மிழக அரசு நிர்வாகத்தில் ஒருவிதமான அதிகாரம் நிலவுகிறது. அதனால்தான் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம், கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

காவல்துறையில் டி.எஸ்.பி. முதல் டி.ஜி.பி. வரை நியமிப்பதற்கு, அவர்களுக்கு டிரான்ஸ்பர் போடுவதற்கு என ஒரு கமிட்டி இருக்கின்றது. அந்தக் கமிட்டியில் உளவுத்துறை ஐ.ஜி.யான டேவிட்சன் தேவாசீர்வாதம், நிர்வாக ஏ.டி.ஜி.பி.யான வெங்கட்ராமன் மற்றும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யான சங்கர், சென்னை நகர காவல்துறை கமிஷனரான சங்கர் ஜிவால் ஆகியோர் இருக்கிறார்கள். அதில் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. அதனால் சென்னை நகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் சென்னை நகருக்குள் ஏதாவது பதவி போடுவதாக இருந்தால் மட்டும் என்னிடம் கேளுங்கள் எனச் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

dd

Advertisment

மீதம் இருக்கக்கூடிய நிர்வாகப் பிரிவு அதிகாரிகளான வெங்கட்ராமனும், சங்கரும் டேவிட்சன் சொல்வதைத்தான் கேட்கிறார்கள். டேவிட்சன்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் போலீசை நியமிக்கக்கூடிய அதிகாரத்தைப் பெற்றவராக உலா வருகிறார். அவருக்கு முதல்வரின் செயலாளராக இருக்கக்கூடிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஆதரவும் இருக்கின்றது. அவர் போடும் நியமனங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேள்வி கேட்டால் உதயசந்திரன் பேரையும், முதல்வரின் பேரையும் சொல்லி அவருக்கு நெருக்கமானவர்களை நியமனம் செய்கிறார். இந்த டேவிட்சனும், கோவை கமிஷனர் பாலகிருஷ்ணனும் சேர்ந்துதான் கோவையில் காரில் சிலிண்டர் வெடிகுண்டு வெடித்ததை கோட்டை விட்டார்கள்.

dஇப்பொழுது தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக இருக்கும் சைலேந்திர பாபு, வருகிற ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். ஒருவர் டி.ஜி.பி.யாக பதவி வகித்தால் அவர் இரண்டு வருடம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகிக்க வேண்டும் என வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் சைலேந்திர பாபுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை உடனடியாக ராஜினாமா செய்யுங்கள் என ஒரு அழுத்தம் டேவிட்சன் தேவாசீர் வாதத்தால் கொடுக்கப்பட்டதாம். அந்த அழுத்தத்தை அப்படியே ஆளுங்கட்சி வட்டாரங்களிடம் தெரிவித்துவிட்டாராம் டி.ஜி.பி. "நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்ய முடியாது'' என்று கறாராக மறுத்து விட்டாராம் சைலேந்திரபாபு.

சைலேந்திரபாபுவுக்கு அடுத்தபடியாக டி.ஜி.பி. பதவி பெறுவதற்கு ஐந்துபேர் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள். சஞ்சய் அரோரா, ஏ.கே.விஸ்வ நாதன், பி.கே.ரவி, கந்தசாமி மற்றும் சென்னை நகர கமிஷனராக இருக்கும் சங்கர் ஜிவால்.

சஞ்சய் அரோரா டெல்லி மாநகர காவல் கமிஷனராக ஆகிவிட் டார். பி.கே.ரவி மீது, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடித்துவிட்டு தகராறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு அவரை எந்த சட்டம்-ஒழுங்கு பதவியிலும் தமிழக அரசு நியமிக்கவில்லை.

மிச்சமிருப்பது ஏ.கே.விஸ்வ நாதன், கந்தசாமி மற்றும் சென்னை நகர கமிஷனராக இருக்கும் சங்கர் ஜிவால். இதில்dd ஏ.கே.விஸ்வநாதனுக் கும், சங்கர் ஜிவாலுக்கும், டேவிட் சன் தேவாசீர்வாதத்துக்கும் ஏழாம் பொருத்தம். எனவே இவர்களை தகுதி இழப்பு செய்ய டேவிட்சன் தேவாசீர்வாதம் காய் நகர்த்த ஆரம் பித்தார். சமீபத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாஜி அமைச்சர் வேலு மணிக்கு வேண்டியவரான மலர்விழி என்கிற கல்லூரி அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. மலர்விழி, ஏ.கே.விஸ்வ நாதனுக்கு குடும்ப நண்பர். அவர் வீட்டில் ரெய்டு நடந்தபோது ஏ.கே.வி. லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கந்தசாமியை மிரட்டினார் என ஒரு குற்றச் சாட்டை முதல்வரின் செயலாளர் உதய சந்திரன் மூலம் டேவிட்சன் முன்வைத் தார். இதுபற்றி முதல்வரே கந்தசாமியிடம் கேட்டார். "ஏ.கே.வி. தொலைபேசியில் பேசினார் அவ்வளவுதான்... மிரட்ட வில்லை' என கந்தசாமி விளக்கமளித்தார். ஆனால், வேலுமணிக்கு ஆதரவாக ஏ.கே.வி. செயல்படுகிறார் என அறப்போர் இயக்கம் ஏற்கெனவே எழுப்பிய குற்றச் சாட்டை சொல்லி டேவிட்சன், ஏ.கே.வி.யை அ.தி.மு.க. ஆதரவு அதிகாரி என கட்டம் கட்டினார்.

அடுத்தது சென்னை நகர கமிஷனர் சங்கர் ஜிவால். இவருக்கு முதல்வரிடத்தில் நல்ல பெயர். முதல்வரிடம் நேரடியாக பேசக்கூடிய இவர் நேர்மையாளர்; கடமை தவறாதவர் என பெயர் பெற்றிருக்கிறார். இவர் டி.ஜி.பி.யாக வந்தால் ஆபத்து என கந்தசாமியை டி.ஜி.பி.யாக டேவிட்சன் முடிவு செய்தார். அதற்காக கந்தசாமிக்கு சர்வீஸ் குறைவு. டி.ஜி.பி.யாக வருபவர் குறைந்தபட்சம் பணி ஓய்வுபெற ஆறுமாதம் சர்வீஸ் இருக்க வேண்டும் என்பதால், சைலேந்திரபாபு ஓய்வு பெறும்போது கந்தசாமியை டி.ஜி.பி.யாக நியமிக்க முடியாது என்பதால், சைலேந்திரபாபுவை இப்பொழுதே ராஜினாமா செய்து விடுங்கள் என டேவிட்சன் கூறுகிறார் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

தனக்கு வேண்டியவர் பதவி பெற மற்றவர்களை திட்டமிட்டு முதுகில் குத்தும் வேலைகள் நடப்பதும், காவல்துறை அதி காரமயமாகி வருவதும் ஒட்டுமொத்த தமி ழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கிடையே தி.மு.க. ஆட்சியில் டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி மீது தி.மு.க. வழக்கறிஞர் விடுதலை... “"திரிபாதி, குவைத் ராஜா என்ற நபர் மூலம் 10 இன்ஸ்பெக்டர் 12 டி.எஸ்.பி. 2 எஸ்.பி.க்களை நியமனம் செய்தார்' என விழுப்புரம் கோர்ட்டில் ஒரு வழக்கில் நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

ராஜேஷ்தாஸ் என்கிற முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.க்காக ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, திரிபாதியை நோக்கி நேரடியாக எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டுகள் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.