இல்லாத குறைக்கு நிலத்தை, வீட்டை விற்கலாம்,… நகையை விற்கலாம்...… இக்கட்டான நிலையில் பாத்திரம், பண்டத்தைக்கூட விற்றுத் திங்கலாம். பத்துமாதம் சுமந்துபெற்ற குழந்தையை விற்பார்களா? விற்பார்கள், என்கிறார்கள் அரியலூர் மாவட்டம் வடவீக்கத்துக்காரர்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வடவீக்கம் கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர் சரவணன். ஏற்கனவே திருமணமானவர். முதல் மனைவி மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. பெயர் பிரியதர்ஷினி. கொத்தனார் வேலை செய்யச் சென்ற இடத்தில் சரவணனுக்கு மீனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின் மீனாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தை சிவானியை வறுமை காரணமாக சரவணன், புரோக்கர் கள் மூலம் முன்பே விற்பனை செய்துள் ளார். தற்போது பிறந்து மூன்று மாதமான பெண் குழந்தை சுபஸ்ரீயை விற்பனை செய்வதற்கு சரவணன் முயற்சிசெய்துள்ளார். இதற்கு அவரது மனைவி மீனா மறுத்துள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வேறுவழியில்லாமல் கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மீனா குழந்தையை விற்பனை செய்ய சம்மதித்துள்ளார்.
புரோக்கர்கள் செந்தில், ராஜேந்திரன், மணச்சநல்லூர் முத்தையன் ஆகிய மூவருடன் சரவணன் பேசி முடிவுசெய்துள் ளார். இவர்கள், குழந்தை இல் லாமல் தவித்துவந்த கோவையை சேர்ந்த வெங்க டேசன்- அமுதா தம்பதியிடம் மீனாவின் மூன்று மாத பெண் குழந்தை சுபஸ்ரீயை விலை பேசியுள்ளனர். குழந்தையை வாங்குவதற்கு அவர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். இதையடுத்து புரோக்கர்கள் மூவரும் குழந்தை யை பெற்றோர் முழு சம்மதத் துடன் கொடுக்கச் சம்மதித்துள்ள தாகக் கூறி அதற்கான ஆவணங் களை தயார் செய்து அதில் சரவணன், மீனா ஆகியோரிடம் கையெழுத்து பெற்று முறைப்படி குழந்தையை விற்பனை செய்வ தாக நம்பவைத்துள்ளனர். கடைசியில் குழந்தையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலை யில் வடவீக்கம் கிரா மத்திலும் சுற்றுவட்டாரங்களி லும் இவ்விவகாரம் அரசல்புரசலாக வெளிப்பட்டு போலீஸ் வரை விஷயம் செல்ல, விற்றவர் கள், வாங்கியவர்கள் அனைவரும் வழக்கில் சிக்கிக்கொண்டுள்ளனர். குழந்தையை வாங்கிய அமுதா, வெங்கடேசன், குழந்தையை விற்பதற்கு உதவி செய்த புரோக்கர்கள், குழந்தையின் பெற்றோர் சரவணன், மீனா 7 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
“நமக்கோ மூன்று பெண் பிள்ளைகள். தற்போது நான்கா வதும் பெண் குழந்தை பிறந் துள்ளது. இப்போதே வறுமை யின் பிடியில் தள்ளாடுகிறோம். இந்த நான்கு பெண் பிள்ளை களையும் வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பது இயலாத காரியம்” என்று கணவன் மனைவி இருவரும் சிலநாட்களாக பேசி கவலைப்பட்டுக்கொண்டு இருந்திருக்கின்றனர். இந்நிலை யில் கடந்த சில நாட்களாக நான்காவதாக பிறந்த பெண் குழந்தையைக் காணவில்லை. குழந்தை எங்கே என அக்கம் பக்கத்தினர் கேட்டபோது குழந்தை தூங்கிக்கொண்டிருப்ப தாக கூறியுள்ளனர். தவிரவும் சரவணன், மீனா வீட்டுக்கு அடையாளம்தெரியாத நபர்கள் சிலர் அடிக்கடி வந்து போயுள்ள னர்.
அவர்கள் யார் என்று அக்கம்பக்கத்தினர் சரவணனிடம் கேட்டபோது எங்கள் தூரத்து உறவினர்கள் என்று சரவணன் கூறி சமாளித்துள்ளார். எனினும் அதை நம்பாது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், சரவணன் வீட்டில் ஏதோ மர்மமாக நடக்கிறது, புதிதாகப் பிறந்த குழந்தையையும் காணவில்லை என்று ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கதிரவனுக்கு தகவலளித் துள்ளனர். இதையடுத்து அவர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் இருவருக் கும் தகவல் கூறியுள்ளார் .
அவர்கள் இருவரும் இணைந்து வடவீக்கம் சென்று விசாரணை நடத்தியபோது, அந்த பெண் குழந்தையை தங்களால் வளர்த்து ஆளாக்க முடியாது என்ற காரணத்தினால் விற்றுவிட்டதாகவும், தற்போது சரவணன், மீனாட்சி தம்பதி வீட்டைப் பூட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டனர், சில நாட் களாக அவர்களை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து துரை முருகன், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, சரவணன், மீனா தம்பதியை தனிப்படை அமைத்துத் தேடினார். இந் நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜேந்திரன், மண்ணச்சநல்லூர் முத்தையன் ஆகியோர் சிக்க, போலீசார் அவர்களைக் கைதுசெய்தனர். அவர்கள் மூலம் சரவணன், மீனா இருவரும் கோவைக்கு குழந்தையை எடுத்துச்சென்று அங்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக் கப்பட்டு சம்பந்தப்பட்ட அனை வரையும் கைது செய்ததோடு குழந்தையையும் மீட்டுள்ளனர்.