உடல் ஊனமுற்றோர் என்று அழைப்பது அவர்களின் ஊனத்தை சுட்டுவதாக இருப்பதால் இனிமேல் அவர்களை "மாற்றுத்திறனாளிகள்' என அழைக்க வேண்டுமென அறிவித்ததோடு, அவர் களின் நலவாழ்வுக்கான துறையை "மாற்றுத் திறனாளிகள் நலத்துறை' என்று மாற்றவும் செய்தார் கலைஞர்.
2016-ல் நாடாளுமன்றத்தில் மாற்றுத்திறனாளி களின் நலன் மற்றும் உரிமைக்காக இயற்றப்பட்ட சட்டம், 2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதில், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். கல்வி பெறுவதில் அவர்களது உரிமையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 21 வகையான வரையறை களைக் கொண்டுவந்தது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, கடந்த 2022-2023ஆம் ஆண்டு, திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி செலவில் 75 நபர்கள் பயன்பெறும் வகையில், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சிறப்பு இல்லங்கள் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டது. அதேபோல் தமிழக அளவில் அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனங் கள் மூலம் 235 இல்லங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு செலவினத்தொகையை 900 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/handicap_0.jpg)
75 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிக்கப்பட்ட வர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகுத் தண்டு வட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தோர் என 2,11,391 நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை யை 2,000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் அறிவித் தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் செலவில் நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும், வரும் காலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் இடைநிலை பராமரிப்பு மையங்களுக்கு "மீண்டும் இல்லம்' என்ற பெயரில் புதிய திட்டம் துவக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் அறிவித்தார்.
இப்படி பல்வேறு சலுகைகளை அரசு அறி வித்து நடைமுறைப்படுத்தினாலும் கூட, இது போன்று அரசு அறிவிக்கும் திட்டங்கள் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு போய் சேர்வதில் அதிக காலதாமதம் ஏற்படுவதாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் நம்மிடம் வேதனையுடன் தெரிவித்தனர். "மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அறிவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் திடீர் திடீரென மாற்றப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, மாற்றுத்திற னாளிகள் துறையின் அரசு செயலாளர் பதவியிலிருந்த நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே ஆண்டில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற குளறுபடிகள் சரிசெய்யப்பட வேண்டும். மேலும் 1,700 கோடியில் உலக வங்கி உதவியுடன் ரைஸ் திட்டம் என்ற முன்னோடி திட்டம் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும், படிப் படியாக மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அத்திட்டத்தின் செயல்பாடுகள், பலன்கள் குறித்து தற்போதுவரை விளக்கவேயில்லை.
கலைஞர் ஆட்சிக் காலத்தில், மாற்றுத்திறனாளி களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கி பணியில் அமர்த்துவதற்கான அர சாணை எண் 151 வெளி யிடப்பட்டது. இதன்மூலம் ஏராளமான மாற்றுத்திற னாளிகள் மாதம் பத்தாயிரம் என்ற தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட னர். அந்த அரசு உத்தரவில், இந்த பணியாளர்கள், 
இரண்டாண்டுகளுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப் பட்டு கால முறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டி ருந்தது. அந்த அறிவிப்பு இப்போதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியிலும் கிடப்பில் போடப்பட்டு, தற்போதைய ஆட்சியிலும் கிடப்பில் போடப்பட்ட தால் மாற்றுத்திறனாளிகள் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் போராட்டம் நடத்தினர். தற்போது தேர்தல் விதிமுறை உள்ளதால் தேர்தலுக்குப்பின் நடைமுறைப்படுத்தப்படும் என்று அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறுதி கூறப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுக்கு வந்தபின் கலைஞரின் உத்தரவு செயல்படுத்தப்படுமா எனக் காத்துக்கொண்டிருக் கிறோம்'' என்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.
அதேபோல் "மாற்றுத்திறனாளிகளை திரைப் படம், சின்னத்திரை, சமூக ஊடகங்களில் நையாண்டி செய்யக்கூடாதென்று சட்ட விதி உள் ளது. ஆனால் அதை கண்டிப்புடன் அரசு நடை முறைப்படுத்தாததால் மாற்றுத்திறனாளிகளைக் கேவலப்படுத்தும் காட்சிகள் சீரியல்களில் இடம்பெறுகின்றன. ஆனால் இதையெல்லாம் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி சீதாலட்சுமி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்ததற்கு 22.8.2023 அன்றே அதற்கான உத்தரவு வந்தும் தற்போதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதேபோல் பெ.கொல்லத்தங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரது மனைவி சத்தியகலாவிற்கும் 2.11.2023 அன்றே உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டும் தற்போதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் 9.1.2024 அன்று உத்தரவு வழங்கப்பட்டும் அரசு உதவித்தொகை கிடைக்க வில்லை. தேர்தலுக்கு முன்பே உத்தரவு வழங்கப் பட்டும் உதவித்தொகை கிடைக்காததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். தமிழக முதல்வர் தலையிட்டு, உதவித்தொகை உடனடி யாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள். எளியவர் களான மாற்றுத்திறனாளிகளின் குரல் தமிழக அரசை எட்டுமா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-05/handicap-t.jpg)