ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மீது, சென்னையைச் சேர்ந்த காயத்ரிதேவி என்பவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். காயத்ரிக்கு சென்னை சொந்த ஊராக இருந்தாலும் தன்னுடைய பள்ளிப் படிப்பை கொடைக் கானலிலுள்ள தனியார் பள்ளியில் படித்துள்ளார். பள்ளிப் பருவத்தில் நாகப்பிரியா என்பவருடன் ஏற்பட்ட நட்பு, பள்ளிப் படிப்பு முடிந் தும் தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில் 2014-ஆம் ஆண்டு நாகப்பிரியா தங்கையின் திருமண நிகழ்ச்சிக்கு காயத்ரி சென்றுள்ளார். அந்த திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மகள் கவிதா, அவரது சகோதரர் ரவீந்திரநாத், ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோரை நாகப்பிரியா அறிமுகம் செய்துவைத்தார்.

oooo

ஆனந்தியுடன் நட்பு ஏற்பட்டு, ஆனந்தியின் தோழியான மலரின் நட்பும் கிடைத்துள்ளது. நட்பு கடந்து குடும்பமாகவே இணைந்து பழகிவந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அவ்வப்போது குடும்பத்தோடு சுற்றுலாவுக்குச் செல்வது வழக்கம். அதில் கலந்துகொள்ளுமளவுக்கு காயத்ரியின் நட்பு வளர்ச்சியடைந்துள்ளது.

இதற்கிடையில் ரவீந்திரநாத்துக்கும் மலருக்கும் இருந்த தவறான தொடர்பினை ஆனந்தி கண்டறிந்ததால், ஆனந்திக்கும் ரவீந்திரநாத்துக் கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது. அதன் காரணமாக ஒரே வீட்டில் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே மலர், தனது கணவரான இயக்குனரை விவாகரத்து செய்து விட்டு ரவீந்திரநாத்துடன் சட்டபூர்வமற்ற முறையில் வாழ்ந்துவந்த விவகாரத்தை, ஆனந்தியிடம் காயத்ரி கேட்டுள்ளார். "ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வந்ததிலிருந்து அவரது செயல்பாடு கள் மாறிவிட்டன. அதுவும் பெண்கள் விவகாரத்தில் மிகுந்த மோசமாக நடந்துகொள்கிறார்'' என காயத்ரியிடம் புலம்பியுள்ளார் ஆனந்தி.dd

Advertisment

இதனிடையே காயத்ரிக்கு 2022-ஆம் ஆண்டு விவாகரத்தானது. இதைத் தெரிந்துகொண்ட ரவீந்திரநாத் காயத்ரியிடம் ஆறுதலாகப் பேசியதுடன், "எந்த உதவி என்றாலும் கூப்பிடு'' என சொல்லிவந்துள்ளார்.

ஒருநாள் ரவீந்திரநாத் செல்போனிலிருந்து அழைப்பு வந்துள்ளது. காயத்ரியோ, ரவீந்திரநாத் தான் பேசுகிறார் என்று எடுத்துப் பேசினார். ஆனால் மறுமுனையில் பேசியவர் தனது பெயர் முருகன் என்றும், தான் ரவீந்திரநாத்தின் நண்பர் என்றும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “"ரவீந்திரநாத் உன் மீது ஆசைப்படுகிறார். உன்னை ராணிபோல் வைத்து பார்த்துக்கொள்வார்'’என தவறான தொனி யில் தெரிவித்திருக்கிறார். மேலும் "அண்ணன் வருவார் தயாராக இருக்கவேண்டும்' என்றும் கூறியிருக்கிறார். பயந்துபோன காயத்ரி, அவ ரது மனைவி ஆனந்தியிடம் நடந்த நிகழ்வு களைச் சொல்லியுள்ளார். ஆனந்தி அவரது கணவர் ரவீந்திரநாத்திடம் இதுபற்றிக் கேட்டபோது, "யாராவது தனது கைபேசியை தவறாகப் பயன்படுத்தியிருப்பார்கள்''’என தெரிவித்ததாகக் கூறினார். எனவே இதைப் பெரிதுபடுத்தவில்லை அவர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக காயத்ரி செல்போனுக்கு இரவு 1 மணிவாக்கில் தொடர்புகொண்டு பேசிய ரவீந்திரநாத், ஒரு கட்டத்திற்கு மேல் தவறான கண்ணோட்டத்துடன் பேசத் தொடங்கவே, போனை துண்டித்துள்ளார் காயத்ரி.

Advertisment

அவரோ விடாமல் போனில் பேசிய துடன், "உனக்குத்தான் விவாகரத்து ஆகி விட்டதே. என்ன செய்யப்போற. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் உனது வீட்டிற்கு வாரேன். இல்லை என்றால் அரசாங்க காரை அனுப்புகிறேன். நல்லபடியா வச்சுக்கிறேன் வா''’என அழைத்துள்ளார். அதற்கு காயத்ரியோ, “"நான் உங்கள் தங்கை போன்றவள். என்னிடத்தில் இப்படிப் பேசாதீர்கள். நான் உங்களிடம் இந்த மாதிரியெல்லாம் பழகவில்லை. இதுபோன்ற எண்ணத்துடன் என்னைத் தொடர்பு கொள்ளாதீர்கள்''’என்று உறுதியாக மறுத்துப் பேசியுள்ளார்.

காயத்ரி இணங்கவில்லையெனத் தெரிந்ததும், “"மரியாதையாக நான் சொன்னதைக் கேட்டு நட. இல்லையேல் உன் குடும்பத்தினரைக் கொன்று விடுவேன்''’என தொனியை மாற்றி மிரட்டல் விடுத்தார். அரசியல் பின் புலமுள்ள ரவீந்திரநாத்திடமிருந்து தன்னையும், தன்னுடைய குடும்பத் தையும் காப்பாற்ற காவல்துறையில் வழக்குக் கொடுத்துள்ளார் காயத்ரி. இந்த வழக்கைப் பதிவுசெய்யாத காரணத்தால் மீண்டும் 01.08.23 அன்று டி.ஜி.பி. அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து காயத்ரிதேவியிடம் கேட்டபோது, "இவருக்கு இதுதான் வாடிக்கைபோல. அவரது மனைவியைக் கேட்டாலே தெரியவரும். இப்படி பல பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்துள்ளார். நான் வெளியில் வந்துள்ளேன். வராத பெண்களின் எண்ணிக்கை எத்தனையோ. அப்படி வந்தது அனைத்தையும் அவரது அதிகாரத்தை வைத்து மூடிமறைத்து விடுவார்கள். இவரால் எனக்கும் எனது குடும்பத்திற்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது. நான் காவல்துறையில் புகார் கொடுத்தும் முதலில் விசாரிக்கவே இல்லை, டி.ஜி.பி. அலுவலகம் வந்த பிறகே விசாரணை நடக்குது''’என்றார்.

இதென்னடா! ஓ.பி.எஸ்.ஸுக்கு வந்த புது சோதனை!