அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு மாவட்டம் கஞ்சா, பான்பராக், குட்கா, மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை என சட்ட விரோத செயல்பாடுகளில் முன்னணி மாவட்டமாக இருந்தது. எஸ்.பி.யாக பொறுப்பேற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான டாக்டர் சசிமோகன் நேரடியாகவே அதிரடி ஆபரேஷனில் இறங்கினார்.

சென்ற மூன்று மாதத்தில் மட்டும் 500 கிலோ கஞ்சா, பல கோடி ரூபாய் பெறுமான பான்பராக், குட்கா போன்ற போதைப்பொருட்களை கைப்பற்றியதோடு அதை விற்பனை செய்பவர், ஏஜென்ட், எங்கேயிருந்து ஈரோட்டுக்கு இறக்குமதியாகிறது என்கிற ரூட்டை பிடித்து அதில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை சட்டப்படி கைது செய்தார். அதில் பலர் குண்டர் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

ss

சட்டவிரோத செயல்களில் அடுத்ததாக முக்கியமானது லாட்டரி விற்பனை. அதை கட்டுப்படுத்த எஸ்.பி. சசிமோகன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரளா போன்ற வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 89 நபர்கள் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளனர். மேற்படி சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருபவர்கள் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில், போலி யாக எண்களை வெள்ளைத் தாளில் எழுதி அது, வெளி மாநில லாட் டரி சீட்டுகள் என்றும், சில நபர்கள் அவர் களாகவே குலுக்கல் நடத்தி ஏழைத் தொழிலாளர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.

Advertisment

தடை செய்யப்பட்ட லாட்டரியை நேரடி யாகவோ, மறைமுகமாகவோ அல்லது வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாகவோ விற்பனை செய்வது மற்றும் ஏமாற்றுவது சட்டப்படி குற்றமாகும். அதேபோன்று தடை செய்யப்பட்ட லாட்டரிகளை வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுகிறது.

எஸ்.பி. சசிமோகன் தனக்கென புதிய போலீஸ் குழுவை உருவாக்கி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலேயும் எஸ்.பி.யின் ஸ்பெஷல் குழு முழுமையாக கண்காணித்து நேரடியாக எஸ்.பி.யின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி, கஞ்சா, குட்கா விற்பனைகள் முழுமையாகவே தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆட்சித் தலைமையின் எதிர்பார்ப்பை அமல்படுத்துவதுபோல் எஸ்.பி.யின் செயல்பாடு இருப்பதால் ஏற்கனவே லாட்டரி, கஞ்சா, குட்கா விற்பனையில் பல கோடிகள் சம்பாதித்த கிரிமினல் குழுக்கள் ஒன்றிணைந்து எஸ்.பி. சசிமோகனை ஈரோட்டிலிருந்து மாறுதல் செய்ய பெரிய தொகையுடன் பகீரத முயற்சியுடன் சென்னையில் முகாமிட்டுள்ளார்களாம்.

Advertisment