"ஹலோ தலைவரே, உலகத்தோடு சேர்ந்து புதிதாகப் பிறந்த ஆங்கிலப் புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு மக்கள் உற்சாகமாக வரவேற்றிருக்காங்க.''”
"ஆமாம்பா, விடைபெறும் கடைசி நேரத்தில் 2024, கடுமையான மழை வெள்ளத்தால் பயமுறுத்தியதால், மக்களிடம் புதிய எதிர்பார்ப்புகள் வலுத்திருக்குதே?''”
“"உண்மைதாங்க தலைவரே, அடுத்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் வரப்போவதால், அதை எதிர்க்கொள்வதற்கான உற்சாகம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் தெரியுது. குறிப்பா, ஆளும்கட்சியான தி.மு.க.வில் உற்சாகம் பெருகித் ததும்பியதைப் பார்க்க முடிந்தது. குமரியில் வானளாவிய வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை, தமிழ் மணக்கக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல கட்சி நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள்வரை அனைத்துத் தரப்பினரும் அவர் இல்லத்தில் திரண்டிருந்தார்கள். எல்லோரிடமும் நலம்விசாரித்த முதல்வர், அவர்களின் வாழ்த்துகளையும், அவர்கள் வழங்கிய நூல்களையும் மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்.''”
"ஆமாம்பா...''”
"அதேபோல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டதோடு, கட்சி நிர் வாகிகளின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டிருக்காங்க. இவர்களைப் போலவே, தன் போயஸ் கார்டன் இல்லத்தில், தன் ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினி, "நல்லவர் களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிடமாட்டான். கெட்டவர் களுக்கு நிறைய கொடுப்பான்; ஆனா, கைவிட்டுவிடுவான்'’ என்கிற தனது சினிமாவின் பஞ்ச் டயலாக்கைச் சொல்லி, அவர் களை உற்சாகப்படுத்தினார். அதேநேரம் அவர் யாரை நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் சொல்கிறார்? என்கிற விவாதம், அவரது ரசிகர்கள் மத்தியில் நடக்க ஆரம்பித்தது.''”
"புத்தாண்டு நாளில் ரஜினியை, ஓ.பி.எஸ்.ஸும் சந்தித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, கொஞ்சநாளாக எந்தச் செய்தியிலும் பரபரப்பாக அடிபடாத ஓ.பி.எஸ்., புத்தாண்டு நாளில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து, மீடியாக்களின் பார்வைக்கு வந்திருக்கிறார். புத்தாண்டில் மரியாதை நிமித்த மாக ரஜினியை சந்தித்ததாகவும் அவரிடம் அரசியல் பேசவில்லை என்றும் வெளியில் வந்து சுடச்சுட பேட்டியும் கொடுத்திருக்கிறார். ஆனால் உண்மையில், சசிகலா தரப்பு அ.தி. மு.க.வுடன் இணைவதற்காக திரைமறைவில் நடத்திவரும் பேச்சுவார்த்தையில், தனக்கான முக்கியத்துவம் எதுவும் தரப்படவில்லை என்று ஓ.பி.எஸ். ஆதங்கப்படுகிறாராம். எல்லோரும் அ.தி.மு.க.வில் இணையும்போது தனக்கு அங்கே எந்தப் பதவியும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற சலனத்தில் இருக்கும் அவர், இது குறித்த தன் ஆதங்கத் தை வெளிப்படுத்தவும், அவரிடம் உதவி கேட் கவும் ரஜினியுடனான இந்த சந்திப்பைப் பயன்படுத்திக் கொண்டார் என்கிறது அவர் தரப்பே.''”
"சரிப்பா, தமிழக காங்கிரஸ் தலைவரின் புத்தாண்டுக் கொண்டாட்டம் மட்டும் சர்ச்சைக்குரியதாக மாறி இருக்கிறதே?''”
"காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அண்மையில் வயது முதிர்வு காரணமாக மறைந்தார். காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து தேசமே அவருக்கு மனப்பூர்வமான அஞ்சலியை செலுத்தியிருக்கிறது. மன்மோகன்சிங் மறைவையொட்டி, காங்கிரஸ் சார்பிலான அனைத்து நிகழ்ச்சிகளும் ஜனவரி 2ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுவதாக கார்கே அறிவித்திருந்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் கட்சித் தொண்டர்களை உற்சாகமாகச் சந்தித் தார். அப்போது அவருக்கு அவரது ஆதர வாளர்கள் பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் தன் ஆதரவாளர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்ந்தார். கட்சியே துக்கம் அனுஷ்டிக்கும் நிலையில் இப்படியொரு கொண்டாட்டம் தேவையா? என கொதித்துப்போன கட்சி நிர்வாகிகள் பலரும், செல்வப்பெருந்தகையின் கொண்டாட்டப் படங்களுடன், தங்கள் தேசியத் தலைமைக்கு புகார்களை அனுப்பி வைத்திருக்கிறார்களாம்.''”
"அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி இப்ப கடும் மனச்சோர்வில் இருக்கிறார் என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைக் கண்டிப்பதாகக் கூறி, அந்த பா.ஜ.க. நிர்வாகி, கடந்த 27ஆம் தேதி நடத்திய சாட்டையடிப் போராட்டம் மிக சீரியஸாகப் பார்க்கப்படும் என்று அவர் எதிர்பார்த்தாராம். ஆனால், அதற்கு மாறாக, எல்லோராலும் அது காமெடியாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலும் லண்டனில் அவர் படிக்கப் போன போது அவருக்குக் கிடைத்த நண்பர்களும், இது குறித்து அவரை நக்கலடித்தார்களாம். இதனால் ரொம்பவே சங்கடத்திற்கு ஆளான அவர், மன அமைதிக்காக உடனடியாக மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்திற்குப் போனதோடு.. அங்கு தியானத்திலும் உட்கார்ந்துவிட்டு வந்தாராம். இந்த நிலையில், அதே அண்ணா பல் கலைக்கழக விவகாரத்தைக் கண் டித்து ஒரு பேரணியை நடத்தப் போவதாகவும் அவர் அறிவித் திருந்தார். இப்படி பேரணி நடத்தி னால் காவல்துறை கைது செய்யும். அதனால் இதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று, பா.ஜ.க. நிர் வாகிகள் பலரும் ஓரம்கட்டுகின்றன ராம். அதனாலும் அந்தப் பேரணி யை நடத்துவதா? வேண்டாமா? என்கிற குழப்பத்திலும் அப்செட் டிலும் அவர் இருக்கிறாராம். இதனால் கடும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பதாக கமலா லயத் தரப்பே சொல்கிறது.''”
"சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அ.தி.மு.க.வும் நீதிமன்றம் போயிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அண்ணா பல்கலைக்கழக விவகா ரத்தை விசாரிக்க, ஐ.பி.எஸ். அதிகாரி கள் மூவரைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்திருக்கிறது. அதன் விசாரணை தொடங்க இருக்கும் நிலையில், இந்த விசாரணைக்கு எதிராகவும், காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முயற்சியில் இருக்கிறது. இதை அறிந்த எடப்பாடி, இது குறித்து தங்கள் கட்சியின் சீனியர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்களின் கருத்தை அறியாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்யலாம் என சொல்லியிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, உடனடியாக கேவியட் மனுவைத் தாக்கல் செய் யும்படி, தங்கள் வழக்கறிஞர்களை முடுக்கிவிட்டுள்ளார்.''”
"இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தியிருக்கிறதே?''
"ஆமாங்க தலைவரே, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் களமிறங்கி, மூன்று நாட்கள் விசாரணை நடத்தியது. இதையடுத்து அந்த ஆணையம், பல்கலைக்கழகத்தின் வேந்தர் கவர்னர் என்பதால், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தது. சம்பவம் குறித்து அவரிடமும் அது தகவல் களைக் கேட்டிருக்கிறது. ஏற்கனவே கவர்னரும் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியிருப்பதால், அப்போது தனக்கு கிடைத்த பல தகவல்களையும், கவர்னர் ஆணையத் தலைவரிடம் பகிர்ந்துகொண்டாராம். அப்போது தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்திய தாகவும் தெரிகிறது. இந்த சந்திப்பின்போது என்னவெல் லாம் பேசப்பட்டது என்பதை அறிய அரசுத் தரப்பு தீவிரமாக முயற்சிசெய்தது என்கிறார்கள். மேலும் கைதான ஞானசேகரனை போலீஸ் கஸ்டடிக்கு எடுத்து விசாரணை செய்ய காவல்துறை முடிவெடுத்துள்ளதாம்.''”
"கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாள் விழா கேரளாவிலும் கொண்டாடப்படுகிறதே?''”
"தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளு மன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாளை அவர் ஆதரவாளர்கள் ஜனவரி 5ஆம் தேதி தடபுடலாகக் கொண்டாடும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட திரூரைச் சேர்ந்த தொழிலதிபரும் தி.மு.க. ஆதரவாளருமான யூசுப்ரஹ்மான், கனிமொழி எம்.பி.யின் பிறந்த நாளில், ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குறிப்பாக, அங்கே மலப்புரம் மாவட்டத்திலுள்ள 20-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள 1,500 பேருக்கு, இனிப்புடன் சுவையான உணவு மற்றும் புத்தாடை களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்துகொண்டிருக்கிறார். இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் பிறந்தநாளையும் கொண்டாட விருப்பதாக அவர் உற்சாகம்பொங்கத் தெரிவித்திருக்கிறார்.''”
"ஆடுமலைக்கும் குஷ்புவுக்குமான உட்கட்சி யுத்தம் உச்சத்துக்கு வந்திருக்குதாமே?''
"ஆமாங்க தலைவரே, காங்கிரஸில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கலைன்னு சொல்லி, 2020 இறுதியில் பா.ஜ.க.வுக்கு தாவிய குஷ்பு வுக்கு, கடந்த நான்காண்டுகளாக பா.ஜ.க.வில் உருப்படியாக எந்த பதவியும் வழங்கப்பட வில்லை. எம்.பி. சீட்டை எதிர்பார்த்தவருக்கு அதுவும் வழங்கப்படவில்லை. குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆடுமலை இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் கடுப்பான குஷ்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அப்பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில், மனக்குமுறலில் இருந்த குஷ்புவின் பேட்டி ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது, அதில், "தன்னை பா.ஜ.க. நிகழ்ச்சிகளுக்கு ஆடுமலை அழைப்பதே யில்லை, அதனால் பங்கேற்பதில்லை. அப்படியே அழைத்தாலும், கடைசி நிமிடத்தில் அழைத்தால், தான் எப்படி பங்கேற்பது' என்றும் நேரடியா கக் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து ஆடுமலையிடம் கிடுக்கிப்பிடி யாக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "இதுவரை கட்சி நிகழ்ச்சிக்காக யாரையும் நான் அழைத்ததில்லை. யாரை அழைப்ப தென முடிவெடுப்பது கேசவவிநாயகத் தின் பொறுப்பு' என மழுப்பலாகப் பதி லளித்தார். இதனால் கட்சியிலிருந்து விலகுவது குறித்த யோசனையில் இருக்கிறாராம் குஷ்பு.''
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். புதுக்கோட்டை மாநகர மா.செ.வாக இருந்தவர் செந்தில். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவா ளர். இவரது மனைவி திலகவதி புதுக் கோட்டை மேயராகவும் இருக்கிறார். அமைச் சர் மீதான விசுவாசம்தான் இவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்கிறார்கள். இந்த நிலையில், மிகவும் துடிப்பாக செயல்பட்டு வந்த செந்தில், கடந்த வாரம் வழக்கமான உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, வீட்டின் முன்புறம் பெஞ்சில் அமர்ந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடி யாக முதலுதவி கொடுத்து, மேல்சிகிச்சைக்கு திருச்சிக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே, அவர் உயிரிழந்துவிட்டார். புதுக்கோட்டை தி.மு.க.வினரை இது பலத்த சோகத்தில் ஆழ்த் தியது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தநாள் பால் தெளிப்பு நிகழ்ச்சி நடந்தபோது, கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கே தலையைக் காட்டவில்லை யாம். காரணம், அவர்கள் அனைவரும் செந்திலின் மாநகரச் செயலாளர் பதவியை அடைவதற்கான முயற்சிக்காக அங்கங்கே ஓடிக் கொண்டிருந்தார்களாம். இதை யெல்லாம் அறிந்த அமைச்சர் நேரு, செந்திலின் மகன் கணேஷை தவிர, அந்தப் பதவி வேறு யாருக்கும் இல் லையெனச் சொல்லிவிட்டாராம். இதனால் புதுக்கோட்டை தி.மு.க.வில் பரபரப்பு அதிகரித்திருக்கிறது.''”