கொடநாடு கொலை வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக சேலம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள காவல்துறை யினர் தெரிவிக்கிறார்கள். இவ்வழக்கை ஏற்கெனவே விசாரித்த ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம். கோவை மண்டலத்தின் ஒரே ஒரு புள்ளியில் கொடநாடு தொடர்பான அனைத்து விவரங்களையும் இணைத்தது. அது சேலம் இளங்கோவன்.

ff

கொடநாடு கொள்ளையில் ஈடுபட்ட கேரள குற்றவாளிகளிடம் நேரடியாகப் போய், ‘எடப்பாடிக்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுங்கள்’ என வலியுறுத்தினார் இளங்கோவன். இது தவிர, ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட விபரம் வெளியில் வந்தவுடன், அதே குற்றவாளிகளை அழைத்து வந்து அவர்களை போலீசிடம் ஒப்படைத்தவர் சேலம் இளங்கோவன். இவரது வீடு அமைந்துள்ள சேலம் புத்திரக்கவுண்டன் பாளையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூர் பகுதியில் தான் கனகராஜ் கொல்லப்பட்டார். அந்த கனகராஜிடம், கொடநாட்டில் கொள்ளையடித்துக் கொண்டுவந்த சொத்து ஆவணங்களைப் பெற்று எடப்பாடியிடம் ஒப்படைத்தவர் இந்த இளங்கோவன்தான்.

இப்படிப்பட்ட இளங்கோவனை கொடநாடு வழக்கை மறுவிசாரணை செய்யும் ஐ.ஜி. சுதாகர் தலைமை யிலான டீம் இரண்டு முறை நேரடியாக விசாரணை செய்தது. கொடநாடு கொள்ளை வழக்கில் தனியாக கனகராஜ் கொலைவழக்கு என புதிய வழக்கை பதிவு செய்து கனகராஜின் சகோதரர்கள் தனபால் மற்றும் ரமேஷை கைது செய்தது. கனகராஜ் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரின் காரில் மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இறந்தார்.

Advertisment

kodanadu

அவர் இறப்பதற்கு முன்பு ஆத்தூருக்கும் சின்ன சேலத்துக்கும் இடையேயான சாலைப் பகுதியில் ஒரு சாராயக் கடையில் அவரது சகோதரர் ரமேஷுடன் அமர்ந்து குடித்துள்ளார். கனகராஜ் சாகும் வரை அவரது மரணத்தை இன்னொரு காரில் அமர்ந்து ரமேஷ் பார்த் துள்ளார்.

கேரளத்துக் குற்ற வாளிகளை போலீசில் ஒப்படைக்க கொண்டு வரும் நிகழ்வு அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசனுக்குச் சொந்த மான ஒரு குடோனில் நடைபெற்றது. அப்பொழுதே “கனகராஜ் எங்கே என குற்றவாளிகள் கேட்க, அவனை எங்களது ஆட்கள் சேலம் ஆத்தூரில் பார்த்துக் கொள்வார்கள்” என்று இளங்கோவன் தரப்பு சொல்லியிருக்கிறது.

கனகராஜ் கொலை வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரிக்கப் படும்போது சேலம் இளங்கோவன் கைது செய்யப்படுவார் என செய்திகள் வந்தது. ஆனால், அந்த வழக்கு “டேக்ஆப்” ஆகவில்லை. கொடநாடு கொலை வழக்குடன் அந்த வழக்கில் இணைக் கப்பட்ட குற்றவாளிகளான ரமேசும் தனபாலும் ஜாமீனில் வெளிவந்தனர். தற்பொழுது ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம் கொடநாடு கொலை வழக்கில் மொத்தம் 316 சாட்சியங்களை விசாரணை செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையைக் கொண்டு சென்றுள் ளது.

Advertisment

kodanadu

ஐ.ஜி. சுதாகர் நடத்திய விசாரணை பற்றிய விவரங்கள், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதால் ஒவ்வொன்றாக வெளியே வரத்தொடங்கியது. சுதாகர் டீமில் எடப்பாடிக்கு மிக நெருக்க மான அதிகாரிகள் பலர் இருந்த னர். நீலகிரி மாவட்ட தனிப்படை இன்ஸ்பெக்டரான சுபாஷிணி டி.எஸ்.பி.யாக இருந்த சுரேஷ், டி.ஐ.ஜி.யாக இருக்கும் முத்துசாமி போன்றோர் எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்தனர்.

