மற்றொரு லாரி டிரைவரிடம் கைபேசியில் சொல்ல, அதையடுத்தே அந்த டிரைவர் ஆலையைத் தொடர்புகொண்டு நடந்தவைகளைத் தெரிவிக்க, அந்தத் தகவல் அந்த ஆலைக்குச் சென்றது. பின்னரே ஆலையின் கணக்கர் முத்துக்குமார், தூத்துக்குடி போலீசுக்குப் புகார் செய்திருக்கிறார். தொடர்ந்து நடவடிக்கைகள் வேகமெடுத் துள்ளன.

இந்நிலையில் கன்டெய்னர் லாரியை விட்டு விட்டுத் தப்பித்த ஜெபசிங்கும் சகாக்களும் நாமக்கல் திம்மநாயக்கன் பட்டி எல்லையில் காரிலிருந்தபோது, போலீஸிடம் சிக்கினர். அவர்களுக்கு லாடம் கட்டிய பிறகே, தங்களின் நடவடிக்கைகள் முழுதையும் போலீஸிடம் ஒப்பித்திருக்கிறார் களாம்.

அரசியல் கிரிமினல்களின் அதிரடிகளால் காவல்துறையினரே, அதிர்ந்து போயிருக் கிறார்கள்.