லாக்கத்துறையின் வலையில் சிக்கும் அமைச் சர்கள் எனும் தலைப்பில் ஏப். 26-29 இதழில் நாம் எழுதிய செய்தி தி.மு.க., பா.ஜ.க. மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமலாக்கத் துறை போட்ட ஸ்கெட்சில் மேலும் பல திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், தங்களின் "கே' ப்ளானை நடத்திட அடுத்தகட் டப் பாய்ச்சலுக்கு தயாராகிவருகிறார்கள் அமலாக்கத்துறையினர்.

இதுகுறித்து அத்துறைக்கு நெருக்கமான உளவுத்துறையினரிடம் விசாரித்தபோது, ‘’""அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோ தரர்கள் தொடர்புடைய இடங்களில் அண்மை யில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. நேருவை பொறுத்தவரை, அவருக்கு நெருக்கமான நபர்களால் தான் ஆபத்து ஏற்பட்டுள் ளது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் முதல் நேருவுக்கு எதிரான ஆபரேசனை தொடங்கியது அமலாக்கத் துறை. முதல்கட்டமாக அவருக்கு நெருக்கமான தி.மு.க. ஒ.செ. கருப்பையாவை வளைத்தனர். கருப்பையா மூலமாக புதுக்கோட்டை முருகப்பனை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்தனர்.

ss

அமலாக்கத்துறையின் டெல்லி தலைமை யகத்தில் இருக்கும் இரண்டு உயரதிகாரிகள், குஜராத்தைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி கள் கொண்ட ஒரு டீமை உருவாக்கி, அவர்களை நகராட்சித்துறையில் காண்ட்ராக்ட் எடுக்கும் பிசினஸ்மேன்களாக தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர். உயரதிகாரிகளின் ஸ்கெட்ச்படி தமிழகத்திற்கு வந்த பிசினஸ்மேன் டீம் விரித்த வலையில் கருப்பையாவும் முருகப்பனும் இயல்பாக சிக்கினர்.

இவர்கள் மூலம்தான், பல்வேறு ஆதாரங் களை அமலாக்கத்துறையினர் திரட்டினர். அவை தான் தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, நகராட்சித் துறையில் குறிப்பிட்ட காண்ட்ராக்டுகள் தேவைப்படுகிறது என்பதை கருப்பையாவிடம் விவரிக்கிறது குஜராத் டீம். காண்ட்ராக்ட் ஓ.கே. ஆனதும் தனக்கான கமிஷனையும் தனியா கத் தந்துவிட வேண் டும் என்பதை குஜ ராத் டீமிடம் பேசி, ஓ.கே. பெற்றுக்கொண்ட பிறகே மேலிடத்தில் பேசுகிறார் கருப்பையா.

அதன்படி, குஜராத் டீமிற்கு காண்ட்ராக்ட் ஓ.கே. ஆகிறது. அதை பெறு வதற்கான தொகை கொடுக்கப்பட்டதும் தான் காண்ட்ராக்ட் குறித்த மற்ற பார்மா லிட்டிஸ் தொடங்கும் என கருப்பையா சொன்னதை குஜராத் டீம் ஒப்புக்கொள்கிறது. அதன்படி, ஹவாலா மூலமாக குறிப்பிட்ட கோடிகளை ஓரிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என கருப்பையா சொல்ல, எங்களுடையது கார்ப்பரேட் கம்பெனி. நிறைய பார்மாலிட்டிஸ் உண்டு. ஹவாலாவில் அனுப்ப முடியாது எனத் தெரிவிக்கிறது குஜராத் டீம்.

அதேசமயம், சென்னை சௌகார்பேட் டையில் எங்களுக்குத் தெரிந்த ஒரு நிறுவனம் இருக்கிறது. அதற்கு நாங்கள் ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுகிறோம். அவர்கள் அதனை வித்ட்ரா செய்து கேஷாக நீங்கள் சொல்லும் இடத்தில் ஒப்படைப்பார்கள் என டீல் பேசுகிறார்கள். இதற்கு மேலிடத்தில் பேசி ஓ.கே. வாங்குகிறார். அதன்படி, ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது. சௌகார் பேட்டை நபர், பணத்தை வித்ட்ரா செய்து எடுத்துக்கொள்கிறார். சௌகார்பேட்டை நபர், குஜராத் டீமின் முக்கிய அதிகாரி ஒருவர் ஆகிய இருவரையும் நேருவின் சகோதரர் கவனித்துவரும் டி.வி.ஹெச். நிறுவனத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, ரமேஷ் என்பவருடன் சந்திப்பு நடக்கிறது. பணம் கைமாறுகிறது.

