ங்கி உயர்ந்துநிற்கும் "பனைமரம்' உலகெங்கும் வாழும் தமிழர்களின் தேசிய மரமாக, பாரம்பரிய மர மாகப் போற்றப் படுகிறது. கடலூர் மாவட்டம் வேப்பூரிலோ, சாலை யோரம் இருந்த 40-க்கும் மேற்பட்ட பனைமரங்களை சமூக விரோதக் கும்பல் வெட்டி வீழ்த்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேப்பூர் - சேலம் சாலையோரம் சிறுநெசலூர் அருகே காப்புக்காடு பகுதிக்கு எதிரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீரோடை புறம்போக்கில் ஏராளமான பனை மரங்கள் வளர்ந்துள்ளன. கடந்த 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த பனைமரங்களை, ஒரு மர்ம கும்பல் வெட்டி வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

dd

Advertisment

உடனடியாக வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா, டி.எஸ்.பி காவியா, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த தும் மரம் வெட்டிக்கொண் டிருந்தவர்கள் தப்பியோடினர். பனை மரங்கள் வெட்ட பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி, மரம்வெட் டும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வழக்குப் பதிவுசெய்து பனைமரங்களை வெட்டியவர்கள் குறித்து 10 நாட்களுக்கும் மேலாக விசாரிக்கின்றனர்.

நாம் விசாரித்ததில், 'பனை மரங்கள் வெட்டப்பட்ட பகுதியில் வேப்பூர் ஜனனி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாள ரும், ரோட்டரி கிளப் நிர்வாகியுமான ஜி.எம்.தாசன் மற்றும் மாலிக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட செல்வந் தர்கள் கூட்டாக சேர்ந்து தனியார் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத் திடருந்து 17 ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளனர். கல்லூரி கட்டுமானப் பணிகளுக் காகவும், நெடுஞ்சாலை வரை கல்லூரி தெரியவேண்டும் என்பதற்காகவும், முகப்பை மறைக்கும் பனைமரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர்..

dd

இதுகுறித்து ஈர நிலம் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தமிழரசன் நம்மிடம், "நீர் நிலைகளின் காவலன் என அழைக்கப்படும் பனைமரங்களை எந்த காரணங் களுக்காகவும் வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். தனியார் நிலமாக இருந்தாலும் பனைமரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதிபெறுவது கட்டாயம். ஆனால் பட்டப்பகலில் நெடுஞ்சாலை ஓரத்தில் 40 பனைமரங்களை வெட்டுகிறார்கள். இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது''’என்றார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேப்பூர் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, “"சி.எஸ்.ஆர் போட்டிருக்கிறோம். மரம் வெட்டியவர்கள் தங்களது சொந்த இடத்திலிருந்த மரங்களைத்தான் வெட்டியதாக சொல்கிறார்கள். அரசு இடம் என வருவாய்த்துறை அறிக்கை கொடுத்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்''’என்றார்.

விருத்தாசலம் கோட் டாட்சியர் பழனியோ, “வேப்பூர் தாசில்தாரிடம் கேளுங்கள். அவருக்குத்தான் தெரியும்'' ’என்றார்.

வேப்பூர் தாசில்தார் மோகனிடம் கேட்டதற்கு, "எங்கள் தரப்பில் காவல்துறையில் புகார் கொடுத்த துடன், மாவட்ட ஆட்சியருக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுப்போம்''’என்கிறார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியனிடம் பேசி னோம். அவரோ, "சட்டமீறல் என்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சொல்லியுள்ளோம். விருத்தாசலம் சப்-கலெக்டர் (கோட்டாட்சியர்) விசாரணை செய்து வருகிறார். விசாரணையில் சட்டத்தை மீறிய செயல் என உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்''’ என்றார்.

பனை மரங்களை வெட்டியவர்களோ, "சொந்த நிலத்திலிருந்தவைகளைத்தான் வெட்டினோம். அது விதி மீறல் என்றால் அதற்குண்டான அபராதத்தை செலுத்திவிடுகிறோம்' என வருவாய்த்துறையினரிடம் கூறுகிறார்களாம். அவர்களுக்கு ஆதரவாக மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் சுகுணாவின் கணவர் சங்கர் உள்ளிட்ட ஆளும்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகளிடம் சமரசம் பேசுகிறார்களாம்.