இவர்கள், விசாரணையில் இந்த டீம் கண்டுபிடிக்கும் தகவல்களை எடப்பாடி தரப்பிடம் கொடுத்து வந்தனர். அதனால் “தன்னை நோக்கி விசாரணையின் கரங்கள் நீளாமல்” எடப்பாடி பார்த்துக்கொண்டார்.

டி.எஸ்.பி. சுரேஷின் மனைவி யும், அமைச்சர் வேலுமணியின் மனைவியும் வகுப்புத் தோழிகள். இந்த வழக்கு உச்சகட்டத்தில் இருக்கும் போது வாரம் ஒருமுறை இவர்கள் சந்தித்தார்கள். இதுபற்றி செய்திகள் மீடியாக்களில் வந்த பிறகு டி.எஸ்.பி. சுரேஷ் மாற்றப்பட்டார். “இந்த வழக் கில் எடப்பாடியை நெருங்க விடாமல் போலீஸ் டீம் ஒன்று வேலை பார்த்ததற்காக அந்த டீமுக்கு ஏராளமாகச் செலவு செய்தார் எடப்பாடி என்கிறார்கள்’காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

dd

அவர்களிடம், “"கொடநாடு கொள்ளை வழக்கில் ஐ.ஜி. சுதாகர் டீம் கண்டுபிடித்தது என்ன?''’எனக் கேட்டோம்.

அவர்கள், “சேலம் இளங்கோவன், சஜீவன், அனுபவ் ரவி, சஜீவனின் தம்பிகளான சுனில், மாஜி அமைச்சர் வேலுமணி, வேலுமணியின் சகோதரர் அன்பரசன் உட்பட 26 பேரை புதிய குற்றவாளிகளாக இணைக்க சுதாகர் திட்டமிட்டிருந்தார். அத்துடன் காவல் துறை அதிகாரிகளான அப்பொழுது நீலகிரி மாவட்ட எஸ்.பி.யான முரளி ரம்பா, ஐ.ஜி. பாரி, கலெக்டர் சங்கர் மற்றும் கொடநாடு பங்களா மேனேஜர் ஆகியோரையும் குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்க்கத் திட்ட மிட்டிருந்தார். கொடநாட்டில் கனகராஜ் மட்டும் கொள்ளையடிக்க வில்லை. கனகராஜ் கொள்ளை யடித்துவிட்டுப் போன பிறகு அங்கிருந்த கண்டெய்னர்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் இருந்தது. அந்த ஒரு லட்சம் கோடியுடன், தங்கத்திலான குருவாயூரப்பன் சிலையும் போலீஸ் அதிகாரி களின் துணையோடு இன்னொரு கொள்ளையும் நடத்தப்பட்டுவிட்டது.

இவையெல்லாம் ஐ.ஜி. சுதாகருக்குக் கிடைத்த விவரங்கள். இந்த விபரங்களில் இருந்துதான் சி.பி.சி.ஐ.டி. தனது விசாரணை யைத் தொடங்கவேண்டும்

என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். அப்படி விசாரிக்கும்போது புதிய கொள்ளையர்கள் சிக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

________________

இறுதிச்சுற்று

dd

அக்டோபர் 10-ஆம் தேதி, திங்களன்று, ம.தி.மு.க.வின் சூளுரை நாள் நிகழ்ச்சி, எழும்பூரில் உள்ள தலைமையகமான தாயகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் மாநில சுயாட்சிக்காக, தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட, சகோதரத்துவம் தமிழகத்தில் தழைத்தோங்கிட, தரணிவாழ் தமிழர் நலனுக்கு தோள் கொடுத்திட, சுதந்திரத் தமிழீழம் அமைந்திட, அரசியலில் நேர்மையும் பொதுவாழ்வில் தூய்மையும் நிலைபெற்றிட, தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் உறுதி கொண்டு உழைப்பதற்கு அர்ப்பணித்துக் கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

dd

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ், அக்டோபர் 10, திங்களன்று, உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். முலாயம்சிங் யாதவ் உத்தரபிரதேச முதல்வராக மூன்றுமுறை பதவி வகித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் புகழ்பெற்றவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தைக் காக்கப் போராடிய முக்கிய படைவீரர்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.