ssநெல்லை பாராளுமன்றத் தொகுதி யில் இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூக மக்களே மெஜாரிட்டி. அப்படிப்பட்ட சூழ லில், பா.ஜ.க. சார்பில் களமிறங்கியுள்ள நயினார் நாகேந்திரன், மணல் மன்னர் வைகுண்ட ராஜன் மற்றும் தனது நாடார் சமூக நண்பர்கள் மூலமாகக் காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லையில் கரையேறிய பண்ணையாருக்கு, இம்முறை கூட்டணி பலமில்லாததும், பா.ம.க.வின் பலம் ஜீரோவாக இருப்பதும் பின்னடைவாக இருப்பதால் வைட்டமின் 'ப'வையே ஆயுதமாக்கியுள்ளார். சமையல் எண்ணை நிறுவனங்கள், ஐஸ்கிரீம் கம்பெனி களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்கள் வந்து சேர, அதன்மூலம் முதற்கட்ட பூத் கமிட்டிக்கான ஐந்தாயிரம் பட்டுவாடாவை முடித்திருக்கிறாராம்.

dd

அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு தென்மாவட்டத்தில் பேஸ்மெண்ட் இல்லாத நிலையில், களமிறங்கத் தயங்கிக்கொண்டு சொந்தக் கட்சியினரே ஒதுங்கிக்கொள்ள, சென்னையின் சிம்லா முத்துச்சோழ னை வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி. நெல்லை உட்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், நாடார் சமூகம் சார்ந்த ஜான்சிராணியை வேட்பாளராக்கியிருக் கிறார். அதிகளவில் கரன்சியை செலவழிக்காத ஜான்சி ராணி, தான் சார்ந்த ராதாபுரம், நாங்குநேரிப் பகுதிகளி லேயே பிரச்சாரத்தை வைத்துக்கொள்கிறார். எக்ஸ் எம்.பி. சௌந்திரராஜன், எக்ஸ் எம்.எல்.ஏ. இன்பதுரை போன்றவர்களின் வழிகாட்டுதலில் ஜான்சியின் பரப்புரை போகிறது. எடப்பாடி நெல்லையில் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றதும், கட்சிப்பணம் ஓரளவு வந்து சேர்ந்துள்ளதால் சற்று தெம்பாக இருக்கிறார்.

இம்முறை நெல்லையில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், உ.பி.க்களும், கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்களும் அப்செட்டானார்கள். வேட்பாளருக்கான வைட்டமின் 'ப' ஏற்பாடு செய்யும் பொறுப்பை, நாங்குநேரி எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரனிடம் ஒப்படைத்தது காங். தலைமை. பாளை தென்னிந்திய கிறிஸ்தவ சபையின் பிஷப் மற்றும் சபையினரின் ஆதரவையும், இந்து நாடார் சமூகத்தினரின் ஆன்மிகத் தலைவரான பாலபிரஜாபதி அடிகளாரின் ஆதரவையும் பெற்றிருக் கிறார் ராபர்ட் புரூஸ். தி.மு.க. தரப்பில், அனிதா ராதாகிருஷ்ணனை பொறுப்பாளராக்கிய முதல்வர், வாழ்வா? சாவா கட்டத்திலிருப்பதைச் சுட்டிக் காட்டி எச்சரித்ததும், தி.மு.க.வினரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ராதாபுரம் தொகுதியில் அலெக்ஸ் அப்பாவு, வார்டு வார்டாக பிரச்சாரத்தில் இருக்கிறார். இத்தொகுதியில் கனிமொழி எம்.பி., தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசிய பேச்சுக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் சத்யா, தொண்டர் களுடன் தீவிரப் பிரச்சாரத்தில் உள்ளார். தற்போதுள்ள சூழலில், நயினாரையும், அ.தி.மு.க. வேட்பாளரையும் ஓவர்டேக் செய்யத் தொடங்கியுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர்!

-பி.சிவன்