சேலம் பெரியார் பல்கலையில் நூலகர், உடற்கல்வி இயக்குநர் பணி நிய மனங்களில் விதிமீறல் நடந்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் ஆட் சேபனை தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரம் உயர்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகராக ஜெயப்பிரகாஷ், உடற்கல்வி இயக்குநராக வெங்கடாச்சலம் ஆகியோர் கடந்த 27.9.2022ஆம் தேதி நியமிக்கப்பட்டனர். இவ்விரு பதவி களும் பேராசிரியர் அந்தஸ்திலான நிரந்தர பணியிடங்களாகும்.
நூலகர், உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சில அடிப்படைத் தகுதிகளை வரையறை செய்துள்ளது. அதன்படி, நூலகர் பதவிக்கு நியமிக்கப்படுபவர், பல்கலையில் ஏதேனும் ஒரு நிலையில் நூலகராகவோ அல்லது, நூலக அறி வியல் துறையில் உதவி / இணை பேரா சிரியராகவோ அல்லது கல்லூரியில் நூலகராகவோ பணியாற்றியிருக்க வேண்டும்.
அதேபோல, உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்படுவோர், பல்கலையில் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை யில் உதவி/துணை இயக்குநராகவோ, அல்லது கல்லூரியில் துணை உடற் கல்வி இயக்குநராகவோ, அல்லது உதவி / இணை பேராசிரிய ராகவோ இதே துறையில் பணியாற்றி இருக்க வேண்டும். இந்த இரண்டு பதவிகளுக்கும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். இந்த 10 ஆண்டு முன் அனுபவம் என்பது தொடர்ச்சியாகப் பணியாற்றியிருந்தால் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இவற்றுடன் வழக்கமான கல்வித் தகுதிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்கிறது யு.ஜி.சி.
இந்நிலையில், நூலகர் ஜெயப்பிர காஷ், உடற்கல்வி இயக்குநர் வெங்கடாச் சலம் ஆகிய இருவருமே விதிமுறைகளை மீறி பணிவாய்ப்பு பெற்றுள்ளதாக பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தலையில் "நங்'கென்று குட்டு வைத்தது தணிக்கைத்துறை.
இதுகுறித்து விளக்கம் கேட்டு, உள்ளாட்சித் தணிக்கைத்துறை சேலம் மண்டல இணை இயக்குநர் கணேசன், பெரியார் பல்கலை பதி வாளருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதமும், தணிக்கைத் தடை விவகாரமும் இப்போது வெளியே கசிந்ததால் தற்போது பேசுபொருளாகி யுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரி யர்கள் சங்க முன் னாள் தலைவர் பாண்டியனிடம் பேசினோம். "பெரியார் பல்கலையில் நூலகர், உடற்கல்வி இயக்குநர் பணி நியமனங்களில் 200 புள்ளி இனச்சுழற்சி விதி பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு சட்டப்படி, இவ்விரு பணியிடங்களும் எஸ்.சி., அல்லது எஸ்.சி. (ஏ) சமூகத்தினருக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களின் முன்அனுபவமும் குறைவு.
நூலகர் ஜெயப்பிரகாஷ், இதே பெரியார் பல்கலையில் 8 ஆண்டுகள் 4 மாதங்கள் நூலக அறி வியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி யாற்றியுள்ளார். அதற்கு முன்பு தனியார் கல்லூரி யில் 5 ஆண்டுகள் 5 மாதங்கள் நூலகராகப் பணி யாற்றியுள்ளார். கற்பித்தல் பணியையும், நிர்வாகப் பணியையும் ஒரே பணி அனுபவமாகக் கருத முடியாது.
அதேபோல, உடற்கல்வி இயக்குநராக நிய மிக்கப்பட்டுள்ள வெங்கடாச்சலம், பாப்பிரெட்டிப் பட்டியில் உள்ள பெரியார் பல்கலை உறுப்புக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராக ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார். அதற்கு முன்பு தனியார் கல்லூரியில் பணியாற்றிய காலத்தையும் ஒருங்கிணைந்த முன்அனுபவமாகக் கணக்கிட்டு பணி நியமனம் செய்துள்ளனர். அவ்வாறு நியமிப்பதும் செல்லாது. இதற்கு முன்பு, பெரியார் பல்கலை துணைவேந்தராகப் பணியாற்றிய சுவாமிநாதனின் பணி நியமனமும் விதிமீறல் தான்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது ஏன் என்பதற்கு இது வரை விளக்கம் தரவில்லை. நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதை சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் ஏன் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்? இதில் நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரிடமே புகார் மனு அளித்திருக்கிறோம்'' என்று வெடித்தார் பாண்டியன். "சிண்டிகேட் குழுவில் ஆளுநரின் சார்பில் இடம்பெற்றுள்ள மூன்று பிரதிநிதிகளும், அரசு சார்பு பிரதிநிதிகளும், அரசு பிரதிநிதிகளும் கேள்வியே எழுப்பாமல் இந்தப் பணி நியமனங் களுக்கு இசைவளித்து கையெழுத்திட்டது ஏனென் றும் புரியவில்லை. மீண்டும் துணைவேந்தர் சார்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினரையே இவ்விரு பதவிகளிலும் நியமித்துள்ளனர். இப்பதவிகளுக்காக ஆளுநர் மாளிகை வரை கணிசமான லகரங்கள் கைமாறியிருக்கிறது. இந்தப் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்'' என்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்.
இது தொடர்பாக நூலகர் ஜெயப்பிரகாஷ், உடற்கல்வி இயக்குநர் வெங்கடாச்சலம் ஆகியோரிடம் கேட்டபோது, "நாங்கள் போதிய முன்அனு பவம், கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்கிறோம். தணிக்கை அறிக்கையில் சொல்லப் பட்டுள்ள விவகாரங்களுக்கு உரிய விளக்கம் தரப் பட்டுள்ளது.'' என்றனர். " ஊழல் புகழ்' துணைவேந்தர் ஜெகநாதனிடம் விளக்கம் பெற செல்போனில் அழைத்தோம். வழக்கம்போல் அழைப்பை ஏற்கவில்லை. உரிய விளக்கம் அளிக்கும்பட்சத்தில் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
இந்நிலையில், பெரியார் பல்கலையில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பழனிசாமி தலைமையிலான குழு, கடந்த 5-2-2024ல் சமர்ப்பித்த அறிக்கை மீது ஏன் இப்போதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்று கேள்வியெழுப்புகிறார்கள் பேராசிரியர்கள்.