ss

Advertisment

அங்கிருந்து பாம்குரோவ் ஹோட்டலுக்குத் திரும்புகின்றனர். ஹோட்டலில், தனக்கான கமிஷன் தொகையை கேட்கிறார் கருப்பையா. உடனே, கமிசன் தொகையில் கொஞ்சம் பணத்தை (பணக்கட்டின் சீரியல் நம்பர்கள் ஏற்கனவே குறித்து வைக்கப்படுகிறது) அவரது கையில் கொடுக்கின்றனர். அதேசமயம், 10 அக்கவுண்ட் நம்பர்களை கொடுத்து, மீதித் தொகையை அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடுங்கள் என கருப்பையா சொல்ல அதன்படி சம்மந்தப்பட்ட அக்கவுண்டில் மீதித்தொகையை டெபாசிட் செய்கிறது குஜராத் டீம்.

இப்படி திட்டமிட்டு ஆதாரங்களை உருவாக்கி அதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை சேகரித்து வைத்துக் கொண்டது குஜராத் அமலாக்கத் துறை. இதேபோன்று பல ஆதாரங்கள் உருவாக்கப்பட்டு சேகரிக்கப் பட்டுள்ளன. இவைகளை வைத்துத்தான், நேருவுக்கு எதிராக வழக்கு பின்னப்பட்டுள் ளது. கருப்பையாவை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனுக்கு "கே ப்ளான்' என்று பெயரிட்டுள்ளது குஜராத் டீம்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் டெல்லி தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இந்த ஆதாரங்களைப் போட்டுக் காட்டுவதற்கு அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறையின் உயரதிகாரிகள்.

ஒரு வழியாக அமித்ஷாவுடனான சந்திப்புக் குப் பிறகு இந்த ஆபரேசனின் அடுத்த பாய்ச்ச லுக்கு திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை. அதன்படி விரைவில் தமிழகத்தில் அமலாக்கத் துறையின் அதிரடி தொடங்கும்’’ என்று விரிவாக விவரிக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், பண்ணையாரை (கே.என்.நேரு) பாதுகாக்கவேண்டியது என் பொறுப்பு எனச் சொல்லி களத்தில் குதித்திருக்கிறார். அதாவது, தமிழகத்தின் ஹோட்டல் இண்டஸ்ட்ரியில் குறிப்பிட்ட சமூகத்தினர் கோலோச்சுகிறார்கள். இதற்காக அவர்கள் ஹோட்டல் இண்டஸ்ட்ரி சங்கமும் நடத்துகின்றனர். நயினார் நாகேந்திரனும் ஹோட்டல் பிசினஸ் பண்ணுவதால் ஹோட்டல் இண்டஸ்ட்ரி சங்கத்தில் இருக்கிறார்.

பா.ஜ.க. தலைவராக நயினார் வருவதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை யைச் சேர்ந்த ஜுடிசியல் கிருஷ்ணமூர்த்தி இருவரும் பெரிதும் உதவியிருக்கிறார்கள். பா.ஜ.க. தலைவர் பதவியைக் கைப்பற்ற நயினாருக்கு நிதி தேவைப்பட்டது. தேவையான நிதியை குறிப்பிட்ட சங்கத்தினர்தான் திரட்டித் தந்துள்ளனர்.

அதனால் சங்கத்தினரின் வேண்டுகோளின்படி, அமைச்சர் நேருவை பாதுகாக்க களத்தில் குதித்துள் ளார். இது தொடர்பாக, சங்கத்திற்கும் நேருவிற்கும் நெருக்கமான ரமேஷ் என்பவரிடம் நடந்த உரையாடல் களையும் கைப்பற்றியுள்ளது அமலாக்கத்துறை. நேருவுக்கு ஆபத்து அவ ருக்கு நெருக்கமான வர்களால் தான் என்கின்றனர்.