தென்மாவட்டத்தில் டென்ஷன் இல்லாமல் தலைவர்களின் குருபூஜைகள் நடைபெற வேண்டும் என் பதற்காக ரொம்பவே கவனம் செலுத்துகிறார்கள் காவல் துறையினர். அந்த வகையில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் இறுதிவரை ஊண், உறக்கமின்றி கண் கொத்திப் பாம்பாக கூடுதலாக காவலை பலப்படுத்திவரும் காவல்துறை. இதனைக் கவனத்தில் கொண்ட அப்போதைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், தலைவர்களின் குருபூஜைக்கு வருபவர்கள் குறித்து கட்டுப் பாடுகள் விதித்தார். காவல் துறையும் அமல்படுத்தவே சாதீய பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டன.
வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதியன்று நடைபெற வுள்ள பசும்பொன் முத்து ராமலிங்கரின் ஜெயந்திக்காக முந்தைய கட்டுப்பாடுகளுடன், தற்பொழுதுள்ள கொரோனா பெருந்தொற்றையும் காரணம் காட்டி "பிற மாவட்டங் களிலிருந்து வரும் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்கு அனுமதியில்லை. ஒலிபெருக்கி வைத்தல், சமுதாயக் கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போல் வேடமிட்டு வருதல், அன்ன தானக்கூடம் அமைத்து பரிமாறுதல், ப்ளக்ஸ், பேனர் வைத்தல் ஆகியனவற்றிற்கு தடை எனவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வருபவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கைப்படி வருதல் வேண்டுமென'' கட்டுப்பாடு களை விதித்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
இதன்பொருட்டு காவல் துறையும் கிராமம், கிராமமாக சென்று அரசின் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டிய நிலையில்... முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றிய 448 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான ஆப்பநாடு மறவர் சங்கத் தினர் திடுமென கூட்டத்தினைக் கூட்டி, "ஒவ்வொரு கிராமத்தி லிருந்தும் விரதமிருந்து பால் குடம், முளைப்பாரி எடுத்து பக்தியுடன் அமைதியான முறையில் மரியாதை செலுத்த வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்தில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் பாத யாத்திரையாக செல்லவேண் டும்'' என்கின்ற தீர்மானத்தை இயற்றியுள்ளனர். இத்தகைய தீர்மானம் அரசிற்கு சென்ற நிலையில்... காவல்துறை, இதன் பின்னணியில் யார் இருக்கலாம்..? என்கின்ற விசாரணையை துவக்கியுள்ளது.