தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்ட அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் கடந்த 29-12-2023 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைமேயர் கோ.காமராஜ், ஆணையர் அழகுமீனா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
மாமன்றக் கூட்டம் நடைபெற்றபோது 50-வது வார்டு மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் எம்.யாக்கூப், தாம்பரம் எம்.சி.சி. கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பள்ளியை, மாமன்றத்தின் அனுமதியின்றி சீல் வைத்து மூடியது தொடர்பாகக் கேள்வியெழுப் பினார். அப்போது, மேயரும், துணைமேய ரும் பள்ளியை மூடும் உத்தரவு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தனர்.
மன்ற உறுப்பினருக்கும், மேயருக்கும் தெரியாமல் எப்படி சிறுபான்மை யினருக்குச் சொந்தமான பள்ளியை பூட்டுப்போட்டு அதிகாரிகள் மூடினர் என மற்ற கவுன்சிலர்களும் மாநகராட்சி ஆணையருக்கு எதிராகக் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஆணையரிடம், "மேயருக்கும் துணைமேயருக்கும் தகவல் தெரிவிக்காமல் எப்படி அந்த பள்ளியை மூடினீர்கள்?'' என கேள்வி எழுப்பினர்.
மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மேயரும், மாமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியதால், கூட்டத்தில் அமர்ந்திருந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத் தைப் புறக்கணித்து வெளியே எழுந்து செல்ல முற்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு ஆணையர், அவர்களை சமாதானம் செய்து அமரவைத்தார்.
பொதுவாக கூட்டத்தில் வாக்குவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்லது மாமன்ற உறுப்பினர்களே வெளிநடப்பு செய்வது வழக்கம். முதல்முறையாக அதிகாரிகள் வெளி நடப்பு செய்ய முற்பட்டது மாமன்ற உறுப்பினர் களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அப்போது ஆணையர் அழகுமீனா மாமன்ற உறுப்பினர் யாக்கூப்பை, ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து யாக்கூப் வெளிநடப்பு செய்தார்.
தாம்பரம் மாமன்ற 50-வது வார்டு உறுப்பினர் யாக்கூப் இதுபற்றி நம்மிடம் பேசிய போது, “"1935ஆம் வருடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டி ருந்த நேரத்தில் இப்பகுதியில் மருத்துவ மனைகள் இல்லையென்பதால் இந்த இடம் செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கப் பட்டது. பின்னர் 1938-ஆம் வருடம் சென்னை கிருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. சேவைநோக்கில் ஆரம்ப சுகாதார நிலையம், பிரசவ மருத்துவமனையாகவும், பின்னர் குழந்தைகள் விளையாடும் அங்கன் வாடியாகவும் செயல்பட்டு வந்தது. பின்னர் திறன் வளர்ப்புக் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் செஞ்சிலுவை சங்கம் மீண்டும் அந்த இடத்தைக் கேட்டு வழக்கு தொடர்ந் தது. தாம்பரம் மாநகராட்சியும் அந்த இடத்தை கேட்டுவருகிறது.
இந்த நிலையில் எந்த ஒரு முன் னறிப்புமின்றி ஐந்தாவது மாநகராட்சி மண்டல அலுவலகமாக மாற்றி பெயர்ப்பலகை வைக்கப்பட்டது ஏனென்று நான் கேள்வியெழுப்பி னேன். 19-12-2023-ஆம் தேதி அந்த இடத்தை தாம்பரம் மாநகராட்சி கையகப்படுத்தி பூட்டிவிட்டு 29-12-2023-ஆம் தேதி மாமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது முறையா? என்றும் கேட்டேன். தாம்பரம் மாநக ராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதியில்தான் அந்த நிறுவனம் செயல் பட்டுவருகிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 5-க்கான அலுவலகம் இங்கு ஏன் அமைக்கவேண்டும்? கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மண்ட லம் 5-க்கான அலுவலகம் சுமார் 25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதைப்பற்றி மேயரிடமும் துணை மேயரிடமும் நான் கேள்வி எழுப்பி னேன். அதற்கு இருவருமே தெரியாது என்று பதில் கூறினார்கள்
அப்போது மன்ற உறுப்பினர் ஜோசப் அண்ணாதுரை கேள்வி எழுப் பினார். அதற்கு பதில் கூறவேண்டியது மேயர்தான். உள்ளே தலையிட்ட தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, "நீ தாம்பரம் மாநகராட் சிப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய் கிறாய். தவறான தொழில் செய்கிறாய் அரசியலமைப்பு சட்டத் திற்கு எதிராக செயல்படுகிறாய்' என்று ஒருமையில் பேசினார்.
"எந்த ஒரு ஆக்கிரமிப்பும் நான் செய்ததாக நிரூபித்துக் காட்டினால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்கிறேன்' என்று சவால் விட்டேன். எங்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற நோக்கில் ஆணையர் அழகுமீனா பேசியதைக் கண்டித்து கடந்த 3-ஆம் தேதி தாம்பரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அமைதியாக நடந்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் போலீசை ஏவி நிர்வாகிகள் மீதும் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தி யிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆணையர் இப்படிச் செயல்படுவதற்குக் காரணம், தாம்பரம் எம்.எல்.ஏ. ராஜாதான்'' என்று குற்றம்சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டு குறித்து தாம்பரம் எம்.எல்.ஏ. ராஜாவிடம் கேட்டபோது, "தேர்தல் நெருங்கி வருவதால் அவங்க கட்சியை வளர்ப்பதற்காக மாஸ் காட்டுவதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆணையர் மீது தவறு என்றால் மேலதிகாரியிடம் புகாரளித்து நட வடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வெறும் அரசியல்தான். என் மீது குற்றம் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?'' எனக் கேட்டார்.
தாம்பரம் விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.