"பெத்த மனம் பித்து! பிள்ளை மனம் கல்லு!' என்ற பழமொழிக்கேற்ப, சொத்துக்காக பெற்ற தாயையே விரட்டியடித்து கோவிலில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளிய சம்பவம் பார்ப்போரை பதற வைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டம் போடிநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரசு. குழந்தைகள் சிறுவயதாக இருந்தபோதே கணவர் இறந்துவிட்டதால், தனிமனுஷியாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளையும் வளர்த்து திருமணம் செய்து வைத்து, 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்த நிலத்தை சரசுவின் மகன் பொன்னுவேல் விற்க முற்பட, அதற்கு சரசு மறுத்ததால் தாயை அடித்து விரட்டி யுள்ளார். இதையடுத்து சரசு மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக் டர் வசந்தா விசாரணை நடத்தி, சொத்தில் தாய், மகன், மகள் என மூவருக்கும் சம பங்கிருப்பதாகக் கூறி, 15 ஏக்கரை மூன்றாகப் பிரித்து விவசாயம் செய்ய வழங்கலாம் என அப்போதைய ஆர்.டி. ஓ.வுக்கு அனுப்பியுள்ளார். ஆர்.டி.ஓ.வும், மூத்தோர் பாதுகாப்புச் சட்டப்படி பிரச்சனையில்லாமல் பிரிக்க வேண்டுமென்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேனென்றும் மகனைக் கண்டித்து அனுப்பியுள்ளார்.
அவர் சொன்னபடி மகன் செயல்படாததால் தர்மபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு சரசுக்கு வழங் கப்படவேண்டுமென்று தீர்ப்பானது. ஆனாலும் கட்டுப்படாத பொன்னுவேல், சேர்மனின் கணவர் செங்கண்ணன் மூலமாக பிரச்சினை செய்து தாயை மீண்டும் விரட்டியுள் ளார். "இவ்விவகாரத்தில் மொரப்பூர் இன்ஸ்பெக்டர் வான்மதி எந்த நட வடிக்கையும் எடுக்காமல் மகனுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருவதாக வும், இதுகுறித்து அரூர் டி.எஸ்.பி. மற்றும் தர்மபுரி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தும் எந்த நட வடிக்கையும் இல்லையென் றும், அதனால் இப்படி கோவிலிலும், தெருக் கடைகளிலும் படுத்துக்கிடக்கிறேன்' என்றும் மனம்நொந்து கூறினார் சரசு.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வான்மதியிடம் கேட்டபோது, "இது தொடர்பான வழக்கு நிலுவை யில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் மூத்தோர் பாதுகாப்பு மூலம் ஆர்.டி.ஓ. ஆர்டர் எனக்கு வரவில்லை. அப்படி வரும்பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கமுடியும்'' எனக்கூறி நழுவினார்.
நம்மிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தர்மபுரி மா.செ.வான கமலா மூர்த்தி, "தர்மபுரி மாவட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியான ஒன்றாகவே உள்ளது. குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெற்ற மாவட்டமாகவும் உள்ளது. கணவன் விவாகரத்து செய்யாமலேயே மற்றொரு திருமணம் செய்து வாழ்வதும் நடக்கிறது. இப்படி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு அதிகாரிகளும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தான் இப்படியான கொடுமைகள் நடக்கின்றன'' என்றார். மகனால் விரட்டப் பட்ட தாய்க்கு நீதி கிடைக்குமா?
-அருண்