"ஹலோ தலைவரே, தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்குதே?''”
"இந்தியா சுதந்திரத்தின் 75 ஆண்டு நிறைவையொட்டி இந்தியா முழுவதும் பாத யாத்திரையை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்திருக்கு. தமிழகத்தில் இந்த பாத யாத்திரையை ராகுல்காந்தி தொடங்கிவைக்க இருக்கிறார். இது குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத்தான் மாநில தலைவரான கே.எஸ். அழகிரி நடத்தினார். இதில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.ஸ். இளங்கோவன், மேலிட பிரதிநிதி ஸ்ரீவல்லபிரசாத், சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துக்கிட்டாங்க. இதில் பேசிய நிர்வாகிகள் பலரும், காங்கிரசை தி.மு.க. மதிக்க மறுக்குது என்றும் தமிழக காவல்துறையில் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் மரியாதை, காங்கிரஸுக்கு கிடைக்கிற தில்லை என்றும் குமுறித் தீர்த்துட்டாங்க.''”
"தமிழக காங்கிரஸுக்கு புதிய நிர்வாகிகள் போடப்போறதா தகவல் கசியுதே?’''’
"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரசில் செயல் தலைவர்களாக டாக்டர் விஷ்ணுபிரசாத், டாக்டர் ஜெயக்குமார், மயுரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகிய 4 பேர் இருக்காங்க. இவர்களுக்கு பதில் புதிய செயல் தலைவர்களை நியமிக்க அதன் அகில இந்தியத் தலைமை ஆலோசிச்சிருக்கு. இந்தப் பதவிகளில் தங்கள் வாரிசுகளை நியமிக்கணும்னு கட்சியின் சீனியர்கள் துடிக்கறாங்க. அதேபோல, கட்சியின் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.களும் கூட இந்தப் பதவிகளுக்காக காய் நகர்த்தறாங்க. அதனால் வாரிசுகளுக்கும் பதவியில் இருப்பவர் களுக்கும் வாய்ப்பு கொடுக்கக்கூடாதுன்னும், குற்றப்பின்னணி இல்லாத பெரும் பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கும், இதுவரை பதவி கிடைக்காதவர்களுக்கும் இந்தப் பதவியைக் கொடுக்கணும்னு பலரும் சோனியா, ராகுலுக்கு கடிதம் அனுப்பிக்கிட்டு இருக்காங்க.”
"தமிழக செய்தித் துறையில் சலசலப்பு தெரியுதே?''”
"வழக்கமா, செய்தித்துறையில் இருந்துதான், அரசுத் துறை களுக்கான பி.ஆர்.ஓ.களை நியமிப்பாங்க. ஆனால் இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித் துறையின் பி.ஆர்.ஓ.வாக தனியார் தொலைக் காட்சியான நியூஸ் 7-ல் பணிபுரிந்த விஜய்ஆனந்த் என்பவரை அண்மையில் நியமித்திருக்கிறார் அந்தத் துறையின் ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறவர்களுக்கு மாதச்சம்பளம் ஒன்றரை லட்ச ரூபாயாம். விஜய்ஆனந்த், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.''”
"அட்மிசன் நேரத்தில் கல்லூரிகள் பலவும் சீட் வியாபாரத்தில் சக்கைப்போடு போடுதேப்பா?''
"ஆமாங்க தலைவரே, எத்தனை விதிமுறை களை வகுத்தாலும் கல்வித்துறை கிரிமினல்கள் திருந்தறதா இல்லை. உதாரணத்துக்கு சென்னையை எடுத்துக்கிட்டா, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி நிர்வாகத்தில் இருக்கும் சிலர், இளநிலைப் படிப்புகளுக்கான சீட்டுகளை பேரம் பேசி வித்துக்கிட்டு இருக்காங்க. முதல் பட்டியல் மெரிட்டின் அடிப்படையில் வெளியான பிறகு, அடுத்தடுத்த லிஸ்டுகளை வெளியிடுறதில்லை. தமிழ்த்துறைத் தலைவர் சீனிவாசன்
என்பவரின் தலைமையில் செலக்ஷன் கமிட்டி இருந்தும், கலெக்ஷனுக்கு குறைச்சல் இல்லையாம். அதனால் போராட்டத்துக்கு மாணவர்கள் தரப்பு தயாராகி வருது. சிலர் இந்த விவகாரத்தை துறை அமைச்சர் பொன்முடி கவனத்துக்குக் கொண்டுபோக முயற்சி பண்றாங்க.''”
"அடுத்து செஸ் ஒலிம்பியாட் ஊழல்னு புதுசா ஒரு விவகாரத்தைக் கிளப்ப, பா.ஜ.க. அண்ணாமலை ரெடி ஆகறாரே?''”
"செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்தித்துறை சார்பில் பல கோடிகளுக்கு அதற்கான ஏஜன்ஸிகள் மூலம் விளம்பரம் கொடுக்கப்பட் டது. இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருக்குன்னும், அதிகாரிகளுக்கு கணிச மான தொகை கமிஷ னாகக் கொடுக்கப் பட்டிருக்குன்னும் குற்றம்சாட்டுபவர்கள், இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போக முயற்சித்தும் முடி யலையாம். இந்த நிலையில் அவர்கள், பா.ஜ.க. அண்ணா மலையிடம் இந்த விவகாரத்தை கொண்டு செல்ல, இதைக்கண்டு உற்சாக மான அவர், கச்சேரியை ஆரம்பிச்சிட லாம்னு சொல்லியிருக்காராம்.''
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ரெண்டு நாளைக்கு முன்பு, மன்னார்குடி தரப்பின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் சசிகலாவும் கலந்துக்கிட்டார். அப்ப, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் தரப்பில் நடந்த ரெய்டு குறித்து அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, அந்த ஆளு ஓ.பி.எஸ்.சுக்கும் உதயகுமாருக்கும் நெருக்கமான ஆளு. அங்க தேள் கொட்டினால் இவங்களுக்கு நெறிகட்டும்னு சொல்லி, சசி தரப்பு ஏகத்துக்கும் சிரித்ததாம்.''