ஆன்லைன் ரம்மியால் பணத்தையெல்லாம் தொலைத்து, இறுதியாக உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிவரு கிறது. கடந்த சில தினங்களுக்குமுன், மணப்பாறை இரயில் நிலையத்துக் கருகே கீரைத்தோட்டம் என்னும் பகுதியிலுள்ள இரயில் தண்டவாளத் தில் இளைஞர் ஒருவர் உடல் துண்டாகிக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. திருச்சியிலிருந்து சென்ற இரயில்வே போலீஸார் விசாரித்ததில், அந்த இளைஞர், மணப்பாறை பேருந்து நிலைய சுகாதார வளாகத்தில் பணியாற்றி வரும் ரவி என்பவரது மகன் என்பது தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியம், மலை யாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவியின் மூத்த மகன் சந்தோஷ். ரவி மணப் பாறை பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி காட்டு வேலைக்கு செல்வார். சந்தோஷ், தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.இ. படித்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளை யாட்டை கடந்த 6 மாதத்துக்குமுன் விளையாடப் பழகியவர், முதலில் பணம் வருவதுபோல் தெரிந்ததால் ஆர்வமாகத் தொடர்ந்து விளையாட, கொஞ்சங்கொஞ்சமாக பணத்தை இழக்கத் தொடங்கி, அந்த விளை யாட்டுக்கு அடிமையாகி, நண்பர்களி டம் கடன் வாங்கி விளையாடியும், வீட்டில் நகை, பணம் எடுத்துச் சென்று, அதன்மூலம் விளையாடியும் இழந்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் சந்தோஷ்.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, அவரது வீட்டில் மோதிரத்தைக் காணவில்லையென செல்போனில் சந்தோஷிடம் பெற்றோர் விசாரிக்க, அவரோ கோபத்தோடு, நகை, பணத்தோடு வருகிறேனெனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். அடுத்த நாள், புதன்கிழமை இரவு 9.50 மணியளவில், “"என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணத்தை இழந்ததால் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்'’என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். அதன்பின் சந்தோஷை பெற்றோரால் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில்தான் சந்தோஷ் இரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். சந்தோஷ் உடலைக் கைப்பற்றி யுள்ள திருச்சி இரயில்வே போலீஸார், உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்தே பல்வேறு ஆன்லைன் கேம்கள் புதிது புதிதாக வந்துகொண்டேயிருக் கின்றன. எனவே பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளோடு நட்புறவோடு பேசிப்பழகுவதும், கண்காணித்து, தேவைக்கேற்ப நெறிப்படுத்துவதும் நல்லது. அப்போதுதான் ஏதேனும் தவறான வழியில் செல்ல நேர்ந்தால் அதனைத் தொடக்கத்தி லேயே சரிசெய்ய முடியும். தற்போது ஆன்லைன் சூதாட்டத் தைத் தடை செய்வதற்கான தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தந்துள்ளதையடுத்து, இப்போது சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டு முடிவுக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.