தேனி மாவட்டத்திலுள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்குக்கு லண்டனில் சிலைவைக்க தமிழக அரசு முடிவுசெய்தது.

அதன் அடிப்படையில் லண்டனில் வாழும் தமிழ்ச்சங்கம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே மார்பளவு கொண்ட பென்னிகுக் சிலையை தமிழக அரசு தயார்செய்து கொடுத்தது. அதை முதல்வர் ஸ்டாலின் திறப்பதாக இருந்தது. முதல்வரின் வேலைப்பளு காரணமாக செல்லமுடியாததால், அவருக்குப் பதிலாக கூட்டுறவுத்துறை அமைச் சர் ஐ.பெரியசாமியை திறந்துவைக் கச் சொல்லியிருந்தார்.

dd

கடந்த 6-ஆம்தேதி அமைச்சர் லண்டன் சென்றிருந்தார். 10-ஆம் தேதி லண்டனிலுள்ள கேம்பர்- நகரின் பூங்கா மையப்பகுதியில் பென்னிகுக் சிலையை அமைச்சர் ஐ.பி. திறந்துவைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்தநிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்த இங்கி லாந்து ராணி இரண்டாம் எலிசபெத் திடீரென காலமானார். இதனால் லண்டனில் அனைத்து அரசு விழாக் களும் ரத்து செய்யப்பட்டன.

இதுசம்பந்தமாக லண்டனி லுள்ள தமிழ்ச்சங்க நிர்வாகிகள், "ராணி இறந்தது லண்டனில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. இருந்தாலும் லண் டன் மேயர் விழா ஏற்பாடுகளைச் செய்து சிலையைத் திறந்து வையுங்கள் என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை தமிழக முதல் வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டுசென்றோம். முதல்வர் ஸ்டாலினோ, ராணி மரணத்தால், உலகமே சோகத்தில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் விழா வைக்கவேண்டாம். அந்த துக்கத்தில் நாமும் கலந்துகொள்ள லாம். விழா நிகழ்ச்சிகள் அனைத் தையும் ரத்து செய்துவிடுங்கள். சிலையை மட்டும் அமைச்சர் திறந்து வைத்துவிட்டு வரட்டும் என்று கூறினார். இந்த விஷயத் தை லண்டனில் மேயர் அலுவல கத்திலுள்ள ஆங்கிலேயர்களிடம் கூறியபோது அவர்கள் நெகிழ்ந்து போய்விட்டனர். அதைத் தொடர்ந்து பென்னிகுக் சிலை யை அமைச்சர் ஐ.பி. எளிமையா கத் திறந்து வைத்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக்கிற்கு அவர் பிறந்த ஊரான கேம்பர்லியில் சிலை வைக்கப்படும் என்று முதல் வர் சட்டசபையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த சிலை ஒரே ஆண்டில் நிறுவப்பட்டு இருக் கிறது.”நிகழ்வில் தேனி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களான கம்பம் ராமகிருஷ்ணன், மகா ராஜன், சரவணக்குமார், தளபதி எம்.எல்.ஏ. ஆகியோருடன் பென்னிகுக் வாரிசுகளும் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்'' என்றார்.

திட்டமிடப்பட்டிருந்த அசல் நிகழ்வில், இந்தியாவிலுள்ள பல மாநில கலைநிகழ்ச்சிகளும் மூன்று மணிநேர அளவுக்கு லண்டன் தமிழ்ச் சங்கத்தால் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. விழா முடிந்த வுடன் லண்டன் மேயர், நமது அமைச்சர் ஐ.பி. உள்பட எம்.எல். ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து கொடுப்பதாகவும் இருந்தது. அதுவும் ரத்து செய்யப் பட்டது’.

Advertisment