இரு மாநில பதற்றத்துக் குக் காரணமாகிய பா.ஜ.க.வின ரின் வதந்தி குறித்து, “"வதந்தி பரப்பிய பா.ஜ.க.! வடமாநில தொழிலாளர்கள் பீதி!'’என 2023, மார்ச் 8-10 இதழில் கட்டுரை வெளியிட்டிருந் தோம். எதிர்காலத்தில் இத்த கைய சிக்கல் ஏற்படாதவண் ணம் அடுத்தகட்ட நடவடிக் கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
சமூக ஊடகங்களைக் கையி லெடுத்துக் கொண்டு பா.ஜ.க.வினர் பரப்பிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அவற்றை சரியான முறையில் அணுகி, படிப்படியாக பதட்டத்தைத் தணியச் செய்யும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையாண் டார். முதலில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் போலியானவை என்பதை காவல்துறை உதவியுடன் நிரூபித்தார். அந்த வீடியோக்களின் பின்னணியை விளக்கி, அவை போலியானவை என ஹிந்தியிலே சமூக ஊடகங்களில் பதிவிட்டது காவல்துறை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/northindian_1.jpg)
பீகார் மாநில அரசு அதிகாரிகள் குழு வொன்றை வரவழைத்து, அம்மாநிலத் தொழி லாளர்கள் அதிகம் காணப்படும் இடங்களுக்கு அழைத்துச்சென்று, தமிழகத்தில் அவர்கள் பாதுகாப்பதாக இருப்பதாக அவர்கள் வாயாலே ஒப்புக்கொள்ள வைத்தார். தமிழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பெற்றோர்- உறவினர் சொந்த மாநிலத்தில் பரவும் இத்தகைய வதந்தி களால் அச்சமடைவது இயல்பு. ஸ்மார்ட் போன் களைப் பயன்படுத்தும் வெளிமாநிலத் தொழி லாளர்கள், “"நாங்கள் நலமாக இருக்கிறோம்... பயப்படத் தேவையில்லை'’என வீடியோ எடுத்து அவரவர் குடும்பத் துக்கு அனுப்பலாம். இதனால் அவர்களும் நிம்மதியாவார்கள். வதந்திகளின் வீச்சும் குறையுமென மதுரை தொழிலாளர் நலத்துறை இணைகமிஷனர் சுப்பிரமணியன் யோசனை தெரிவித்துள்ளார். தி.மு.க. பாராளுமன் றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பீகார் மாநிலத் தலைவர் நிதிஷ்குமாரை மார்ச் 7-ஆம் தேதி சந்தித்து விளக்கம் அளித்ததுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தையும் அளித்தார்.
நாகர்கோவிலில் பிப்ரவரி 7-ல் நடந்த கலைஞர் சிலை திறப்புவிழாவில் வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தைத் தொட்டு, "தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது' என்று மக்களுக்குத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், வந்த இடத்திலும் காவல்கிணறு பகுதியில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுக்கு நம்பிக்கையளித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/northindian1_1.jpg)
தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த்குமார் உம்ராவ், தனது பதவியைக் குறித்த பொறுப்பு கொஞ்சமும் இன்றி, பீகாரைச் சேர்ந்த 12 பேர் தமிழகத்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக பதிவிட்டார். இதை யடுத்து தமிழக காவல்துறை அவர் மீது வதந்தி பரப் பியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் தது. இதனால் எச்ச ரிக்கையடைந்த அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 20-ஆம் தேதிவரை அவருக்கு தற்காலிய முன்ஜாமீன் அளித்து உத்தர விட்டது. அந்த தேதிக்குள் சென்னை நீதிமன் றத்தை அணுகி பரிகாரம் தேடும்படி வழிகாட்டி யுள்ளது. வதந்தி பரப்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ், அவருக்கு உடந்தையாக இருந்து ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, பீகாரில் பா.ஜ.க.வுடன் கூட்டணியிலுள்ள லோக் ஜனசக்தி தலைவரும் ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமாகிய சிராக் பஸ்வான், முதலில் சமூக ஊடகப் பதிவுகளையும், போலி வீடியோக்களையும் நம்பி தமிழக அரசைக் கண்டித்துப் பேசினார். அதற்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா கண்டனம் தெரிவித் தார். இந்நிலையில் சென்னை வந்த சிராக் பஸ்வான், தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களைச் சுற்றிப்பார்த்து உண்மை நிலையை அறிந்தபின், "வடமாநிலத் தொழிலாளர் கள் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம். பீகாருக்கும் தமிழகத்திற்கும் இடையே நட்புறவு உள்ளது''’என்று மனம்மாறிப் பேசியிருக்கிறார்.
இப்படி விஷயம் சுமுகமாகி வரும் நிலையில், 2021 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்த பிரசாந்த்கிஷோர் "சில பத்திரிகையாளர்கள் போலி வீடியோக்களைப் பகிர்ந்துள்ளதை, “பீகார் துணைமுதல்வர், சமூக ஊடகங்களில் பரப்பப்படுபவை போலி வீடி யோக்கள் என்கிறார். எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். உண்மை வீடியோக்களைப் பகிர்கிறேன்''’என்றதோடு, பிப்ரவரி 16-ஆம் தேதி ரயிலில் மகிமைராஜ் என்பவரால் வட இந்தியர் தாக்கப்பட்ட வீடி யோவைப் பதிவிட்டு, “இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென பீகார் அரசு கேட்கவேண் டும்''’என பதிவிட் டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/northindian2_0.jpg)
இந்த சம்பவத்தில் மகிமைராஜை அடை யாளம்கண்டு ரயில்வே போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ததோடு, கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.
பீகாரைச் சேர்ந்தவர்களோ, பிறரோ தாக்கப்படும் வீடியோக்கள் பிரசாந்த் கிஷோரிடமிருந்தால் கொண்டுவந்து பதிவிட்டுக் கேள்விகளை எழுப்பட்டும். தமிழக அரசும் உரிய பதில்களை அளிக்கும். இதுவரை யார் கவனத்துக்கும் வராத நிகழ்வுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, தாக்குதல் நடந்திருக்கும் என்ற முன் ஊகத்தோடு ஒரு விவகாரத்தை அணுகுவது தவறான கண்ணோட்டம்.
தழல் அணைந்தாலும், ஊதிப் பெரிதாக்க இன்னும் சில விஷமிகள் மல்லுக்கட்டுவதுதான் தவறான அணுகுமுறை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/northindian-t_0.jpg)